Saturday, 31 January 2009

வீரத்தமிழா நீ வாழ்க !

இந்த மாதத்தின்
இறுதிப்பதிவினை
இடுகை இடுவதற்கு எத்தனித்தபோது -

எனக்குள் ஓயாமல் எதிரொலித்துக்கொண்டிருக்கும் ஓர் மடலின் வரிகளும் வாசகங்களும்...... அதன் ஆழத்தை உணர்த்த... பகீரதப்பிரயத்தனதைக்காட்டிலும் உயர்ந்த, யாரும் எளிதில் செய்யத்துணியாத ஓர் வீரச்செயலில் தன்னை ஈடுபடுத்தி...
தன்னை
ஓர் வீரதமிழனாய் இம்மண்ணில் விதைத்துச்சென்ற கு.முத்துக்குமார் ... என்னுடைய பதிவின் நாயகனாய் ......


இதோ உனக்காக... இந்த எளியவளின் ஓர் சமர்ப்பணம் .....


கோழைகளை மட்டுமே பார்த்து வரும் இவ்வுலகம் எதிர்பாராமல் எதிர்கொண்ட வீரத்தமிழன் நீ !

தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்தமைக்கான அர்த்தத்தினை உணர்த்த உயிர்நீத்த உண்மைத்தமிழன் நீ !

உன் தியாகத்துக்கு முன் நீ வரைந்திட்ட உன் உள்ளக்குமுறல்கள் இவ்வுலகை சற்று உலுக்கித்தான் உள்ளன !

எனவேதான் எல்லா இடத்திலும் இன்று உன் பேச்சு.... (உண்மைத்தமிழர்களின்) மூச்சாய்க்கலக்கத்தொடங்கியுள்ளது !

"அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.
நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்"

என்றாய்....

இத்தனைதூரம் உன் எண்ணத்தில், நீ உறுதியாய் நின்று, உண்மைக்காக போராடியபோது...
நீ பிறந்த அதே தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்துவிட்டு .....
செயலால் உன்னளவுக்கு இல்லாவிட்டாலும்.... மனதாலும் பிரார்த்தனைகளாலும்
நானும் உன் பயணத்தில்.......!

(இறப்புகள் பல பார்த்தாயிற்று.... தொடரும் இந்த அவலத்தில் இன்னும் எத்தனை பேரோ ???) - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

முத்துக்குமாரின் முடிவை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.. என்றாலும்.. அவருடைய தியாகம் மகத்தானது.. இனியாவது தமிழினம் விழித்துக் கொள்ளட்டும்

கலை - இராகலை said...

///யாரும் எளிதில் செய்யத்துணியாத ஓர் வீரச்செயலில் தன்னை ஈடுபடுத்தி...
தன்னை ஓர் வீரதமிழனாய் இம்மண்ணில் விதைத்துச்சென்ற கு.முத்துக்குமார் ... ////

முத்துகுமார நீ இறக்கவில்லை ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பிறந்திருக்கிறாய்.

Shan Nalliah / GANDHIYIST said...

Great dedication!But Tamils shd have courage to live and fight on Mahathma Gandhi's ways!
Nobody shd die !We shd use creative diplomatic methods to win hearts and minds of Intl.community!

saisayan said...

very nice article.. really he is a legend

jeya said...

முதலில் உங்கள் பதிவுக்கு நன்றி...
நினைக்கையில் வேதனையைவிட வெட்கமாக இருக்கிறது, நாம் என்ன கிழித்து விட்டோமென்று..நமது உறவுகளுக்காக ஒரு இந்திய தமிழன் உயிரை தியாகம் செய்துள்ளான். இதை கேட்டவுடனே காலையில் வாடிவிட்டோம் ,இப்போதாவது புத்தியில் உறைக்காதவர்களுக்கு உறைக்கட்டும்.. அந்த வீர தமிழனுக்கும்,அவரது குடும்பத்துக்கும் நமது வணக்கங்களும் நன்றிகளும்....

ஹரிணி அம்மா said...

இத்தனைதூரம் உன் எண்ணத்தில், நீ உறுதியாய் நின்று, உண்மைக்காக போராடியபோது...
நீ பிறந்த அதே தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்துவிட்டு .....
செயலால் உன்னளவுக்கு இல்லாவிட்டாலும்.... மனதாலும் பிரார்த்தனைகளாலும்
நானும் உன் பயணத்தில்.......!///

உண்மையாகப்போரடி
தன்னுயிர்
நீக்கும்
நெஞசங்களே!!!
வாழ்க!!

Arul said...

Karthihai paandiyan sonnadhu pol muthukumarin mudivai niyaaya paduththa mudiyaadhu...Aaanal andha maa manidharim ennam and Thiyaaha sindhanai potra pada vendum

Anonymous said...

என்னுடைய பதிவின் நாயகனாய் ......
எங்கள் எல்லோரது நாயகனாக...

Anonymous said...

உன்களுக்கு கருத்துரை இடும்போது
\\மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க\\ என்று வருகிறது இதனை நீக்கிவிட்ட்டால் சுலபமாக கருத்துரை இடலாம் முடிந்தால் நீக்கி விடுங்கள்... கருத்துரை இட சுலபமாக இருக்கும்

மருத்துவ கலாநிதி வெ.நாகநாதன் said...

please obliterate this word verification [sol saripaarppu]

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

The "word verification" option enabled coz

it prevents automated systems from adding comments to blog, since it takes a human being to read the word and pass this step. If ever received a comment that looked like an advertisement or a random link to an unrelated site, then its a comment spam. A lot of this is done automatically by software which can't pass the word verification, so enabling this option is a good way to prevent many such unwanted comments. so thats why i had not removed it....

Dear friends pls bear and pls leave ur comments being a bit patience typing the verification words

thanks

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

LinkWithin

Blog Widget by LinkWithin