Thursday, 29 January 2009

மீண்டும் 'ச-சா'.. 'ச'னத் - 'சா'தனை நாயகன்

உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்ப்பவை விளையாட்டுக்கள் ! அப்படிப்பட்ட விளையாட்டுக்கள்ஆடுவோரையும்சரி, பார்ப்போரையும்சரி உற்சாகப்படுத்த என்றுமே தவறுவதில்லை.....

இலங்கையை பொறுத்தவரை விளையாட்டுக்களில் முதன்மை கிரிக்கெட்டுக்கே!

(என்னடா இவ..... ஆரம்பத்திலேயே அறுக்கிறாளே....அப்டீன்னு யோசிக்கிறவங்க மன்னிக்கணும் ..... சில விஷயங்களை அந்தந்த இடத்தில் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்.... எனவேபொறுத்துக்கொள்ளுங்கோ !)

விளையாட்டுன்னு சொல்லும்போதே எனக்குள்ளும் ஒரு உற்சாகம் ! காரணம் நானும் ஒருவிளையாட்டு வீராங்கனைதான் பள்ளியில் பயின்றபோது ..ஹி ஹி...
சிறுவயதில் சர்வதேச அளவில் பிரகாசிக்க ஆசைப்பட்டு பின் முழு இலங்கைக்குள்ளானபோட்டிகளுடன் மட்டுப்படுத்திக்கொண்டவள் ..... ஹும் இதைப்பற்றி இன்னொருநாள் பதிவிடுகிறேன் ...இப்ப விஷயத்துக்கு வருவோம்..

இன்றைய தினத்தை தன்வசப்படுத்திக்கொண்ட ஒருவர் பற்றி........(அதான் தலைப்புல படிச்சிருப்பீங்களே அவர்தான்....)

சரி....அவரைப்பற்றி சின்னதாய் ஒரு இன்ட்ரோ...

இலங்கை
த்திருநாட்டின் மாத்தறை மண்ணை தன் தாய் மண்ணாகக்கொண்டவர் !
பிறப்பு 1969 ஜூன் 30( இன்றுடன் வயது -
39 ஆண்டுகள் 212 நாட்கள்)

கிரிக்கெட்டுக்குள் காலடி வைத்தது -
1989
(
2009 டிசெம்பெர் 26 உடன் 20 ஆண்டுகள் நிறைவெய்தும்)

வயசெல்லாம் சொல்றீங்களே..ஏன் எதுக்குன்னு கேட்கிறீங்க...... புரியுது புரியுது...

அதாவது கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்படி எப்படியோ ஒவ்வொரு ஒவ்வொரு சாதனைகளை வீரர்கள் நிலைநாட்டுவாங்க... ஆனா நம்ம சனத்ஜெயசூரிய...காலத்தின் துணையோட ஒரு சாதனை நிலைநாட்டியிருக்காருன்னா பார்த்துக்கொள்ளுங்களேன் !
(சரி சரி மூக்கு மேல வச்சவிரல எடுங்க.... சொல்றேன் )

அந்த சாதனை.(கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய 2806ஆவது ஒருநாள்சர்வதேசப்போட்டியில்)
அதிக வயதில் (செஞ்சுரி)சதம் அடித்த வீரர் என்ற பெருமையை, தம்புள்ள மண்ணில் இன்று நடந்த (இந்தியாவுக்கு எதிரான) ஒரு நாள் சர்வதேசபோட்டியில் தன் வசப்படுத்தியுள்ளார் 'சனத்'.

இதுவரை காலமும் அந்த சாதனைக்குரியவராக இருந்தவர் இங்கிலாந்தை சேர்ந்த 'ஜெப் போய்கொட்'(முழுப்பெயர் ஜெப்ரி போய்கொட்)
இவர் தன் வயது 39 ஆண்டுகள் 51 நாட்களாக இருந்த போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 105 ஓட்டங்களை குவித்து, அதிக வயதில் சதம் அடித்த வீரர்
பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
ஆனால் இன்று
முதல் அந்த ஸ்தானம் சனத் வசம் !

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 13,000 ஓட்டங்களைக்கடந்துசச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்திலும் தன்னைநிலைநாட்டிக்கொண்டுள்ள இவர் இதுவரை 119 பிடிஎடுப்புகள், 311 விக்கெட்டுக்கள், 268 சிக்சர்கள் , 1450 பௌண்டரிகள் என தன்னுடைய திறமையை சகல துறையிலும் முடுக்கிவிட்டு மிடுக்குடன் வலம் வரும் நம்ம சனத் இன்னும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோமாக !


(
சனத் பற்றி.... நான் அவதானித்த + சேகரித்துக்கொண்ட தகவல்களைஉறுதிப்படுத்தித்தந்த நம்ம விளையாட்டுபையன் /
சிங்கிள்
சிங்கம் ....... மயுரனுக்கும் நன்றி !)

மீண்டும் ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை ........ப்ரியமுடன் டயானா...
(
மறந்து போச்சு .. எப்போதும் வானொலி நினைப்பாவே இருப்பதால்....இப்படிவந்திருச்சுங்கோ...ஹி ஹி ....:): )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

3 comments:

THILEEP-IN-PATHIVU said...

நீங்களுமா ........சொல்லவே இல்ல..! (ஒரு சர்வதேச வீராங்கனையை இழந்து விட்டது இலங்கை)......?முயற்சி செய்யலாமே .........!!

பிரபா said...

"கொளுத்தும்" வெயிலிலும் "வெளுத்து" காட்டினார் ..
என டயானா .
வாழ்த்துக்கள் .

Arul said...

asathitteenga dyena....super..

LinkWithin

Blog Widget by LinkWithin