Saturday, 28 February 2009

நண்பர்களுக்கு....

வலைப்பூவுக்கு வருகை தந்த நண்பர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். கடந்த நான்கு நாட்களாக பதிவை எதிர்பார்த்து வருகை தந்து ஏமாற்றத்தோடு திரும்பியதை எனக்கு புரிந்து கொள்ளக்கூடியதாயுள்ளது.

எமது சகோதர வானொலி - வெளிச்சம் பண்பலை முதல் வருட பூர்த்தியை முன்னிட்டு( 16.03.2009) சில பல வேலைகளில் குறிப்பாக தயாரிப்புபணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பதிவிட முடியாமல் உள்ளது. நாளை உங்களுக்காக நேரமொதுக்கி பதிவிட எத்தனிக்கிறேன்...

ஆஸ்கார் பதிவின் மீதிப்பதிவை எனக்கு ஞாபகப்படுத்தி பொறுமை காத்த அனைவருக்கும் நன்றி ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday, 24 February 2009

'ஆஸ்கார் நாயகனான இசைப்புயல்' - எல்லாப்புகழும் உனக்கே !

இது என் இசைநாயகனுக்காக(உலக ஞானம் காணத்தொடங்கிய வயது முதலே)

நேற்றே
இந்தப்பதிவினை நான் இட்டிருக்கவேண்டும் ஆனால் பிரார்த்தனைகள் காரணமாக முடியாமல்போனது......

என் உள்ளத்தின் எதிரொலிகள் உங்கள் உள்ளத்திலும்கூட எதிரொலித்திருக்கலாம்.
வாசித்துவிட்டு வாருங்கள் உங்கள் வரிகளோடு.....


இசையோடு வந்து, இசையோடு தவழ்ந்து, இசையை ஆத்மார்த்தமாக உணரத்தொடங்கிய என் ஒன்பதாவது வயதில், ஒய்யாரமாய் என் ஒவ்வொரு அணுவையும் உன் இசையால் வசியப்படுத்தி இன்றுவரை உன் இசைக்கட்டுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இசைப்புயலே இது உனக்காக...


இன்று உலகம் முழுக்க ஒரே நாமம் - அது
இசையினால் ஆஸ்கார் மீட்டிய இசைப்புயலின் நாமம்!

பசிக்காக பத்து வயதில் கீ- போர்ட் ஏந்திய கரங்களுக்கு
பலதரப்பட்ட ஏமாற்றங்களை ஏய்த்து போராட்டங்களைப் புறந்தள்ளி
பதவிசாய்க்கிடைத்தது இன்று ஆஸ்கார் எனும் பத்தியம்!

பல்லாயிரக்கணக்கான தமிழ் இசை உள்ளங்களும் சேர்ந்தே-உன்னை
பந்தமாயும் சொந்தமாயும் கொண்டாட
பல்திசையும் எதிரொலிக்கிறது இசைக்கும் தமிழர்களுக்கும்
தரணியில் நீ தேடித்தந்த புகழ் !

(அதையும் வழமை போலவே இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டான் அந்த நல்நெஞ்சக்காரன்....)


சின்ன சின்ன சாகசங்களை செய்துவிட்டு
மார்தட்டிக்கொள்ளும் மாந்தர்களுக்கு மத்தியில்.....
'சின்னச்சின்ன ஆசையுடன்' தேசிய அளவில் சிறகடித்து
தமிழ்த்திரை இசையின் தங்கமென தரம் குத்தப்பட்ட போதும்சரி,
தன் இசைப்பயணத்தில் மில்லியன் கணக்கான மக்களையும் இணைத்து
'தரம் என் இசையில் நிரந்தரம்' என்ற உன் மந்திரத்துக்கு ஏற்ப நாளுக்கு நாள்
புதுப்புது இசை நுணுக்கங்களை உத்திகளைப்புகுத்தி
புது இசைப்புரட்சி படைத்த போதும்சரி,
சர்வதேசத்தைத்தொட்ட விருதுகளை நீ தொட்டுதூக்கியபோதும்சரி,
நீ நீயாகவே இருந்திருக்கிறாய் ! இனியும் அப்படித்தான் .....

கணணி வித்தை காட்டியே நீ சாகசம் செய்கிறாய் என, உன்னை இழிந்த உள்ளங்களையும் இன்று உன் புகழ் பாட வைத்தாயே.....
அங்கே நிற்கிறாய் நீ !

எல்லோரும் சொல்கிறார்கள்...
"ஆஸ்கார் ரஹ்மானுக்கு பெருமை சேர்த்ததாம்"
இல்லை.......
ரஹ்மான் கரங்களுக்குள் புகுந்து கொண்டதால் ஆஸ்காருக்குத்தான் பெருமை பற்றிக்கொண்டது !
( ஹி ஹி ...வைரமுத்து மாதிரி கொஞ்சம் முயற்சி செய்தேனுங்கோ .....)

இவரைத்தொடர்ந்து இனி பட்டியலில் இணையப்போகும் உலகத்தமிழன் யார் ??
காத்திருக்கிறேன் ....


ஆஸ்கார் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்து எல்லோரையும் பரவசப்படுத்திய இசைப்புயல்


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday, 22 February 2009

ஓம் நமசிவாய !

"சிவாயநம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை"

இந்த அடிகளை வலியுறுத்தும் வண்ணம், 'சிவனே கதி' என தம் அன்பினால் அவன் அடி வணங்கும் பக்தகோடிகள், தம் ஊனுறக்கம் துறந்து, தம் உடல் பொருள் ஆவிதனை சமர்ப்பித்து, ஆன்ம தூய்மை வேண்டிநிற்கும் நாள்தான் இந்த மகத்தான மகா சிவராத்திரி!

ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி(மாத சிவராத்திரி) வந்தாலும்கூட மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வரும் நாளினையே நாம்
மகா சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். காலையில் நீராடி கோயில் ஏகி வழிபாடு செய்து சிவன் சிந்தனையில் நாள்முழுதையும் கடத்துவது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. மனதை கட்டுப்படுத்துவதென்பது இன்றைய இளம் சந்ததியினரிடம் மிககுறைவாகவே காணப்படுகிறது. எனினும் மன வலிமை கொண்டு அதை வெற்றி கொள்வதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
இரவு முழுதும் கண் முழிப்பதற்க்காக சினிமா படங்களை பார்ப்பதென்பது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.(எனக்கு அதில் சிறிதேனும் உடன்பாடில்லை) சிவன் நாமம் தாங்கிய பாடல்களை, பாமாலைகளை கேட்டும் , பஞ்சாட்சரத்தை ஜெபித்தும், மனத்தை சிவன்பால் செலுத்துவதே சாலச்சிறந்த வழியாகும்.

சிவனுக்குரிய விரதங்களில் மிகச்சிறப்பாக கருத்தப்படும் இவ்விரதநாளை, பல்வேறு புராணக்கதைகள் கொண்டு அதன் வலிமையை மேலும் வலுப்படுத்திய போதும்... இந்த நாளை சிறப்புற அனுஷ்டிக்கும் தத்துவமும் அதற்கான தாற்பரியமும் ஒன்றே !

சிறுவயதில் நான் படித்து அறிந்து கொண்ட சில கதைப்பின்னணிகள்....இவை

1) சிவன் பார்வதியை (இரண்டாம் முறையாக) மணந்த நாள்!


2) தேவர்களும் அசுரர்களும் அமுதைப்பெற பாற்கடலை கடைந்தபோது, வாசுகி எனும் பாம்பு உமிழ்ந்த நஞ்சை, தன் கண்டத்துக்குள் அடக்கி அருள் புரிந்த நாள் !


3) பிரம்மா - விஷ்ணு இருவரும், ஒளிப்பிழம்பின் அடி முடி தேடிய நாள் !


4) புலிக்குபயந்து வேடுவன் மரத்திலேறி, தான் தூங்காமல் இருப்பதற்காக வில்வம் இலை பறித்துப்போட்ட நாள் (மரத்தின் கீழ் லிங்கம் இருப்பதை அறியாமல்)

5) ஒரு சாபத்தை நீக்கும் பொருட்டு, ஆகாயத்திலிருந்து பூமிக்குள் கங்காதேவி பிரவாகமெடுத்த நாளும் அதை சிவன் தன் முடிக்குள் அடக்கிய நாளும் !


இப்படி இந்த மகத்தான நாளை மையப்படுத்தி இன்னும் கதைகள் ஏராளம்..ஏராளம்


'அன்பே சிவம்' எனும் தாரக மந்திரத்தை மொழியும் சைவம், தன்நெறி நின்றவர்களுக்கெல்லாம் சொல்லும் ஒரே விஷயம்
ஆன்மாவிற்கான பேரானந்தம் !

இப்பிறப்பின் பாவங்களை நீக்கி, ஆணவம் கன்மம் மாயையை கடந்து,
பாச பந்தங்களிலிருந்து விடுபட்டு, மீண்டும் பிறவா நிலை எய்தி, மோட்சத்துக்கு வழிகாட்டும் ஓர் புண்ணிய நாளாக விளங்கும் இந்நாளில், மனத்தால் சொல்லால் செயலால் சிவனை வழிபடும்போது, எல்லாம் கடந்த அந்த பரம்பொருளுடன் ஐக்கியமாகும் பாக்கியம் கிடைப்பதாக சைவர்களால் நம்பப்படுகிறது.


'மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 21 February 2009

ஆஸ்கார் அப்டீன்னா.....நாளை
பலரும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஒரு நாள்.. குறிப்பாக இசைப்பிரியர்கள்... ம்ம்ம்ம்ம் ... இன்னும் தெளிவாகச்சொன்னால்......
இசைப்புயல் பிரியர்கள்..... ரசிகர்கள் ஆவலோடு, பிரார்த்தனைகளோடு எதிர்பார்த்துக்காத்திருக்கும் நாள் !


எத்தனை
விருதுகள்.... உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதும், " ஆஸ்கார் போல் வருமா" ?? என்பதுதான் பலருடைய அசைக்கமுடியாத கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ம்ம்ம்

காரணம்.... திரையுலகம் எனும் கனவுலகத்துறையில், உலகின் முதல்தர விருதாக விளங்குவது இந்த ஆஸ்கார் விருதுகள் தான்!

திரையுலகின் ஒவ்வொரு கலைஞனதும் கலையாத கனவு இந்த ஆஸ்கார் என்று சொல்லும் அளவுக்கு ஓர் உன்னத அடையாளமாக அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்த ஆஸ்கார் வழங்கும் வைபவம்.... பிறந்து தவழ்ந்து வளர்ந்து..... 81ஆவது தடவையாக, நாளை ( 22.02.09 ), 'ஹாலிவுட்' இல்,
சாதனையாளர்களை எல்லாம் கௌரவப்படுத்தப்போகிறது.

இந்த ஆஸ்கார் விருதின் பின்னணி, வளர்ச்சி.... இவற்றில் புதைந்து கிடக்கும் விடயங்கள், சுவாரசியங்கள்...... உங்களில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்....
(எனக்கும்தான் தெரியாமல் இருந்தது ஆனால் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தின் பலனாக, அது தந்த தேடலின் பயனாக, இதோ பகிர்தல் ஆரம்பமாகிறது ....

'அகாடமி அவார்ட்ஸ்' ..... இதென்ன ஆஸ்கார் பற்றி சொல்லிட்டு வேற எதோ பெயர் சொல்றேன்னு நினைக்கிறீங்களா ??
'ஆஸ்கார்' என்பதன் உண்மையான ஆரம்பப்பெயர் 'அகாடமி அவார்ட்ஸ்"
(இதுக்கே மூக்கு மேல விரல வச்சா எப்படி ....இன்னும் இருக்கு தொடருங்க ....)

கலிபோர்னியா மாநிலம் இதன் தாயகம்.
1927 இல் 'த அகாடமி ஒப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்' என்ற அமைப்பின் ஸ்தாபகர்கள் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து கௌரவிக்கவிளைந்ததன் பலனாக உருப்பெற்று தலைவர், இணை உறுப்பினர், செயலாளர், பொருளாளர், இயக்குநர் என பலரின் கூட்டு முயற்சியுடன் தன்னை நிலை நாட்டிக்கொண்டது.

முதல் விருது வைபவம் - 1929 மே 16
இடம் - ஹாலிவுட் 'ரூஸ்வெல்ட் ஹோட்டேலில் (வெறும் 250 பேர் முன்னிலையில்) இடம்பெற்றது
விருதுகளின் எண்ணிக்கை - 15

முதல் வைபவம் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் கூட இரண்டாவது வருடத்தில் விருதுக்கான மவுசு அதிகரித்தது.
(அன்று முதல் இன்று வரை அப்படியே...!)
இந்நிகழ்வு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வானொலியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பப்பட்டது.
வழங்கப்பட்ட விருதுகளின் தொகை - 7
விருது வழங்கப்பட்ட துறைகள் - சிறந்த நடிகர் , நடிகை, படம், இயக்குநர், எழுத்து, ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு

சிறப்பு விருதுகள் பெற்றவர்கள் - சர்க்கஸ் படத்துக்காக 'சார்லி சாப்ளின்' மற்றும் பேசும் படத்துக்காக(த ஜாஸ் சிங்கர்) 'வார்னர் பிரதர்ஸ்'

ஆரம்பத்தில் இப்படி ஏழு துறைகளுக்கு விருது வழங்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்துறையின் ஒவ்வொரு அணுவிலும் அசைவிலும் சிறப்பாக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவிக்க முனைந்து அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இப்போது உங்களுக்கே தெரியும் .... 24 துறைகளில் இவ்விருதுகள் நங்கூரமிட்டுள்ளன. அவை ....

1) சிறந்த கதாநாயகன்
2) சிறந்த கதாநாயகி
3) சிறந்த துணை நடிகர்
4) சிறந்த துணை நடிகை
5) சிறந்த அரங்க வடிவமைப்பு
6) சிறந்த ஒளிப்பதிவு
7) சிறந்த உடையலங்காரம்
8) சிறந்த இயக்குநர்
9) சிறந்த செய்திப்படம்
10) சிறந்த குறும்படம்
11) சிறந்த படத்தொகுப்பு
12) சிறந்த அயல் மொழிப்படம்
13) சிறந்த ஒப்பனை
14) சிறந்த இசை
15) சிறந்த பாடல்கள்
16) சிறந்த திரைக்கதை (தழுவிய படம்)
17) சிறந்த திரைக்கதை (மூலப்படம்)
18) சிறந்த செய்திப்படம் (குறுஞ்செய்தி)
19) சிறந்த அனிமேஷன் படம்
20) சிறந்த ஒலிப்பதிவு
21) சிறந்த நிஜ ஒலிப்பதிவு (யதார்த்தத்தை ஒலிப்பவை )
22) சிறந்த் ஒளித்தொகுப்பு
23) சிறந்த காட்சியமைப்பு
24) ஒட்டுமொத்த சிறப்பு விருது


....ஷப்பா... இப்பவே கண்ண கட்டுதே

இன்று இது போதும் நாளை மீதிப்பதிவு ..
ஆஸ்கார் சிலை பற்றிய சுவாரசியத்தை அறிந்து கொள்ள காத்திருங்கள்
வானலையில் (சக்தியின் வெள்ளித்திரையில்....) அதை வலம்வரவைத்தபின் இப்பதிவின் தொடர்ச்சியாகவும் வரும்......

அதுவரை பொறுமை...... பொறுமை...... பொறுமை....... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 18 February 2009

“ஒத்துக் கொள்ளு ... நீதான்.............

அண்மையில் வந்த மின்னஞ்சல் ..... நண்பர் 'அன்பு' அனுப்பியது..
நாட்டுநிலைமை பற்றி கண்டும் கேட்டும்... இதயம் ரணகளத்தில் ரத்தக்கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தபோது... இந்த வேதனைகளின் மத்தியிலும் இதழோரம் புன்னகை தவழவிட்ட ஒரு மின்னஞ்சல் என்று கூட சொல்லலாம் ....

முடிந்தால் வாசித்து நீங்களும்.. கொஞ்சம் முயற்சி செய்ங்க சிரிக்க ......


அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது.
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...
வேறு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்
இன்னும் பல..... ஒண்ணும் ....முடியவில்லை....
புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது
அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....
எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........
பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....
நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமெரிக்கா காட்டுக்குள் போய்...
நாள்கள்.... மாதங்களாயிற்று... மாதங்கள்.... வருடங்களாயிற்று.
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத்திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவை கண்ட காட்சி.............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்
"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"
உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?
அதற்கு பன்றி
"இது பரவாயில்லிங்க... எனக்கு ஒரே ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25 வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............


நம் நிலையை எண்ணி வேதனையோடு.... விடைபெறும் உள்ளம் ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 13 February 2009

ஜிங்கிச்சா ஜிங்கிச்சா கலரு கலரு ஜிங்கிச்சா


என்னுடைய நண்பி ஒருத்தியின் நாட்குறிப்பை புரட்டியதில்(இன்னொருத்தர் டயரிய படிப்பது தப்புதான்.... ஆனா இது அவளா விரும்பித்தந்தது.... அவளோட கவிதைகளை படித்துப்பார்த்து கமென்ட் சொல்வதற்காக)
தெரியவந்த ஓர் குறிப்பினை உங்கள் பார்வைக்காகவும் விட்டுவைக்கிறேன்......... (நாளைய தினத்துக்கு உங்களுக்குத்தான் உதவப்போகுது)


*Wear WHITE if you are SINGLE AND LOOKING

*Wear GRAY if you are NOT INTERESTED IN RELATIONSHIPS/COMMITMENTS

*Wear RED if you are COMMITED AND HAPPY

*Wear BROWN if you are COMMITTED BUT YOU WANT OUT

*Wear BLUE if you are IN LOVE WITH YOUR FRIEND/LIKE SOMEONE IN THE OFFICE

*Wear YELLOW if you are DATING/INLOVE BUT NOT IN A RELATIONSHIP

*Wear GREEN if you are in a 3RD PARTY RELATIONSHIP

*Wear BLACK if you are BROKENHEARTED

*Wear STRIPES if you have MORE THAN ONE RELATIONSHIP

*Wear PINK if you are in SAME SEX RELATIONSHIP

*Wear ORANGE if you DIDN'T HAVE ANY RELATIONSHIP SINCE BIRTH

என்னா.... படிச்சு முடிச்சிட்டு இங்க என்ன பார்வை...... உங்க மனசாட்சிய கேட்டு பார்த்துட்டு இதையெல்லாம் ஒழுங்கா கடைபிடிங்க.......

அச்சச்சோ ....அதென்ன கையில... கல்.... ஆ ....
அம்மாடி நா இல்லங்கோ....
விடு ... ஜூட்... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 11 February 2009

ஈ மெயிலில் வந்த 'Lateral Thinking'

பக்கவாட்டில் என்னை சிந்திக்க வைத்த - மெயில் உங்களை மட்டும் சும்மா விட்டு வைக்குமா என்ன ...... ம்ம்ம் கம் ஆன் .... 1....2....3....


This puzzle is called Lateral Thinking.
Scroll down slowly and be honest to yourself.

Think like a wizard . . .

this is an example


man
Q1. ---------
board
Ans. = man overboardOkay, let's see if you've got the hang of it.
stand
Q2. ------------
i

Ans. = i UNDER-standOK . .

Got the drift ?

Let's try a few now and see

how you fare ?
Q3 /r/e/a/d/i/n/g/
Ans. = reading between the lines
Q4. r
road
a

dAns. = cross road


Not having a good day now, are you ?


Redeem yourself.Q5. cycle
cycle
cycleAns. = tri-cycle


Not easy to figure out ha!0
Q6. ---------
M.D.
Ph.D.


Ans. = two degrees below zero


C'mon give it a little thought! !knee
Q7. ------------
light
Ans. = neon light

(knee - on - light)U can prove u r smart by getting this one.ground
Q8. ---------------
feet feet feet feet feet feet

Ans. = six feet underground


Oh no, not again ! !Q9. he's X himselfAns. = he's by himself

Now u messing up big time.Q10. ecnalg
Ans. = backward 'glance'


Not even close! !Q11. death ..... life


Ans. = life after death


Okay last chance ..................Q12. THINK
Ans. = think big ! !And the last one is real
cool - - -

Q13.

ababaaabbbbaaaabbbababaabaaabbbb..


Ans. = long time no 'C'அச்சச்சோ.... நோ பீலிங் டா ....செல்லம்.....
உன்ன இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு .... போ போய் வேலயபாருடா கண்ணு ........

(புன்னகை உங்கள் பொன்நகை ......
அதை உங்களுக்கு அணிவித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே ....
மீண்டும் இன்னொரு வித்தியாசத்தை தேடி ....... ) - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 9 February 2009

BAFTA சிறுகுறிப்புகள்

இன்று 'பிரிட்டிஷ் பிலிம் அகாடமி' நடாத்திய 2008 இல் வெளியான திரைப்படங்களுக்கான BAFTA விருது வழங்கும் வைபவம் இனிதே நிறைவுபெற்று வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகவும் தமிழ் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவேளையில்
(ஏ. ஆர் . ரஹ்மான் BAFTA விருதை வென்றிருப்பதால்)

இந்த BAFTA பற்றிய நீங்க அறிந்த, அறியாத சில குறிப்புக்களை உங்களோடு பகிரும் நோக்கத்தில் ..... இப்பதிவு
(இவற்றைப்பற்றி முன்பே நான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் இவற்றை வெள்ளித்திரை நிகழ்ச்சிக்காக வைத்திருந்தபடியால்.... அந்த நிகழ்ச்சியில் தந்த பிறகே இங்கு பதிவிட நேர்ந்தது)

* இந்த BAFTA நிறுவப்பட்டது - 1947

* பிரிட்டிஷ் பிலிம் அகாடமி நிறுவப்பட காரணகர்த்தாக்கள் - David Lean, Alexander
Korda, Carol Reed, Charles Laughton, Roger Manvell


* இது 1958 இல் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் / இயக்குனர் சங்கத்துடன் இணைந்து "பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைக்கழகம்" என பெயர்பெற்று, 1976 இலிருந்து ஒரு பூரண கழகமாக செயற்படத்தொடங்கியது.

*தற்போது உலகளாவிய ரீதியில் சுமார் 6000 பேரின் பங்களிப்புடன் இது நடாத்தப்படுகிறது.

* பிரதான காரியாலயம் - லண்டன் 'பிக்கடில்லி' என்றாலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் கிளைகள் வியாபித்துக்காணப்படுகின்றன.

* BAFTA விருதின் சிறப்பு - முகமூடி அமைப்பு

* இந்த முகமூடி சிற்ப அமைப்புக்கு சொந்தக்காரர் - அமெரிக்கரான Mitzi Cunliffe

* 2007 இல் BAFTA அமைப்பு தன் 60 ஆவது ஆண்டைப்பூர்த்தி செய்தது.

அடுத்தமுறை யாராவது உங்கள பார்த்து BAFTA பத்திக்கேட்டா, இதை ஞாபகம் வச்சு சொல்லுங்கோ என்ன..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

BAFTA விருதுப்பட்டியல்எதிர்பார்த்தவாறு BAFTA விருதுப்பட்டியல் இன்று அதிகாலை 2 மணியளவில் கிடைத்தது. இம்முறை இந்த நிகழ்வில் உயர் நட்சத்திர அந்தஸ்த்துக்கு உரியது / உரியவர் என்று சொன்னால் அது


7 விருதுகளை சுவீகரித்துக்கொண்ட சிலம்டாக் மில்லியனர் மற்றும்
2 விருதுகளை சுவீகரித்துக்கொண்ட நடிகை 'கேட் வின்ஸ்லெட்'


BAFTA விருதுப்பட்டியல் உங்கள் பார்வைக்காகவும் இதோ :

Best film
Slumdog Millionaire

Best British film
Man On Wire

Leading actor
Mickey Rourke - The Wrestler

Leading actress
Kate Winslet - The Reader

Supporting actor
Heath Ledger - The Dark Knight

Supporting actress
Penelope Cruz - Vicky Cristina Barcelona

Director
Danny Boyle - Slumdog Milllionaire

Original screenplay
In Bruges - Martin McDonagh

Adapted screenplay
Slumdog Millionaire - Simon Beaufoy

Film not in the English language
I've Loved You So Long

Animated film
Wall-E

The Carl Foreman award for special achievement by a British director, writer or producer for their first feature film
Steve McQueen (Director/Writer) - Hunger

Music
Slumdog Millionaire - AR Rahman

Cinematography
Slumdog Millionaire - Anthony Dod Mantle

Editing
Slumdog Millionaire - Chris Dickens

Production design
The Curious Case of Benjamin Button - Donald Graham Burt, Victor J Zolfo

Costume design
The Duchess - Michael O'Connor

Sound
Slumdog Millionaire - Glenn Freemantle, Resul Pookutty, Richard Pryke, Tom Sayers, Ian Tapp

Special visual effects
The Curious Case of Benjamin Button - Eric Barba, Craig Barron, Nathan McGuinness, Edson Williams

Make-up and hair
The Curious Case of Benjamin Button - Jean Black, Colleen Callaghan

Short animation
Wallace And Gromit: A Matter of Loaf and Death - Steve Pegram, Nick Park, Bob Baker

Short film
September - Stewart le Marechal, Esther May Campbell


The Orange Rising Star Award (voted for by the public)

Noel Clarke

இன்னும் சில விடயங்கள் பற்றி பதிவிட வேண்டும் ஆனால் நித்திரை கண்ணைச்சுழற்றுவதன் காரணமாக மீதிப்பதிவினை இன்று மாலை எதிர்பாருங்கள் .....

அஆவ்வ் ........குட் நைட் - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 7 February 2009

நாளை BAFTA அவார்ட்

நாளை(08.02.09)BAFTA விருது வழங்கும் வைபவம் இடம்பெறவுள்ளது. கடந்த மாதமே விருதுக்குரிய பரிந்துரைகள் பற்றி கேள்விப்பட்டுருப்பீர்கள்.

இந்த
BAFTA என்பதன் விரிவாக்கம் என்ன என்று கேட்போருக்கான விடை

British Academy of Film and Television Arts


'பிரிட்டிஷ் அகாடமி பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்' அவார்ட்
அதாவது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சார்ந்த சிறப்பம்சங்களுக்காக வழங்கப்படும் விருது.

1947 இல் ஆரம்பித்து வருடா வருடம் இடம் பெரும் இவ்விருது வழங்கும் வைபவம் நாளை லண்டன் - ராயல் ஒபேரா ஹௌசில் இடம்பெறவுள்ளது.

எனவே இதைப்பற்றிய ஒரு ஞாபகப்படுத்தலுக்காகவே இக்குறும்பதிவு. இது பற்றி அறிந்திராதவர்களுக்கு BAFTA உத்தியோகபூர்வ இணையத்திலிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் உங்கள் பார்வைக்காகவும், அறிவுக்காகவும்...கீழே

The full list of nominations for the Orange British Academy Film Awards in 2009.

BEST FILM

 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Kathleen Kennedy, Frank Marshall, Ceán Chaffin
 • FROST/NIXON – Tim Bevan, Eric Fellner, Brian Grazer, Ron Howard
 • MILK – Dan Jinks, Bruce Cohen
 • THE READER – Anthony Minghella, Sydney Pollack, Donna Gigliotti, Redmond Morris
 • SLUMDOG MILLIONAIRE – Christian Colson

OUTSTANDING BRITISH FILM

 • HUNGER – Laura Hastings-Smith, Robin Gutch, Steve McQueen, Enda Walsh
 • IN BRUGES – Graham Broadbent, Pete Czernin, Martin McDonagh
 • MAMMA MIA! – Judy Craymer, Gary Goetzman, Phyllida Lloyd, Catherine Johnson
 • MAN ON WIRE – Simon Chinn, James Marsh
 • SLUMDOG MILLIONAIRE – Christian Colson, Danny Boyle, Simon Beaufoy

THE CARL FOREMAN AWARD

for Special Achievement by a British Director, Writer or Producer for their First Feature Film

 • SIMON CHINN (Producer) – Man On Wire
 • JUDY CRAYMER (Producer) – Mamma Mia!
 • GARTH JENNINGS (Writer) – Son of Rambow
 • STEVE McQUEEN (Director/Writer) – Hunger
 • SOLON PAPADOPOULOS, ROY BOULTER (Producers) – Of Time And The City


DIRECTOR

 • CHANGELING – Clint Eastwood
 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – David Fincher
 • FROST/NIXON – Ron Howard
 • THE READER – Stephen Daldry
 • SLUMDOG MILLIONAIRE – Danny Boyle

ORIGINAL SCREENPLAY

 • BURN AFTER READING – Joel Coen, Ethan Coen
 • CHANGELING – Joe Michael Straczynski
 • I’VE LOVED YOU SO LONG – Philippe Claudel
 • IN BRUGES – Martin McDonagh
 • MILK – Dustin Lance Black

ADAPTED SCREENPLAY

 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Eric Roth
 • FROST/NIXON – Peter Morgan
 • THE READER – David Hare
 • REVOLUTIONARY ROAD – Justin Haythe
 • SLUMDOG MILLIONAIRE – Simon Beaufoy

FILM NOT IN THE ENGLISH LANGUAGE

 • THE BAADER MEINHOF COMPLEX – Bernd Eichinger, Uli Edel
 • GOMORRAH – Domenico Procacci, Matteo Garrone
 • I'VE LOVED YOU SO LONG – Yves Marmion, Philippe Claudel
 • PERSEPOLIS – Marc-Antoine Robert, Xavier Rigault, Marjane Satrapi, Vincent Paronnaud
 • WALTZ WITH BASHIR – Serge Lalou, Gerhard Meixner, Yael Nahlieli, Ari Folman

ANIMATED FILM

 • PERSEPOLIS – Marjane Satrapi, Vincent Paronnaud
 • WALL•E – Andrew Stanton
 • WALTZ WITH BASHIR – Ari Folman

LEADING ACTOR

 • FRANK LANGELLA – Frost/Nixon
 • DEV PATEL – Slumdog Millionaire
 • SEAN PENN – Milk
 • BRAD PITT – The Curious Case of Benjamin Button
 • MICKEY ROURKE – The Wrestler

LEADING ACTRESS

 • ANGELINA JOLIE – Changeling
 • KRISTIN SCOTT THOMAS – I’ve Loved You So Long
 • MERYL STREEP – Doubt
 • KATE WINSLET – The Reader
 • KATE WINSLET – Revolutionary Road

SUPPORTING ACTOR

 • ROBERT DOWNEY JR. – Tropic Thunder
 • BRENDAN GLEESON – In Bruges
 • PHILIP SEYMOUR HOFFMAN – Doubt
 • HEATH LEDGER – The Dark Knight
 • BRAD PITT – Burn After Reading

SUPPORTING ACTRESS

 • AMY ADAMS – Doubt
 • PENÉLOPE CRUZ – Vicky Cristina Barcelona
 • FREIDA PINTO – Slumdog Millionaire
 • TILDA SWINTON – Burn After Reading
 • MARISA TOMEI – The Wrestler

MUSIC

 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Alexandre Desplat
 • THE DARK KNIGHT – Hans Zimmer, James Newton Howard
 • MAMMA MIA! – Benny Andersson, Björn Ulvaeus
 • SLUMDOG MILLIONAIRE – A. R. Rahman
 • WALL•E – Thomas Newman


CINEMATOGRAPHY

 • CHANGELING – Tom Stern
 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Claudio Miranda
 • THE DARK KNIGHT – Wally Pfister
 • THE READER – Chris Menges, Roger Deakins
 • SLUMDOG MILLIONAIRE – Anthony Dod Mantle

EDITING **

 • CHANGELING – Joel Cox, Gary D. Roach
 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Kirk Baxter, Angus Wall
 • THE DARK KNIGHT – Lee Smith
 • FROST/NIXON – Mike Hill, Dan Hanley
 • IN BRUGES – Jon Gregory
 • SLUMDOG MILLIONAIRE – Chris Dickens

**As there was a tie in this category there are six nominations

PRODUCTION DESIGN

 • CHANGELING – James J. Murakami, Gary Fettis
 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Donald Graham Burt, Victor J. Zolfo
 • THE DARK KNIGHT – Nathan Crowley, Peter Lando
 • REVOLUTIONARY ROAD – Kristi Zea, Debra Schutt
 • SLUMDOG MILLIONAIRE – Mark Digby, Michelle Day

COSTUME DESIGN

 • CHANGELING – Deborah Hopper
 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Jacqueline West
 • THE DARK KNIGHT – Lindy Hemming
 • THE DUCHESS – Michael O'Connor
 • REVOLUTIONARY ROAD – Albert Wolsky

SOUND

 • CHANGELING – Walt Martin, Alan Robert Murray, John Reitz, Gregg Rudloff
 • THE DARK KNIGHT – Lora Hirschberg, Richard King, Ed Novick, Gary Rizzo
 • QUANTUM OF SOLACE – Jimmy Boyle, Eddy Joseph, Chris Munro, Mike Prestwood Smith, Mark Taylor
 • SLUMDOG MILLIONARE – Glenn Freemantle, Resul Pookutty, Richard Pryke, Tom Sayers, Ian Tapp
 • WALL•E – Ben Burtt, Tom Myers, Michael Semanick, Matthew Wood

SPECIAL VISUAL EFFECTS

 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Eric Barba, Craig Barron, – Nathan McGuinness, Edson Williams
 • THE DARK KNIGHT – Chris Corbould, Nick Davis, Paul Franklin, Tim Webber
 • INDIANA JONES AND THE KINGDOM OF THE CRYSTAL SKULL – Pablo Helman, Marshall Krasser, Steve Rawlins
 • IRON MAN – Hal Hickel, Shane Patrick Mahan, John Nelson, Ben Snow
 • QUANTUM OF SOLACE – Chris Corbould, Kevin Tod Haug

MAKE UP & HAIR

 • THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON – Jean Black, Colleen Callaghan
 • THE DARK KNIGHT – Peter Robb-King
 • THE DUCHESS – Daniel Phillips, Jan Archibald
 • FROST/NIXON – Edouard Henriques, Kim Santantonio
 • MILK – Steven E. Anderson, Michael White

SHORT ANIMATION

 • CODSWALLOP – Greg McLeod, Myles McLeod
 • VARMINTS – Sue Goffe, Marc Craste
 • WALLACE AND GROMIT: A MATTER OF LOAF AND DEATH – Steve Pegram, Nick Park, Bob Baker

SHORT FILM

 • KINGSLAND #1 THE DREAMER – Kate Ogborn, Tony Grisoni
 • LOVE YOU MORE – Caroline Harvey, Anthony Minghella, Sam Taylor-Wood, Patrick Marber
 • RALPH – Olivier Kaempfer, Alex Winckler
 • SEPTEMBER – Stewart le Maréchal, Esther May Campbell
 • VOYAGE D’AFFAIRES (THE BUSINESS TRIP) – Celine Quideau, Sean Ellis

THE ORANGE RISING STAR AWARD

 • MICHAEL CERA
 • NOEL CLARKE
 • MICHAEL FASSBENDER
 • REBECCA HALL
 • TOBY KEBBELL

Outstanding British Contribution to Cinema

 • PINEWOOD STUDIOS AND SHEPPERTON STUDIOS

ACADEMY FELLOWSHIP

 • TERRY GILLIAM
பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைக் கழகம் (British Academy of Film and TV Arts) வழங்கும் இந்த விருதுகளுக்காக (சிறந்த திரைப்படம், அடாப்டட் திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, தயாரிப்பு வடிவமைப்பு, ஒலிப்பதிவு மற்றும் சிறந்த பிரிட்டிஷ் படம் ஆகிய பிரிவுகளில்) பரிந்துரை செய்யப்பட்டுள்ள 'சிலம்டோக் மில்லியனர்' விருதுகளைக்குவிக்குமா ?
பொறுத்திருந்து பார்ப்போம்.....

சரி .....
ஒருமாதிரி வாசித்து நிறைவுக்கட்டத்தை நெருங்கியவர்களுக்கு ......
நாளை சக்தியின் வெள்ளித்திரையிலும் இதுபற்றிய முக்கிய தகவல்களை தருவதற்காகவும் காத்திருக்கின்றேன் என்பதையும் அறியத்தந்து விருதுப்பட்டியலுடன் சந்திக்கும்வரை...... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

IMPORTANT FOR GIRLS AND LADIES

A girl at a party in the University of Colombo
was taken by 5 men,who according to hospital
and police reports, gang raped her before
dumping her at
Bus stand Bambalapitiya.
Unable to remember the events of the
evening, tests later confirmed the repeat rapes
along with traces of Rohypnol in her blood.

Rohypnol, date rape drug is an essentially a small sterilization pill.
The drug is now being used by rapists at parties to rape AND sterilize
their victims. All they have to do is drop it into the girl's drink. The
girl can't remember a thing the next morning, of all that had taken place
the night before..

Rohypnol, which dissolves in drinks just as easily, is such that the victim
doesn't conceive from the rape and the rapist needn't worry about having a
paternity test identifying him months later.
The Drug's affects ARE NOT TEMPORARY - they are PERMANENT.
Any female that takes it WILL NEVER BE ABLE TO CONCEIVE.

The weasels can get this drug from anyone who is in the
vet school /
university.

Believe it or not, there are even sites on the Internet telling
people howto use it.
Please let know everyone about this,especially girls.

Girls, be alert and careful when you're out and don't leave your drink unattended.
(added - Buy your own drinks, ensure bottles or cans received are Unopened
or sealed; don't even taste someone else's drink)
There was already been a report in Singapore of girls drink been Spiked by
Rohypnol.

[For guys - Please inform all your female friends and relatives]

FOR MORE INFORMATION -
http://www.streetdrugs.org/rohypnol.htm

http://www.brown.edu/Student_Services/Health_Services/
Health_Education/atod/od_rohypnol.htm
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 6 February 2009

'சாதனைத்தமிழன்' முரளிதரன் !


1992 ஆகஸ்ட் 28 ஆம்(பள்ளி இரண்டாம் தவணை விடுமுறை).... நான்காம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது....காரணம் இலங்கை கிரிகெட் அணியில் ஒரு தமிழன்(இருபது வயசு இளம்புயல்) முதல் முதலாக களம் இறங்கப்போகிறான் என்ற செய்தி கேட்டதிலிருந்து, ஒரு ஆவலில் எதிர்பார்ப்பில் அவனை பார்ப்பதற்காகவே எனது குறும்புத்தனத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, சமத்துப்பிள்ளையாக தொலைக்காட்சிக்குமுன் அமர்ந்து கொண்டேன். எனக்கு மிகப்பிடித்த விசுக்கோத்தான 'டிக்கிரிசினா' பக்கத்தில் இருந்து என்னை பார்த்து சிரிக்க... அதை எடுத்து கொறித்தவண்ணமே ஆட்டத்தையும் பார்த்தேன்......
முதல் முதலாய் அந்த முத்தையும் பார்த்தேன்........
ஒரு தமிழன் எமது அணியில் விளையாடுகிறான் என்று நினைத்தபோது ரொம்ப பெருமையாக இருந்தது. இன்றும் கூடத்தான்....

(பந்து விசும்போது அவர் காட்டிய (வாயை சுழிச்சு) முகபாவம் அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. நன்கு அவதானித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்)

இவர் களம் இறங்கிய இந்த கன்னி(முதல்) டெஸ்ட்போட்டி, ஆஸ்திரேலியா அணிக்கெதிராக கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்று சமநிலையில் முடிவடைந்தது. இந்தப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளைக்கைப்பற்றிய முரளியின் முதல் விக்கெட் Craig McDermott இனுடையது.
அவரை முரளி lbw முறையில் ஆட்டமிழக்க செய்திருந்தார்.

இப்படி தன் கிரிகெட் பயணத்தை ஆரம்பித்து அவ்வப்போது பல சாதனைகளையும் நிலைநாட்டி, பெருமை தேடிதந்துகொண்டிருகும் முரளி லேட்டஸ்டாக செய்த சாதனை (328 போட்டிகளில் விளையாடி) 503 விக்கெட்டுகளை சாய்த்து பெற்றுள்ள நம்பர் : 1 ஸ்தானம்.
இதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பாகிஸ்தான் நாட்டு 'வசிம் அக்ரம்' (356 போட்டிகளில் - 502 விக்கட்டுகள்)

இன்றைய தினம், கொழும்பு ஆர். பிரேமதாசா விளையாட்டு அரங்கில், இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில்
Gautham Gambhir
இன் விக்கெட்டை சரித்து இந்த சாதனையை புரிந்துள்ள முத்தையா முரளிதரனுக்கு அனைத்து விளையாட்டு ரசிகர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் !

சாதனைத்தமிழனே.....தொடரட்டும்..... உன் சாதனைப்பயணம் ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 4 February 2009

பணமுண்டானால் இடமுண்டு !இதென்ன
புதுமொழியா என கேட்போர் கொஞ்சம் விரிவாத்தான் படியுங்க ....!காசே தான் கடவுளப்பா..... அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா ......

யதார்த்தத்துடன் ஒன்றிப்போன இந்த அர்த்தம் பொதிந்த வரிகள்.... எத்தனை தூரம் உலகத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது .... உங்களுக்கே தெரியும் ..

பணத்தை வைத்துத்தான் எந்த ஒரு விடயமும் முன்னெடுக்கப்படுகிறது ....
(அதனால்தானே எல்லோரும் வேலைக்குப்போய் சம்பாதிக்கிறோம்..... )

அளவாய் சம்பாதித்து வாழும் போது வாழ்க்கை வசந்தமாகிறது ....
அதுவே பேராசையாக மாறும்போது வஞ்சம் தொடங்குகிறது !

ஒருவன் எந்தளவுக்கு சமூகத்தில் மதிக்கப்படுகிறான் என்பது பணத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது
(கல்வியறிவு, சமூகசேவை ....இவை எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அத்தோடு இவற்றுக்கான அளவுகோலும் இல்லை)

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" அப்டீன்னு சும்மாவா சொன்னாங்க

'அப்ப பணத்தை வைத்து என்னத்த பெருசா அப்படி தீர்மானிக்கிறாங்க' ?....
இப்படி கேட்போருக்கான விடையை நான் ஒன்னும் புதுசா கண்டுபிடிச்சு சொல்லப்போறதில்ல....
இருக்கிற ஒரு விஷயத்த ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த அம்மணியோட நோக்கம் !

கடந்த வருடம் 2008 பெப்ருவரி 11ஆம் திகதி (அதாவது உலகப்பொருளாதார நெருக்கடிக்கு முன்னர்) வெளியான பணக்காரப்பட்டியலில்...... வரிசையாக நெஞ்ச நிமிர்த்தி நின்றவர்களில் முதல் ஐந்து பேர் யார் யார்னு யாராவது கேட்டா சொல்லுவீங்களா ??

சொல்லக்கூடியவங்க இத்தோட இந்த பதிவை வாசிப்பதை நிறுத்திட்டு உங்களோட அலுவல பாருங்க.......

ம்ம்... ஹும்..... தெரியாதே அப்டீன்னு முகத்தை அப்பாவியா வச்சிட்டிருப்பவங்க....உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு உற்சாகமா தொடருங்க....

1) Warren Buffett - 78 வயதில் 62 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். Berkshire Hathaway என்ற காப்புறுதி நிறுவனத்தின் வாயிலாக தன் வருமானத்தை பெருக்கிக்கொண்டவர்.
2) Carlos Slim Helu - 68 வயதில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். மெக்சிகோ நாட்டைச்சேர்ந்த இவர் Telmex, América Móvil போன்ற தொலைதொடர்புடன் சம்பந்தப்பட்ட நிறுவங்களை நிறுவி, இவற்றின் வாயிலாக வருமானம் ஈட்டுகிறார்.
3) Bill Gates - உங்களுக்கு மிகப்பரிச்சயமானவர். Microsoft நிறுவன அதிபதி.
52 வயதில் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக இருப்பதோடு, தொடர்ச்சியாக 15 வருடங்கள் இந்த பணக்காரப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தவர். ஆனால் 2007இன் பின் வீழ்ச்சி கண்டிருந்தாலும், இவருக்குத்தான் மக்களின் இதயங்களில் முதல்இடம்.
4) Lakshmi Mittal - இந்தியரான இவர், 57 வயதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக வலம் வருபவர். வருமான வழி - Arcelor Mittal என்ற உருக்கு உலோக நிறுவனம் .

5) Mukesh Ambani - பலதரப்பட்ட வியாபாரப்பிரிவுகளை உள்ளடக்கிய நிறுவனம் Reliance Industries. இதன் மூலமாக ஈட்டப்பட்ட வருமானத்தின் அடிப்படையில், அதாவது சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக தன் 50ஆவது வயதில் திகழ்ந்துகொண்டிருக்கும் இவரும் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் கடந்த ஆண்டுக்குரிய கணிப்பு. இந்த ஆண்டு நிலை மாறலாம். அந்த மாற்றம் வரும்வரை காலத்துடன் சேர்ந்தே காத்திருப்போம்...00 இன் முதல் ஐந்து பணக்காரர்களை ஞாபகத்தில் நிலை நிறுத்திக்கொண்டே !

அதுசரி .....
உங்களில் யாராச்சும் முயற்சி பண்ணலாமே இந்த பட்டியலில் இடம்பிடிக்க....
அச்சச்சோ நான் ஜோக் அடிக்கல ....உண்மையாத்தான் கேட்கிறேன்

'மனமுண்டானால் இடமுண்டு' (பழமொழி பொய்க்காது )

அடுத்து வித்தியாசமா எதைப்பற்றி பதிவிடலாம் என்ற யோசனையோடு.....
நன்றி .... வணக்கம்..... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

LinkWithin

Blog Widget by LinkWithin