Monday 9 February 2009

BAFTA சிறுகுறிப்புகள்

இன்று 'பிரிட்டிஷ் பிலிம் அகாடமி' நடாத்திய 2008 இல் வெளியான திரைப்படங்களுக்கான BAFTA விருது வழங்கும் வைபவம் இனிதே நிறைவுபெற்று வரலாற்றில் மறக்கமுடியாத நாளாகவும் தமிழ் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவேளையில்
(ஏ. ஆர் . ரஹ்மான் BAFTA விருதை வென்றிருப்பதால்)

இந்த BAFTA பற்றிய நீங்க அறிந்த, அறியாத சில குறிப்புக்களை உங்களோடு பகிரும் நோக்கத்தில் ..... இப்பதிவு
(இவற்றைப்பற்றி முன்பே நான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் இவற்றை வெள்ளித்திரை நிகழ்ச்சிக்காக வைத்திருந்தபடியால்.... அந்த நிகழ்ச்சியில் தந்த பிறகே இங்கு பதிவிட நேர்ந்தது)

* இந்த BAFTA நிறுவப்பட்டது - 1947

* பிரிட்டிஷ் பிலிம் அகாடமி நிறுவப்பட காரணகர்த்தாக்கள் - David Lean, Alexander
Korda, Carol Reed, Charles Laughton, Roger Manvell


* இது 1958 இல் பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் / இயக்குனர் சங்கத்துடன் இணைந்து "பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலைக்கழகம்" என பெயர்பெற்று, 1976 இலிருந்து ஒரு பூரண கழகமாக செயற்படத்தொடங்கியது.

*தற்போது உலகளாவிய ரீதியில் சுமார் 6000 பேரின் பங்களிப்புடன் இது நடாத்தப்படுகிறது.

* பிரதான காரியாலயம் - லண்டன் 'பிக்கடில்லி' என்றாலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் கிளைகள் வியாபித்துக்காணப்படுகின்றன.

* BAFTA விருதின் சிறப்பு - முகமூடி அமைப்பு

* இந்த முகமூடி சிற்ப அமைப்புக்கு சொந்தக்காரர் - அமெரிக்கரான Mitzi Cunliffe

* 2007 இல் BAFTA அமைப்பு தன் 60 ஆவது ஆண்டைப்பூர்த்தி செய்தது.

அடுத்தமுறை யாராவது உங்கள பார்த்து BAFTA பத்திக்கேட்டா, இதை ஞாபகம் வச்சு சொல்லுங்கோ என்ன..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

2 comments:

butterfly Surya said...

நல்ல பதிவு. நன்றி. இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என நினைத்தேன்.

Simple & sweet.. Nice.

You got my mail id ..?

Muniappan Pakkangal said...

Simple information abt BAFTA awards.nandri.