Saturday 21 February 2009

ஆஸ்கார் அப்டீன்னா.....



நாளை
பலரும் எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஒரு நாள்.. குறிப்பாக இசைப்பிரியர்கள்... ம்ம்ம்ம்ம் ... இன்னும் தெளிவாகச்சொன்னால்......
இசைப்புயல் பிரியர்கள்..... ரசிகர்கள் ஆவலோடு, பிரார்த்தனைகளோடு எதிர்பார்த்துக்காத்திருக்கும் நாள் !


எத்தனை
விருதுகள்.... உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதும், " ஆஸ்கார் போல் வருமா" ?? என்பதுதான் பலருடைய அசைக்கமுடியாத கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ம்ம்ம்

காரணம்.... திரையுலகம் எனும் கனவுலகத்துறையில், உலகின் முதல்தர விருதாக விளங்குவது இந்த ஆஸ்கார் விருதுகள் தான்!

திரையுலகின் ஒவ்வொரு கலைஞனதும் கலையாத கனவு இந்த ஆஸ்கார் என்று சொல்லும் அளவுக்கு ஓர் உன்னத அடையாளமாக அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்த ஆஸ்கார் வழங்கும் வைபவம்.... பிறந்து தவழ்ந்து வளர்ந்து..... 81ஆவது தடவையாக, நாளை ( 22.02.09 ), 'ஹாலிவுட்' இல்,
சாதனையாளர்களை எல்லாம் கௌரவப்படுத்தப்போகிறது.

இந்த ஆஸ்கார் விருதின் பின்னணி, வளர்ச்சி.... இவற்றில் புதைந்து கிடக்கும் விடயங்கள், சுவாரசியங்கள்...... உங்களில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்....
(எனக்கும்தான் தெரியாமல் இருந்தது ஆனால் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்தின் பலனாக, அது தந்த தேடலின் பயனாக, இதோ பகிர்தல் ஆரம்பமாகிறது ....

'அகாடமி அவார்ட்ஸ்' ..... இதென்ன ஆஸ்கார் பற்றி சொல்லிட்டு வேற எதோ பெயர் சொல்றேன்னு நினைக்கிறீங்களா ??
'ஆஸ்கார்' என்பதன் உண்மையான ஆரம்பப்பெயர் 'அகாடமி அவார்ட்ஸ்"
(இதுக்கே மூக்கு மேல விரல வச்சா எப்படி ....இன்னும் இருக்கு தொடருங்க ....)

கலிபோர்னியா மாநிலம் இதன் தாயகம்.
1927 இல் 'த அகாடமி ஒப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்' என்ற அமைப்பின் ஸ்தாபகர்கள் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து கௌரவிக்கவிளைந்ததன் பலனாக உருப்பெற்று தலைவர், இணை உறுப்பினர், செயலாளர், பொருளாளர், இயக்குநர் என பலரின் கூட்டு முயற்சியுடன் தன்னை நிலை நாட்டிக்கொண்டது.

முதல் விருது வைபவம் - 1929 மே 16
இடம் - ஹாலிவுட் 'ரூஸ்வெல்ட் ஹோட்டேலில் (வெறும் 250 பேர் முன்னிலையில்) இடம்பெற்றது
விருதுகளின் எண்ணிக்கை - 15

முதல் வைபவம் அவ்வளவாக பேசப்படாவிட்டாலும் கூட இரண்டாவது வருடத்தில் விருதுக்கான மவுசு அதிகரித்தது.
(அன்று முதல் இன்று வரை அப்படியே...!)
இந்நிகழ்வு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர வானொலியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பப்பட்டது.
வழங்கப்பட்ட விருதுகளின் தொகை - 7
விருது வழங்கப்பட்ட துறைகள் - சிறந்த நடிகர் , நடிகை, படம், இயக்குநர், எழுத்து, ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு

சிறப்பு விருதுகள் பெற்றவர்கள் - சர்க்கஸ் படத்துக்காக 'சார்லி சாப்ளின்' மற்றும் பேசும் படத்துக்காக(த ஜாஸ் சிங்கர்) 'வார்னர் பிரதர்ஸ்'

ஆரம்பத்தில் இப்படி ஏழு துறைகளுக்கு விருது வழங்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்துறையின் ஒவ்வொரு அணுவிலும் அசைவிலும் சிறப்பாக பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் ஊக்குவிக்க முனைந்து அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இப்போது உங்களுக்கே தெரியும் .... 24 துறைகளில் இவ்விருதுகள் நங்கூரமிட்டுள்ளன. அவை ....

1) சிறந்த கதாநாயகன்
2) சிறந்த கதாநாயகி
3) சிறந்த துணை நடிகர்
4) சிறந்த துணை நடிகை
5) சிறந்த அரங்க வடிவமைப்பு
6) சிறந்த ஒளிப்பதிவு
7) சிறந்த உடையலங்காரம்
8) சிறந்த இயக்குநர்
9) சிறந்த செய்திப்படம்
10) சிறந்த குறும்படம்
11) சிறந்த படத்தொகுப்பு
12) சிறந்த அயல் மொழிப்படம்
13) சிறந்த ஒப்பனை
14) சிறந்த இசை
15) சிறந்த பாடல்கள்
16) சிறந்த திரைக்கதை (தழுவிய படம்)
17) சிறந்த திரைக்கதை (மூலப்படம்)
18) சிறந்த செய்திப்படம் (குறுஞ்செய்தி)
19) சிறந்த அனிமேஷன் படம்
20) சிறந்த ஒலிப்பதிவு
21) சிறந்த நிஜ ஒலிப்பதிவு (யதார்த்தத்தை ஒலிப்பவை )
22) சிறந்த் ஒளித்தொகுப்பு
23) சிறந்த காட்சியமைப்பு
24) ஒட்டுமொத்த சிறப்பு விருது


....ஷப்பா... இப்பவே கண்ண கட்டுதே

இன்று இது போதும் நாளை மீதிப்பதிவு ..
ஆஸ்கார் சிலை பற்றிய சுவாரசியத்தை அறிந்து கொள்ள காத்திருங்கள்
வானலையில் (சக்தியின் வெள்ளித்திரையில்....) அதை வலம்வரவைத்தபின் இப்பதிவின் தொடர்ச்சியாகவும் வரும்......

அதுவரை பொறுமை...... பொறுமை...... பொறுமை....... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

1 comment: