Sunday 1 March 2009

பேசாமல் பேசும் சிலையின் கதை - ஆஸ்கார் பகுதி இரண்டு


ஒரு வாரம் பொறுமை காத்த உள்ளங்களுக்கு என் நன்றிகள்

ஆஸ்கார் சிலை உருவாக்கம் பற்றிய சுவாரசியமான கதைக்காக காத்திருந்திருப்பீர்கள்..... எனவே அதிகம் அலட்டாமல் நேரடியா விஷயத்துக்கு வருவோமா....

அவார்ட் அகாடமி தொடங்கப்பட்டு விருது கொடுப்பதற்கு முடிசெய்தபின் இந்த விருதுக்கான அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ? என்ற கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து படம் வரையத்தெரிந்த உறுப்பினர்கள் தங்கள் கற்பனைக்கு தோன்றியவற்றையெல்லாம் வரைந்து தள்ளினர். இவற்றில் எம் ஜி எம் நிறுவன கலை இயக்குநர் செட்ரிக் கிப்போன்சின் சிலை அமைப்பு அனைவருக்கும் பிடித்துப்போக அது ஜோர்ஜ் ஸ்டான்லிக்கு வழங்கப்பட அதை அவர் சிலையாக்கினார். அதுதான் இன்றும் நாம் காணும் ஆஸ்கார் சிலை!

இதைவிட இந்த சிலைக்கு பெயர் வைக்கப்பட்ட கதைதான் மிகுந்த சுவாரசியமானது.

ஒருமுறை இந்த சிலை வடிக்கப்பட்ட போது அதை பார்த்த அன்றைய அகாடமி உதவி இயக்குநர் மார்கரெட் ஹெரிக் "இந்த சிலை என்னோட மாமா ஆஸ்கார் மாதிரியே இருக்கு" என்று கூற, இதைக்கேட்டோருக்கு அந்த பெயர் பிடித்துவிட்டது. சிலையை குறிப்பிடும்போதும் அது மிக இலகுவாக இருந்தபடியால், இந்தப்பெயர் அப்படியே நிலைத்தும் விட்டது.

மெல்ல மெல்ல அகாடமி விருது ... ஆஸ்கார் விருதானது.

இந்த சிலை பொதுவாக வெண்கலத்தால் வடிக்கப்பட்டாலும், இரண்டாம் உலகப்போரின் போது இவ்வுலோகம் கிடைக்காததால் சிலை செய்யப்பயன்படும் சுண்ணாம்பால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டு வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் பிரிட்டானியம் கொண்டும் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கார் சுவாரசியங்கள் தொடரும்..... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

kuma36 said...

//இந்த சிலை என்னோட மாமா ஆஸ்கார் மாதிரியே இருக்கு" என்று கூற, இதைக்கேட்டோருக்கு அந்த பெயர் பிடித்துவிட்டது//

ஆஹா ஆஹா அப்படியா சங்கதி ம்ம்ம் மேலும் சொல்லுங்க‌

Muniappan Pakkangal said...

Nandri Dyena for giving the info that Oscar is person's name & that name was selected at once.

Anonymous said...

Thanks for infor...

Anonymous said...

Very very useful stuff..
I dont know how u manage to blog all those stuff...

U R REALLY AMAZING

Sangeetha