Monday 23 March 2009

வெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல்:ராஜ்-கோட்டியும் இசைப்புயலும்!













நேற்று வெள்ளித்திரை நிகழ்ச்சி கேட்கத்தவறியவர்களுக்கான பதிவு இது! (பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் உங்களுக்காக, உங்கள் கேள்விக்கான விடையை தருவதற்காகத்தான் 26ஆம் திகதி வரை இந்தப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாதென்று இருந்த என் வைராக்கியத்தை தகர்த்து எறிந்துவிட்டு இதோ இப்போது இங்கே)

நேற்று நான் தொகுத்து வழங்கிய வெள்ளித்திரையில் இசைப்புயல் சம்மந்தப்பட்ட சர்பிரைஸ் காத்திருப்பதாக 'முகப்புத்தகத்தில்' குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று அறிந்துகொள்ள... அப்பப்பா .... ஏராளமான நண்பர்கள் முயற்சி செய்தனர். ஆனாலும் சர்பிரைசை சர்பிரைசாக வைத்திருக்கும் இந்த டயானா.. நேற்றைய நிகழ்ச்சிக்குமுன் யாரிடமும் அதைப்பற்றி மூச்சே விடலையே... ஹா ஹா..

நேற்று நிகழ்ச்சி கேட்கத்தவறிய, மறந்த, முடியாமல் போன நண்பர்கள் மீண்டும் அழைப்பு மேல் அழைப்பு..... முகப்புத்தகத்தில் குறுந்தகவல்..... எல்லாம் என்னத்துக்கு ??? அந்த இசைப்புயல் பற்றிய விஷயம் என்ன என்று கேட்க..
ஸ்..சபா.....முடியல....

சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.....

இசைப்புயல், இசையமைப்பாளராக தன்னை ரோஜா திரைப்படத்தின் வாயிலாக வெளிக்காட்டும் முன்னர்.. பல இசை மேதைகளிடம் பணியாற்றியமை உங்களுக்கு தெரியும்... முதலில் இசைஞானியிடம், பின்னர் தெலுங்கு இசையமைப்பாளர்களான ராஜ்- கோட்டியிடம்.

ராஜ்- கோட்டியிடம் இசைப்புயல் 8 வருடங்கள் ஒரு கீ-போர்ட் வாசிப்பாளராக பணியாற்றினார். இப்படி அவர் பணியாற்றி வந்தபோது, 1988 இல் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடித்த 'த்ரிநேத்ருடு' என்ற திரைப்படத்துக்கு ராஜ்-கோட்டி இசையமைத்தனர்.

இந்த இடத்தில்தான்... இசைப்புயலுக்கு இன்னுமொரு திருப்புமுனை...
அதாவது இந்தப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கான முழு இசை ஒருங்கிணைப்பை மற்றும் ஏற்பாட்டை இசைப்புயல் மேற்கொண்டிருந்தார்.முதன் முறையாக இசைப்புயல் ஒரு இசை ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளராக பணியாற்றியது இந்தப்பாடலுக்காகத்தான்.

இந்தப்பாடலை தான் நேற்று வானலையில் தவழவிட்டிருதேன்.

இந்த பாடலை இந்திய நண்பர்கள் குறிப்பாக தெலுங்கு நண்பர்கள் நிச்சயமாக செவிமடுத்திருப்பர். என்றாலும் நம் நாட்டை பொறுத்தவரை அதற்கான வாய்ப்பு இருந்திருக்க சாத்தியமில்லை. காரணம்... மிஞ்சி மிஞ்சிப்போனால் வேற்று மொழிப்பாடல்களாக (1988 காலப்பகுதியில்) ஹிந்தி மற்றும் ஒன்றிரண்டு மலையாள, அராபிய பாடல்கள் மட்டுமே தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டிருக்கும்.


இந்தப்பாடலை இப்போது கேட்கும்போது அது ஒரு பொக்கிஷமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. காரணம் இசைப்புயலின் திறமையை(இசை ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளராக) வெளிப்படுத்தும் ஒரு ஆரம்பக்களமாக இந்தப்பாடலும்கூட இருந்துள்ளது. இந்த அரிய பாடலை முதன் முறையாக உங்களைபோன்ற இசைப்புயல் ரசிகர்களை செவிமடுக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே(பெருமையும் கூட). அப்படி செவிமடுக்கத்தவறிய நண்பர்களுக்காக அடுத்தவார வெள்ளித்திரை அந்த பாடலை மீண்டும் சுமந்துவரும்.

இந்த பாடலை எனக்கு பெற்றுத்தந்த என் நண்பன் ரோஷானுக்கும் இந்த வேளையில் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்தப்பாடலை பற்றிய இன்னொரு முக்கியமான விடயம் இருக்கு.... அது அடுத்த பதிவில் தவழும்....

இவ்வளவு விஷயம் சொன்ன நீ ..... அந்த பாடல் எப்டி தொடங்குது ...என்று சொல்லலையே என யோசிக்கிற உங்க மனசு எனக்கு புரியாம இல்ல..

நிச்சயமாக அந்தப்பாடலையும் என்னுடைய அடுத்த பதிவுடன் இணைக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

12 comments:

Anonymous said...

avasara upload ahinum up to the standerd ah thandhirikiga... AWESOME WORK... enadhu aruwaiyill sikkiyirukaa vidin indha thahawal maylum poliwu pettrirukkum enbadhu enadhu ennam... arruwaiku warundhuhirean... ungal thahawal panikku en kannindha waalthukkal...

Anonymous said...

ya... thanks for the song...

Anonymous said...

A VERY RARE INFOMATION...

I WONDER HOW U MANAGE TO SEARCH SUCH VALUABLE FACTS....

ALL THE BEST

Anonymous said...

VARE VAA..... KALAKKUREENGA PONGA...

EPDIMAA UNNAALA MATTUM ITHELLAAM MUDIYUTHU....

ACHU-VICHU

Anonymous said...

hey u had typed in tamil..


i cant understand...:((((
but one thing i can gues that its abt the Musical Cyclone.....A.R.R
isnt it..???

cud u pls explain what u had mentioned....

Himesh Ragav/ Mumbai

Muniappan Pakkangal said...

AR.Rahuman had himself asociated with Rajkotti for 8 years & he composed his first individual scor when he was with him.It is new to me.I thought ARR was with Ilayaraja only b4 his ROJA. Raj & Kotti are 2 different persons,is is not?

RJ Dyena said...

Yes Muni U r ryt....A.R.R had done the whole Background score for the film "Nippu Ravva", when he was with 'Raj-Koti' Duo.

I too First thought that Raj-Koti is One person.But when I tried to search information for this Article, i found its not.And in the Wikipedia I found Information about KOTI only.

(If anyone who reads this article can send me abt Raj..It would be grateful)

For Ur Infomation.
(I wanted to giv this in my next Article..but...I thought it will be gud to metion it here as well)

At the 'Soamberi'Audio release Funcion, Rahman had said...
"When I left Ilayaraja's Troop all of a sudden, my family was highly worried abt my decision. But Im very thankful to RAJ-KOTI for their support, without which I wud not be able to build my Studio. I am very thankful to them"

so..Muni I think U got the answers for Your Questions from the above...

Priyamudan
Dyena

Anonymous said...

Dyana averkale

I am very surprise this news. I eager to know more news from Isai Pual ARR.

Pl. write more & more.
VVK
Chennai

Anonymous said...

Dyana averkale

I am very surprise this news. I eager to know more news from Isai Pual ARR.

Pl. write more & more.
VVK
Chennai

RJ Dyena said...

I also was surprised like u..VVK..
when i got this song n its information...

and im really very glad...that i had given something which was hidden fact..of A.R.R

Sayanolipavan said...

superb.. dyena

Arul said...

I too tried some web searches but found that it is one person namely Raj Koti..subsequently checked with a malayalee friend of mine (who is a music fanatic and also a amateur singer and he too confirmed that it is one person and the name is Raj Koti....