Thursday 5 March 2009

'கோப்பி'க்காதல்

என் விழிகளையும் இதயத்தையும் கனக்க வைத்த ஒரு காதல் கதை இது!

ஒரு களியாட்ட நிகழ்வில் தான் முதன் முதலாக அவன் அவளை காண நேர்ந்தது...
அவளுடைய துடுக்குத்தனமும் பண்பும் ஏன் அழகும் கூட, அவனை மட்டும் அல்ல அங்கு வந்திருந்த பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஆர்ப்பாட்டமில்லாத நம்ம ஹீரோ(அதாங்க இந்த கதையின் நாயகன்) எப்படியும் அவளோடு கதைத்து விட வேண்டும் என எண்ணித் துணிந்து, நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவன் அவளை அணுகி....
" என்னோடு ஒரு கப் காபி சாப்பிடுவீங்களா?" என்று கேட்க, அவளும் சற்று திகைத்தாலும் தன்னை சுதாகரித்து கொண்டு, சம்மதம் தர, அடுத்த நொடி இருவரும் மயான அமைதியை வலுக்கட்டாயமாக வரவழைத்து , காபி மேசையில் அமர்ந்தபடி......

எதோ ஒரு எண்ணத்தில், ஒரு வரட்டு தைரியத்தில், அவளை அழைத்துக்கொண்டு வந்திருந்தாலும், அந்த நேரத்தில் அவனால் தன்னிலையை வெளிப்படுத்த முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தபோது..... அவளாலும் அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் " நான் போகவா" என கேட்க...
சற்றும் எதிர்பாராமல் அந்த ஹோட்டல் வேய்டரிடம், "எனக்கு கொஞ்சம் உப்பு கொண்டு வந்து தாங்க... என்னுடைய இந்த கோபியில் கலந்து அருந்த" என்று சொல்ல, அங்கிருந்த அத்தனை பேரின் கேலிப்பார்வைக்கும் உள்ளானான் அவன்!

எல்லோரும் அவனை ஒரு விதமாய்ப்பார்க்க அவனும் ஒருமாதிரி தன்னை சுதாகரித்துக்கொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அவனுடைய இந்த செயலால் திகைத்துப்போன அவள் ஆர்வத்தோடு அதற்கான காரணம் கேட்க,

"என்னுடைய சிறுபிராயத்தில் எனது வீடு கடலுக்கு பக்கத்தில் அமைத்திருந்தது. கடல் தந்த அமைதி, அதில் நான் விளையாடிய பொழுதுகள், கடற்கரையில் அம்மா, அப்பாவுடன் கை கோர்த்து பதித்த தடங்கள்.. இவையெல்லாம் இன்னும் கூட என்னால் மறக்க முடியாதவை ..
கடல் காற்றின் உப்புச்சுவை கூட என் ரத்தத்தில் கலந்து... ஹும்... அது சொன்னால் புரியாது.... அந்த நினைவுகளை மறக்க முடியாமல்தான்.. தினமும் நான் அருந்தும் கோபியில் உப்பை கலக்கிறேன்.... நினைவுகளையும் சேர்த்தே சுவைப்பதற்காக....

அந்த இடத்தில் நான் இப்போது இல்லையே என்கிற கவலையை, என்னுடைய பெற்றோரை விட்டு பிரிந்த துன்பத்தை..... இந்த உப்பு கலந்த பானம் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது...."

என்றான்..... விழிகளில் கண்ணீர் துளிர்விட....

அவனுடைய இந்தப்பதில் அப்படியே அவள் உள்ளத்தில் ஆழப்பதிய, அவனை பார்த்து பரவசமும் பெருமையும் அவள் விழிகளில் பொங்கி வழிந்தன.. இப்படி
தன் சொந்த மண்ணை, இடத்தை, பெற்றோரை தூர இருந்து நேசிக்கும் அவனுடைய குணம் அவளுக்கும் பிடித்துப்போக... தன்னுடைய மன உணர்வுகளை, அவளை பற்றிய விடயங்களை அவனோடு அவளும் பகிர்ந்து கொண்டாள்...

நாளுக்கு நாள் மெல்ல மெல்ல ... (இதுக்கு மேலயும் நான் சொல்ல வேணுமா)
நடப்பன எல்லாம் இனிதே நடந்து முடிந்தன...

ஆனால் அப்படிப்பட்ட பேரன்பனான அவனை, தன் மீது உயிராய் இருந்த, கருணையின் வடிவமாய் அவள் வாழ்க்கையில் வலம் வந்த, தனக்காகவே வாழ்ந்தவனை... காலத்தின் கொடுமையால் பிரிய வேண்டிய நிலை அவளுக்கு...

கன்ட்ரோல் ... கன்ட்ரோல் ....

அவனுடன் தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியையும் இப்போது அவள் மீட்டிப்பார்த்துகொண்டிருக்கிறாள்......

அவனை கரம் பிடித்த நாள் முதல்... அவனுக்கு பிடிக்குமே என்று ... அவன் விரும்பும் உப்பு காபி தான்.....தினமும்...

அவர்களுடைய வாழ்க்கை, உலகத்தில் யாருமே வாழ்ந்திராத ஒரு வசந்த வாழ்க்கையாக தான் இருந்தது... அவன் அவளை விட்டுப்பிரியும்வரை....(வண்ணமயமான 40 வருடங்கள்)

உலகைவிட்டு பிரியும்போது அவன் இறுதியாக அவளுக்காக எழுதிய கடிதம் இதுதான்...

என் பிரியமானவளே,

என்னை மன்னிப்பாயா ?

உன்னுடன் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் உனக்கு நான் உண்மையானவனாகவே இருந்துள்ளேன்...
ஆனால் ஒரு பொய்... ஒரே ஒரு பொய்யுடன் .... என் வாழ்நாள் முழுக்க உன்னுடன் கழித்திருக்கிறேன் ... அதற்காக என்னை மன்னிப்பாயா ?

அந்தப்பொய் ...

உன்னை முதன் முதலாக நான் சந்தித்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா ? நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உன்னுடன் எப்படி கதைக்க ஆரம்பிப்பது என என்னையே நான் 1000 கேள்வி கேட்டு, தடுமாறிக்கொண்டிருந்தபோது.....

உனக்கு தெரியுமா... உண்மையிலேயே என்னுடைய கோபியில் நான் கலப்பதற்காக கேட்க இருந்தது சீனியையே... ஆனா அதை வாய்தவறி 'உப்பு' என்றுவிட்டேன். நான் இருந்த நிலையில் மீண்டும் சரியாக 'சீனி' என்று கேட்க மனமும் இடந்தரவில்லை...
ஆனால் அந்த சம்பவமே எமது காதலின் ஆரம்பத்துக்கு வழிகோலும் என நான் கனவிலும் கூட நினைக்கவில்லை

அதன் பின் எத்தனையோ தடவைகள் உன்னிடம் இதைப்பற்றி சொல்ல வந்து, பின் பயந்து பின்வாங்கியதுமுண்டு....

இப்போது நான் இறக்கும் இந்த தருவாயில் பயப்பட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன் ... அதனால் உண்மையை மொழியவும் துணிந்தேன்.... உன்னிடம்தான் எதையும் மறைத்து எனக்கு பழக்கமில்லையே...

உண்மையிலேயே எனக்கு உப்பு காபி பிடிக்காது.. அந்த சுவை... அப்பப்பா..... கொடுமை
ஆனால் உன்னுடன் வாழ்ந்த என் வாழ்நாள் முழுதும் அதைத்தான் நான் சுவைத்திருக்கிறேன்.... எனென்றால் உன்னுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான நாட்களை விட எனக்கு வேறொன்றும் பெரிதல்ல....

உனக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம்.....
இனியும் இன்னொரு பிறவி இருக்குமென்றால், அந்தப்பிறவியிலும் நீ என்னுடன் இருப்பாயானால்... மீண்டும் அந்த உப்பு காபியை குடித்துக்கொண்டே வாழ சம்மதம்...

இப்படிக்கு,
என்றும் உன்னுடனேயே வாழத்துடிப்பவன்


வாசித்து முடித்தபோது அந்த மடல் முற்று முழுதாக அவளுடைய கண்ணீரால் நனைந்து போயிருந்தது.....
(என்னுடைய இதயமும் தான்.... அட இப்ப உங்க இதயமும் கூட)

இன்னொரு பொழுது அவளிடம் யாரோ கேட்டார்கள்....
'உப்பு காபி எப்படியிருக்கும்'?

அவளுடைய பதில் -
"அது வார்த்தைகளால் சொல்லமுடியாத அளவிற்கு இனிப்பானது" - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

17 comments:

Muniappan Pakkangal said...

Really a Great Story Dyena and the husband's final letter is fantastic.Uppu coffee kathai maathiri vera engaiyaavathu vera oru kathai nichaiyamaaha irukkum.We come across dedicated husbands.

Anonymous said...

Really a gud true love story.... ,,

Thambidurai said...

It seems somebody (may be Dyena) has experienced this kind of scenes! :) - Anyway its good that story narrated by using Slat :)-

Anonymous said...

Indha story'aii aangilathil email aaha padiththu irukkiren..aanal thamizhil padikkumpodhu kidaikkum suvai aangilathil illai..nandri dyena

Sayanolipavan said...

good love story.. oru poikaka daily uppu coffeya?

great love knw,

konjam feel panna vaithittinka akka.

kuma36 said...

ஆஹா அன்று வாசிக்கும் போது குட்டி கதையா இருந்தது இப்ப வளந்திட்டே!!!! சரி இப்ப‌
மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லிட்டு பிறகு வந்து வாசிகின்றேன்.

RJ Dyena said...

Story Vaasichu (Ennai Polave)Feel panni Comment poatta anaithu nanbargalukkum Nandrigal....

நட்புடன் ஜமால் said...

மகளீர் தின வாழ்த்துகள்

கோப்பியிலும்

உங்கள்

கண்ணீரிலும்

உப்பு

ஆனால்

இனிப்பாய் ...

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

ரொம்ப நல்ல கதையாக இருக்கிறது... நிறைய கதை புத்தகங்கள் படிப்பிங்கபோல...... cus

Anonymous said...

HEY U DID MAKE ME CRY....
ITS A VERY TOUCHY STORY....DA

INNUM EN KANGALIL EERAM KAYAVILLAI

SANGEETHA

SUBBU said...

wowwwwww நல்லா இருக்குதுங்க

Anonymous said...

உங்களின் இந்த பதிவு யூத் விகடன் இணையத்தில் வந்திருக்கிறது...வாழ்த்துக்கள்...

ஆதவா said...

என் நண்பர் ஷீநிசி இக்கதையை க்விதையாக எழுதியுள்ளார்...

மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி!!!

வந்தியத்தேவன் said...

ஆஹா அருமையான கதை. நிஜமா நடந்த கதையா இல்லை கற்பனையா? ஒரு சின்னக் குழப்பம் "கோப்பிக் காதல்" என தலைப்பை வைத்துவிட்ட மற்ற இடங்களில் எல்லாம் காபி என எழுதியிருக்கிறீர்களே?

Anonymous said...

WOW WHAT A GREAT STORY...

I LOVED IT VERY MUCH..

NAZEE

Anonymous said...

என்னமா எழுதுற கண்ணு ....

அம்மணிக்கு எழுத்து கை வந்த கலையாக்கும்!

பாசமுள்ள
'வீச்சு' வீரமணி/கோயம்புத்தூர்

அமுதன் said...

Very Nice