Wednesday 1 April 2009

வெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல்:ராஜ்-கோட்டியும் இசைப்புயலும்! - 2

(வலைப்பூவினுள் நுழைந்த புதியவர்கள்: பின்னோக்கி ஒன்றுவிட்ட பதிவினை வாசித்துவிட்டு இங்கு ஆஜர் ஆகுங்கள்)

ஏற்கனவே சொன்னபடி மீண்டும் வெள்ளித்திரையில் (கடந்த 29 ஆம் திகதி), இசைப்புயல், ஏற்பாட்டு ஒழுங்கமைப்பாளராக பணிபுரிந்த அந்தப் பாடலை ஒலிக்க விட்டிருந்தேன். ஏற்கனவே கேட்டவர்கள் தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர். கேட்காத பலரும்கூட, அன்று அந்த பாடலைக்கேட்டு அதைப்பதிவு செய்து வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தனர்.
உண்மையிலேயே எனக்கும்கூட ஆனந்தமாக இருக்கிறது. நான் ஆர்வப்பட்டு தேடிய விடயங்களை நீங்களும் கூட கேட்டு ரசித்து, மதித்து, அதை பத்திரப்படுத்திவேற வைத்திருக்கிறீர்கள். இது போதாதா எனக்கு......


இசை ஏற்பாடு- ஒருங்கிணைப்பு என்று சொல்லும் போது, ஒரு இசையமைப்பாளர் நியமித்து வைத்துள்ள பிரதான இசை வடிவினை மாற்றாமல் அதை இசைப்பதற்கு பொருத்தமான கருவிகளை கலைஞர்களை ஒழுங்கு செய்தல் மற்றும் ஒரு பாடலின் பகுதிகள் இசைக்கோர்வைகள் எப்படி எந்த ஒழுங்கில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தல் இவற்றோடு பாடலை இன்னும் மெருகு படுத்த தேவையான நுணுக்கங்களை உட்புகுத்தல் போன்றவற்றை உள்ளடக்குகிறது.

மேற்கூறிய பணிகளை மேற்கொள்ள இசைப்புயலுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் தன்னுடைய கைவண்ணத்தை எப்படி வெளிக்காட்டியிருக்கிறார் என்பதை நீங்களும் அனுபவிக்க 'த்ரிநேத்ருடு' திரைப்படத்தில் இடம்பெற்ற "ஹோ பாபா" என்று தொடங்கும் அந்தப்பாடல் உங்கள் செவிகளுக்காக... (இந்தப்பதிவில் இணைக்கப்படுகிறது)

இந்தப்பாடலை பற்றிய இன்னொரு விடயம்.
அதாவது இதன் ஆரம்ப இசைப்பகுதி(கவனிக்க: வரிகள் தொடங்கும்போது மட்டும்) ஏற்கனவே 1984 இல் வெளியான 'Harold Faltermeyer'ன் 'Axel F.(Beverly Hills Cop TV SERIES) ' என்ற பாடலின் இசையை தழுவி அமைந்துள்ளது. இதேபாடல் மீண்டும் 2005 இல் REMIX ஆக 'CRAZY FROG' இசை அல்பத்தில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இப்போது உங்கள் மதிப்பீட்டுக்காக இரு பாடல்களும் கீழே... கேட்டு... உங்க பொன்னான, பூவான, முத்தான, சொத்தான ...... கருத்துக்களையும் விட்டுட்டு போங்க....






- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

6 comments:

Nimal said...

i was listeing both sunday's cool for the songs,,

Arul said...

The efforts to bring all these stuff on to the table is very much commendable dyena :).

This shows that interest irundhaal edhayum achieve pannalaam :)

Anonymous said...

அரும்பொன்று மலர்கின்ற நிமிஷம் தன்னில் அருகிருந்து தரிசிக்க வேண்டும்; அந்தச் சிறுமடல்கள் விரிகின்ற சின்னச் சப்தம் செவிமடலில் விழ வேண்டும்; வைரமுத்து சொன்ன இன்பம் இன்று தெரிந்தது.அந்த அரும்பு மலர்ந்த நிமிடங்களை செவிமடுக்க தந்த வாய்ப்புக்கு நன்றி டயனா அக்கா.

Muniappan Pakkangal said...

The Drums beat differ Dyena.The starting voice coincides,ungal thedal thodarattum,vaazhthukkal.

Muniappan Pakkangal said...

The Drums beat differ Dyena,the starting voice resemble a little.Ungal thedal nalla irukku.

priyamudanprabu said...

//
வலைப்பூவினுள் நுழைந்த புதியவர்கள்: பின்னோக்கி ஒன்றுவிட்ட பதிவினை வாசித்துவிட்டு இங்கு ஆஜர் ஆகுங்கள்
////

அப்படியே ஆகட்டும்