Tuesday, 7 April 2009

பேருந்தில் நொந்தபோது !

தினமும் காலை வீட்டு அலுவல்களை முடித்துக்கொண்டு சுமார் 7 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டேன் என்றால் தொடர்ந்து ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலம் வரை பேருந்து.. பேருந்து... பேருந்து... தான். அதாவது 3 பேருந்துகள் மாறித்தான் பன்னிபிட்டியவை அடைய வேண்டும். இருப்பிடத்திலிருந்து அளுத் பாலம (புதிய பாலம்) வரை 187(ஜாஎல), பின் அதிலிருந்து பொரெல்ல வரை பயணிக்கும் 154 (அங்குலான)அல்லது 135(களனி), அதன் பின் தாலாட்டும் பேருந்து 174(கொட்டாவ).

ஒரு புதிய நாளை இனிய நாளாக எண்ணிக்கொண்டு பயணத்தை தொடங்கி, இந்த பேருந்துகளில் ஏறி இறங்கும் போது ச்சே ..என்னடா வாழ்க்கை இது என்றாகி விடும். இப்ப இத வாசிக்கும் உங்களில் பலர் பேருந்தில் பல கசப்பான அனுபவங்களுக்கு முகம் கொடுத்திருக்கலாம். அதோட சேர்த்து எனது அன்றாட அனுபவமும் இங்கே..சாராம்சமாக... ஆனாலும் கொஞ்சம் காரமாக...

நமது நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ விடயங்கள் கவனிக்க வேண்டியவர்களால் கவனிப்பாரற்று கிடக்கும் நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் குறிப்பிட்ட சில பேருந்து கண்டக்டர்கள், பயணிக்கு தர வேண்டிய மீதி 1 அல்லது 2 ரூபா(கூடுதலான சந்தர்ப்பம்) அல்லது சில வேளை அதற்கும் மேற்பட்ட தொகையினை தருவதில்லை. உதாரணத்துக்கு வத்தளையில் இருந்து (அளுத் பாலம) புதிய பாலத்துக்கு 9 ரூபா. மீதியாக 1 ரூபா தரவேண்டிய நிலையில், கண்டக்டர் சொல்லும் பதில் 'இறங்கும் போது வாங்கிசெல்லுங்க'. காலையில் பயணிக்கும் வண்டிகளில் எல்லாமே எம்மை நிலைப்படுத்தி 'பாலன்ஸ்' பண்ணி நிற்க முடியாத நிலையில் பயணிப்பவை. அந்தளவுக்கு அடைந்து கொண்டுதான் போகும்.(இதை நாங்க 'சமன் பஸ்' என்று சொல்லுவோம்: அதாவது ஒரு 'சமன் டின்னுக்குள்' எப்படி மீன் அடைக்கப்படுகிறதோ அதவிட மிக இறுக்கமாகவும் மூச்சுவிட முடியாத நிலையிலும் பஸ்சுக்குள் பயணிக்கும் நாங்களும்) புட் போர்டில் ஆள் நிறைந்து வழிந்தாலும் கூட ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று நிதானிச்சுதான் வண்டிகள் பயணிக்கும்(ஒரு சில விதி விலக்கானவை). இப்படிப்பட்ட வண்டிகளில் பயணிக்கும்போது ஒரு இறங்கு வழியில் இருந்து கண்டக்டர் நிற்கும் மற்றைய இறங்கு வழிக்கு செல்லமுடியாது.(செல்வதாயின் நடுவில் நிற்கும் எல்லோரையும் இடித்துதள்ளிக்கொண்டு தான் இறங்க வேண்டும்) சரி இறங்கி கண்டக்டர் நிற்கும் மற்றப்பக்க இறங்கு வழிக்குச்சென்று மீதியினை வாங்குவோமென்று நினைத்துப்போனால் கண்டக்டர் மீண்டும் உள்ளே போய்விடுவான். அதுக்கு பிறகு எங்க மீதியை வாங்கிறது... கோவிந்தா.... கோவிந்தா!

இது ஒரு புறமிருக்க பல நேரங்களில் கண்டக்டர் எங்களிடமே 1 ரூபா சில்லறை கேட்பது. இத கேட்கிறபோதுதான் இன்னும் கடுப்பாகும். காரணம் மூட்டை முடிச்சுகளோடு பேருந்தினுள் ஏறி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையோடு நின்று கொண்டு இருக்கும் போது 'ஒரு ரூபா தா', 'இரண்டு ரூபா தா' என்று உயிரை எடுப்பான். அதுவும் பல சந்தர்ப்பங்களில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மீதியை வைத்துக்கொண்டுதான் சில்லறைகளை எங்களிடம் கேட்டு நச்சரிப்பான். இல்லை என்று சொன்னால் அதுக்கு வேற எங்களையே ஏசுவான். இப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரு 'அந்நியன்' வரமாட்டானா என பல தடவை மனசுக்குள் கேட்டுப்பார்த்ததுண்டு (நிறைய தமிழ் சினிமாப்படம் பார்ப்பதால வந்த வினை)
சிலநேரங்களில் அவனுடைய வசவு தாங்கமுடியாமல் நானே எதிர்த்துக்கேள்வி கேட்டு வாதாடி சண்டைபோட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.(பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா, அதுவும் அநியாயம் நடக்கும்போது சும்மா இருக்க முடியாது)

இதே கதி தான் 154 இலும். அதில் இன்னொரு கொடுமை இருக்கு. அதாவது அந்த பேருந்துக்காக புதிய பாலத்தில் காத்திருக்கும் போது, புட் போர்டில் கால் வைத்து ஏற முடியாத நிலையில் தான் வரும். இந்தப்பேருந்தில் ஏறுவதற்க்கு அப்படி ஒரு போட்டி. சுமார் காலை 7.20 இலிருந்து 8. 30 வரை பொரெல்ல நோக்கி பயணிப்போர் இந்த அனுபவத்துக்கு நிச்சயம் முகம் கொடுத்திருப்பர். கொடுமையிலும் கொடுமையான விஷயம். 'கரணம் தப்பினால் மரணம்' எனும் அளவுக்கு பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்துத்தள்ளிகொண்டு உள்ளே செல்ல இடமில்லாத அந்த பஸ்சில் ஏறும் கொடுமை.. அப்பப்பா.... அதை பார்த்து அல்லது அனுபவித்தால் தான் தெரியும்.

ஒரு பெண் என்ற ரீதியில் நான் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சினை, சில 'சொறிஞ்சான் கேசுப்பொறுக்கிகளால் '(மன்னிக்க வேண்டும், கீழ்த்தரமான சொற்பிரயோகத்துக்காக: இதை விட எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை) அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள். என்னைப்போன்ற எத்தனையோ பெண்கள் இந்த துன்புறுத்தல்களுக்கு விதி விலக்கல்ல. அந்தளவுக்கு இப்படிப்பட்டவர்களின் தொல்லை நாளாந்தம் தொடருகிறது.

இவ்வாறான கேசுகளை இனம் கண்டு தவிர்ப்பதெப்படி ?

1) எமக்கு பின்னால் வந்து நின்று கொண்டு எம்மீது சாய்ந்து அந்த சொ.கே. பொ அதாங்க 'சொறிஞ்சான் கேசுப் பொறுக்கிகள்' உரசத்தொடங்கும்போது..உஷார்..
நெரிசல் காரணமா யாரோ சாதாரணமா மேலே விழுறாங்க என்று நாங்க நினைச்சாலும், சிறிது நேரத்தின்பின் கொடுமையான அருவருக்கத்தக்க சொறிதல் தொடங்கும். எனவே யார் வந்து பின்னால் நின்றாலும் முதலே முறைச்சுப்பாருங்க: பின்னால நிற்பவன் நல்லவனா இருந்தாகூட வேறு வழியில்லை

2) 'கள்ளு' குடிச்ச பார்வை வீச்சு காட்டாயம் இந்த சொ.கே.பொ.க்களிடம் இருக்கும்.

3) 'சீட்'(இருக்கை) கிடைச்சு உட்காரும்போது பக்கவாட்டில் நின்றுகொண்டும் இந்த கேசுகள் உரசும். உடனேயே எழும்பி இருக்கையை அவனுக்கு கொடுத்துட்டு நீங்க நில்லுங்க.

4) பஸ்சில் சீட்டுகள் ஏராளம் காலியாக இருக்கும்போது நம்ம பக்கத்துல தேடிவந்து உட்காரும் இந்த சொ.கே.பொ.க்கள். அப்படியான சந்தர்ப்பங்களில், உட்கார்ந்துள்ள இருக்கையை விட்டு இன்னொரு காலி இருக்கைக்கு மாறுங்கள்.

5) ரொம்ப டாச்சர் கொடுத்த அந்த இடத்திலேயே பொங்கி வெடிச்சு அவனுக்கு முடிஞ்சா தர்ம அடி வாங்கிகொடுங்க...(சாத்தியம் குறைவுதான்... முயற்சிசெய்து பாருங்க)

[பெண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய பேருந்து நடைமுறைக்கு வந்தால்... ஹ்ம்ம்..... ஆசப்படமட்டும் தான் முடியும் நம்நாட்டில்!]

174 பேருந்தை பொறுத்தவரை அது ஒரு நேரம் விழுங்கி... பின்ன.. சாதாரண வேகத்தில் போனால் பொரெல்லயிலிருந்து பன்னிபிட்டியவை 30 நிமிடங்களில் அடைந்துவிடலாம். ஆனா இந்த பஸ்ல போகும்போது எடுக்கும் நேரம் 50- 55 நிமிடங்கள். தேவையற்ற நிறுத்தங்களில் அதிக நேரம் வீணே நிறுத்தி வைக்கப்படுவதும், தாலாட்டும் வேகத்தில் செல்வதும்தான் இதற்கான காரணம்.

நான் பகிர்ந்துகொண்ட இந்த விடயங்கள்....சில துளிகள் மட்டுமே.... கடலளவு அநியாயங்களும் பிரச்சினைகளும் இன்னும் ஏராளம் ஏராளம்.....
எடுத்துச்சொல்ல நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

10 comments:

SHATHEE said...

WHAT EVER YOU HAD MENTIONED IN THIS... IS 200% TRUE...AND I APPRECIATE U FOR SHARING SUCH THINGS WITH THE PUBLIC.

MOST OF THE WOMEN NEVER TELL-OUT THE PROBLEMS(SEXUAL HARASSMENTS) THEY FACE.....

AND I TOO HAD EXPERIENCED THE 'BALANCE MONEY'...

IM WONDERING HOW BROADMINDED & COURAGE U R TO HIGHLIGHT THOSE VERY TRUTH HAPPENINGS....

ALL THE BEST FOR UR FUTURE PROJECTS..

UR SINCERELY FAN
LAW STUDENT(1ST YEAR)
SHATHEE

Subbu said...

என்னங்க செய்றது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் :( :(

Subbu said...

:(((((((((

Thambidurai said...

Yes, you are absolutely correct Dyena! Women are more victims than Men! I did see lot of animals ( guys who irritate girls ) who abuse girls . I am not sure whether this abuse will come to an end. That’s why I bought a new bike to my sister.

But one thing I am not sure the place which you are talking about?. Is it india or Srilanka?

Regards,
Thambi

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

I shud Thank U Thambidurai, for buying a bike for ur sister...
[ Enakku ipdi oru annan illaye:(( ]

The article is abt Srilanka...But it suits India as well...

NADRI THAMBI anna


also Thanks Shathee....

Thambidurai said...

I should at least buy a bike to her according to my capability. By the way, you can also buy a bike as now a days its affordable to a common person too! :)- . You don't need an "ANNA" like me to buy a bike there

I think you guys having network within Srilanka Tamil blogger because I could see lot of srilanka tamilians in the blogger list. Good luck to all of you !

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

vaangalaam thaan... but parents wud never ever allow me to drive...a SCOOTY

Nimal said...

Yes, you are absolutely correct... dye yenna seiya dye vallkai na apadithaa dye..

Muniappan Pakkangal said...

Nandri Dyena for sharing ur bus experience.Sorinjan case-intha vaarthai, solrathukku nalla irukke.These people are every where & u've correctly added tips to avoid them.

thinker said...

hi,
this has become a real problem to most women and probably the other way to most men.
i could agree with few of your opinions, but a point you said was unacceptable and may lead to more damages to women.
That is 'a'separate' bus for women. actually when someone is away (separated from us), we tend to think in an adverse view. in other words, the conditions would become worse. so in other public places men are going to harass women. actually it is in the hands of women to make a compromise and handle it INTELLIGENTLY rather than doing some awkward things like 'leaving the seat when a man sits near you'.
i have lot of ideas but no time left, so ...

LinkWithin

Blog Widget by LinkWithin