Wednesday, 29 July 2009

யூத் விகடனுக்கு மீண்டும் ஜெய் ஹோ !


யூத் விகடனில் மூன்றாவது தடவையாக என்னுடைய பதிவு வந்தமை மீண்டும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

முன்னர் யூத் விகடனில் இடம்பெற்ற என்னுடைய பதிவுகளான 'கோப்பி'க்காதல் மற்றும் வெள்ளித்திரையில் தந்த சர்பிரைஸ் பாடல் ... இவற்றோடு இப்போது என்னுடைய அண்மைய பதிவான CONTINUUM FINGERBOARD பற்றியது, அதுவும் நீண்ட நாட்களுக்குப்பின் இட்ட பதிவு. இடப்பட்டு மூன்று நாட்களில் யூத் விகடனால் 'குட் ப்லோக்' பகுதியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பதிவுகளுக்கு களம் தந்து, பதிவர்களை ஊக்குவிக்கும் நின் சேவை வாழ்க.. வளர்க..!- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday, 26 July 2009

Continuum-Fingerboard


நீண்ட நாளாக இந்த குறித்த அம்சம் பற்றி பதிவிட எத்தனித்திருந்தேன். அதற்கான ஒரு முழுமையான தேடலிலும் மூழ்கியிருந்தேன். தேடுதலில் கிடைத்த அம்சங்கள் உங்களுக்கும் பயன் தரும் என்ற நோக்கில் ... இருவாரங்களுக்கு முன்னர் Continuum Finger Board என்ற இசைக்கருவி பற்றிய ஒரு தகவலைப்படித்து, அதுபற்றி அறிந்துகொள்ள உந்தப்பட்டதன் விளைவாக (அது என்ன தகவல்னு அறிய ஆசைப்படுறீங்க இல்ல..) அதாவது இசைப்புயல், எந்திரன் திரைப்படப்பாடலுக்காக இந்த Continuum Finger Board இசைக்கருவியை பயன்படுத்துகிறார் என்ற தகவலை வெள்ளித்திரை நிகழ்ச்சிக்காக பெற்றபோது உண்டான ஈடுபாடு!

இதன் அமைப்பு சாதாரணமாக நாங்கள் பயன்படுத்தும்/ கண்டிருக்கும் Music-Keyboard போலில்லாமல் (அதன் அமைப்பிலும் சரி அது தன்பால் கொண்டிருக்கும் தொழிநுட்பத்திலும் சரி) வித்தியாசப்பட்டிருக்கு. படத்தை பார்க்கும் போதே உங்களுக்கு புரியும்.

Lippold Haken (University of ILLINOIS) இனால் வடிவமைக்கப்பட்ட இக்கருவி இதுவரை உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
Touch Screen அமைப்பு இதன் சிறப்பம்சமாக இருக்கின்றது. அத்தோடு உருவாக்கப்படும் ஒலியை தொகுத்துத்தரக்கூடியமை, வேறு எந்த ஒரு (மீட்டப்படும்) இசைக்கருவியையும் கொண்டு செய்யமுடியாத ஒன்று!

இந்திய இசைத்துறையை பொறுத்தவரை இதை பயன்படுத்திய பெருமை இசைப்புயலை மட்டுமே சார்ந்து நிற்கிறது. மேலும் இக்கருவியை அவர் முதல் தடவையாக,ஒரு திரைப்படத்திற்காக பயன்படுத்தியது டெல்லி -௦06 "ரெஹ்ந து" என்ற பாடலுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்னொரு சிறப்பு - இந்த இசைக்கருவியை மீட்டியபடியே அந்தப்பாடலை இசைப்புயல் பாடியமை.

இந்த இசைக்கருவியை பயன்படுத்துகின்ற ஏனைய இசையமைப்பாளர்கள் மற்றும் இதைப்பயன்படுத்தி படைக்கப்பட்ட சில படைப்புகள்:

1) (Dream Theater's keyboardist) Jordan Rudess

a) Octavarium என்ற அல்பத்திலிருந்து "Octavarium" , "Sacrificed Sons" பாடல்கள்
b) 2007's Systematic Chaos இலிருந்து "The Dark Eternal Night" and "Constant Motion"
c) Black Clouds & Silver Linings என்ற அல்பத்திலிருந்து "A Nightmare to Remember", "The Count of Tuscany", "The Shattered Fortress" பாடல்கள்.
d) 2007 இல் வெளியான The Road Home அல்பம்


2) John Williams

Indiana Jones and the Kingdom of the Crystal Skull திரைப்பட BGM

3) Jay Metarri

4) John Paul Jones

5) Randy Kerber


இந்த இசைக்கருவியை பயன்படுத்துகிற சிலரில் ஆறு பேரின் பெயரை நான் கொடுத்துட்டேன். நீங்க இப்ப இரண்டு பேரின் பெயரையாவது முடிஞ்சா கண்டு பிடிச்சு பின்னூட்டமிடுங்கள்! (பின்ன இவ்வளவு விஷயம் நான் தேடிக்கொடுத்திருக்கேன்.. உங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்க வேணாமா?? ஹி ஹி..)

உங்கள் செவிகளுக்காக Continuum-Fingerboard பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் கீழே:
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 25 July 2009

BALANCE SHEET OF LIFEOur Birth is our Opening Balance!
Our Death is our Closing Balance!
Our Prejudiced Views are our Liabilities
Our Creative Ideas are our Assets

Heart is our Current Asset
Soul is our Fixed Asset
Brain is our Fixed Deposit
Thinking is our Current Account

Achievements are our Capital
Character & Morals, our Stock-in-Trade
Friends are our General Reserves
Values & Behaviour are our Goodwill
Patience is our Interest Earned
Love is our Dividend
Children are our Bonus Issues
Education is Brands / Patents

Knowledge is our Investment
Experience is our Premium Account
The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.இப்ப நான் என்ன சொல்ல வாரேன்னா.... மொத்ததுல வாழ்க்கைய சமன் செய்து போய்க்கொண்டே இருங்க .. புரிஞ்சுதா ??
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 16 July 2009

இசைக்களஞ்சியம் பட்டம்மாளின் மறைவு!

"D.K. பட்டம்மாள்"
இளைய தலைமுறையினருக்கு இவருடைய பெயர் மட்டுமே பரிச்சயம்... ஆனால் ஒரு பெண்ணாக.. தமிழர் பாரம்பரியமான கர்நாடக இசையில் கொடிகட்டி பறந்தவர் என்ற பெருமையுடன், தமிழ்த்திரை இசையுலகிலும் ஒரு தலை சிறந்த இசையமைப்பாளராக பாடகியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் இவர் .
முழுப்பெயர் - தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள். ஆனால் உண்மையான பெயர் அலமேலுவாக இருக்க... 'பட்டா.. பட்டா' என்று செல்லமாக எல்லாராலும் அழைக்கப்பட்டு, பிறகு 'பட்டம்மாள்' என்றே இசை வரலாற்றில் பொறிக்கப்பட்டவர்.

இவருடைய சமகாலத்தவர்களான சுப்பு லக்ஷ்மி, வசந்தகுமாரி இருவரும்கூட இசை முத்துக்களாக திகழ்ந்தவர்கள் என்றாலும் பட்டம்மாளின் புகழ் சர்வ தேசமும் எட்டிப்பார்த்து, கர்நாடக இசையை தொட்டுத்துலக்கியது. கேள்வி ஞானத்தில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த இவருக்கு இசைக்குரு என்று யாரும் இருக்கவில்லை என்பது தான் ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயம். ஆனாலும் இவருடைய ஆரம்ப பள்ளிப்பருவத்தில் ' தெலுங்கு வாத்தியார்' என்று ஒருவர் இசைக்கான பிள்ளையார்சுழி இட்டுக்கொடுத்திருந்தாராம்.( இதுபற்றி யாருக்காச்சும் தெரிந்த பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்)

தன்னுடைய பத்தாவது வயதிலேயே இந்திய அரசு நடாத்திய இசைப்பரீட்சையில் கலந்துகொண்டு சித்தி எய்திய பட்டாமாளின் இசைத்தாகம் அவருடைய ரத்தத்திலேயே ஊறியிருந்தது. (அவருடைய தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி, தாயார் காந்திமதி (ராஜம்மாள்) இருவரும் இசையோடு தம்மை இணைத்தவர்கள்)

இவர் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விக்கிபீடியாவை நாடுங்கள்

28.03.1919இல் உதித்த இந்த இசைக்களஞ்சியம்(ஆமா இப்ப இவருக்கு 90 வயது), பல சவால்கள் தாண்டி, வெற்றி கண்டு தன்னை இசைக்காக முழுமையாக அர்ப்பணித்து, சாதனைப்பெண்களில் ஒருவராக திகழ்ந்து இத்தனை காலமும் இசையுள்ளங்களை தன் வசப்படுத்திய 'சங்கீத சாகர ரத்னா' D.K.பட்டம்மாள் என்றும் நம் உள்ளங்களில்!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 11 July 2009

மீண்டும் தொடரும் பதிவுப்பயணம்!


ஹலோ....... யாராச்சும் இந்தப்பக்கம்... நான் எட்டிப்பார்க்காத நாட்களில் எட்டிப்பார்த்தீங்களா? ஹ்ம்... எட்டிப்பார்த்து திட்டித்தீர்த்துட்டும் போயிருப்பீங்க.... என்னடா இவ ஒவ்வொரு நாளும் ஏமாற்றுகிறாளே... இவ்வளவு நாளும் பதிவிடாம என்னமாதிரி ஐஸ் அடிக்கிறா... இல்லாட்டி அப்படி என்னத்த பெருசா வெட்டி முறிக்கிறா? இப்டியெல்லாம் உங்க மனம் போன போக்குக்கு யோசிச்சிருக்க மாட்டீங்கன்னு( ஹி ஹி... ட்விஸ்ட்டு கொடுத்து பார்த்தேன்) எனக்கு நல்லாவே தெரியும்.

பரீட்சைன்னு சொல்லி ஒதுங்கி இருந்தேன் ... ஆனா என்ன செய்ய வேலையில் மூழ்கினதுல... பரீட்சைக்கு .. பூட் கொடுத்தாச்சு... ..இட்ஸ் ஓகே மா ... பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்( எனக்கே நான் சமாதானம் சொல்லிக்கொள்கிறேன்)

அன்பான பண்பான நல்ல உள்ளங்களுக்காக மீண்டும் பதிவுக்களத்தில் 'தொபுகடீர்னு' குதிக்க நான் தயார்...... நீங்க ..... வேடிக்கை பார்க்க மட்டும் தயாராகுங்க... இனி தொடர் பதிவுகளுடன் சந்திக்கும் வரை.....

ஆ... புஸ்க்கா....(ஹி ஹி ... லூஸ் மோகன் ஸ்டைல்)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

LinkWithin

Blog Widget by LinkWithin