Tuesday, 11 August 2009

ATMஇன் 'அறிந்தும் அறியாமலும்'

தலைப்பைப்படித்துட்டு இதென்ன ஏதாவது திரைப்படத்துக்கு புதுப்பெயரா இல்லாட்டி அறிந்தும் அறியாமலும் பாகம் இரண்டா ?? இப்படியெல்லாம் ஆர்வக்கோளாருல அவசரப்பட்டு முடிவெடுப்பது மூளைக்கு நல்லதல்ல சொல்லிட்டேன்....

இனி தொடருங்க....

அநியாயங்களும் அவலங்களும் .... அநியாயத்துக்கு நிறைந்து கிடக்கும் இவ்வுலகில்.. அசம்பாவிதங்கள் நேரும்போது அவற்றை பல சந்தர்ப்பங்களில் நாமே துணிந்து,நேருக்குநேர் நின்று போராடியோ, சாமர்த்தியமாக செயற்பட்டோ அவற்றிலிருந்து எம்மை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பணம் மீதுள்ள மோகம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவற்றை எங்களால் தகர்த்தெறிய முடியாவிட்டாலும், சில சந்தர்ப்பங்களில் அவற்றை சமாளித்து எங்களையும் எங்களது உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வதற்கான வழியை அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது.

கீழே நீங்கள் காணும் படங்கள்...
ஒரு பிரபல வெளிநாட்டு வங்கி ATM கூட்டுக்குள் நடைபெற்ற உண்மைச்சம்பவம்.


இப்படியான ஒரு நிலை உங்களுக்குகூட நேருவதற்கான வாய்ப்பு இல்லாமலில்லை. (உலகம் போகிற போக்கைப்பார்த்தால் அப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது).

அப்படி நேருமாயின் அந்நேரத்தில், திருடனோடு வாதாடுவதோ அல்லது உங்கள் எதிர்ப்பைக்காட்டுவதோ உசிதமானதல்ல.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுடைய ATM அட்டைக்குரிய pin இலக்கத்தை ரிவர்ஸ் முறையில் அழுத்துவது மட்டுமே.
உதாரணத்துக்கு உங்கள் pin இலக்கம் 1234 ஆக இருப்பின் அதை நீங்கள் 4321 என அழுத்த வேண்டும்.

இப்படிச்செய்யும்போது பணம் பாதி வெளியில் வந்தும் மீதி வராமலும் இருக்கும். அதேகணம் வங்கிக்குரிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் குறித்த சம்பவம், ஒரு அலாரம் மூலம் அறிவிக்கப்படும்.(pin இலக்கத்தை ரிவேர்ஸ் முறையில் அழுத்தும்போது இந்த தானியங்கிமுறை அலாரம் செயற்படும்விதமாக ஒவ்வொரு வங்கியாலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது)
எப்படி............??

இப்ப இதை வாசிச்சு மனசுக்குள் மட்டும் வைத்திருக்காமல் முடியுமானவரை இந்த தகவலை உங்கள் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

"அறிந்துகொண்டதை பகிர்ந்துகொள்வதன்றி வேறெதிலும் முழுமையான சந்தோஷமும் மனத்திருப்தியுமில்லை" இந்தக்கூற்றோடு உடன்படுவோர் நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு....

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

7 comments:

Paheerathan said...
This comment has been removed by a blog administrator.
வந்தியத்தேவன் said...

ATM என தலைப்பைப் பார்த்தவுடன் நம்ம இளையதலைவலி அழகிய தமிழ் மகன் பாகம் இரண்டு எடுத்து இம்சை கொடுக்கப்போகின்றாரோ என நினைத்தேன்.

நல்லதொரு விழிப்புணர்வு கொடுத்திருக்கின்றீர்கள். மின்னஞ்சலில் வந்ததுதான் ஆனால் பதிவாக வரும்போது பலரைச் சென்றடையும்.

யோ (Yoga) said...

இலங்கையில உள்ள வங்கிகளில் இப்படி வசதிகள் உண்டா? அப்படினா சொல்லுங்க சும்மா ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமே! என்னதான் நடக்குது என்று

Nimalesh said...

thx Dye for your in4...... i will share this with ma freinds with ur permission....................

Nimalesh said...

thx Dye for your in4...... i will share this with ma freinds with ur permission....................

தெருவிளக்கு said...

எப்படி இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம்
எனது இரகசிய குறியீட்டிலக்கம் இரண்டு பக்கமிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியல்லவோ இருக்கிறது.
என்னால் என்ன செய்ய முடியும் டயானா

கோப்பாய் பொடியன் said...

நல்ல பதிவு, தகவலுக்கு நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin