Saturday 8 August 2009

மயூரனுக்கு 'சுவாரஸ்ய' நன்றி!



எதிர்பார்க்காத விடயங்கள் எதிர்பார்க்காத நேரங்களில் நிகழும்போது அவை தரும் சந்தோஷங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கவியலாதவை. அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு இன்று கிடைத்தது சுவாரஸ்யப்பதிவர்களில் ஒருவரான மயூரனிடமிருந்து!


சக அறிவிப்பாளர் மட்டுமன்றி.. நல்ல எழுத்தாற்றலும், ஆர்வமும் உடையவர் மயூரன். புதிய, நடப்பு விடயங்களை தேடி, முந்திக்கொண்டு பிறருக்கு தரவேண்டும் என்ற ஒரு 'வெறி' இவரிடம் உண்டு. அதை "இப்படியொரு வழியிலும்(பதிவிடல்) செய்யுங்கள் அண்ணா" என்ற இந்த சகோதரியின் சிறிய கோரிக்கையை ஏற்று, அதை வழி நடத்தி.... குறைந்த காலப்பகுதியில் சதப்பதிவையும் எட்டி இப்போது இந்த 'சுவாரஸ்யப்பதிவர்' என்ற விருதையும் வென்று... ''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்ற நோக்கில் அதை பகிர்ந்தளித்துள்ளார் . அந்தப்பகிரலில் என்னையும் இணைத்தமைக்கு அவருக்கு சாதாரண நன்றியெல்லாம் போதாது.... கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே...
எனவே மயூரன்.. உங்களுக்கு என் 'சுவாரஸ்ய' நன்றி!


இலத்திரனியல் ஊடகங்களாக வானொலி, தொலைக்காட்சி இவற்றோடு 'நியூ மீடியா' என்றழைக்கப்படும் இணைய இதழ்கள் கோலோச்சும் இந்நவீன யுகத்தின் இன்னொரு புரட்சியாக 'வலைப்பதிவுகள்' வளர்ந்துகொண்டு வரும் வேகத்தில்,தம்மையும் சேர்த்தே செலுத்திக்கொண்டிருக்கும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சுழன்றுகொண்டிருக்கும் 'வலைப்பதிவு விருதுகள்' நிச்சயமாக வரவேற்கத்தக்கவைதான்.

காரணம் எழுத்தார்வமும் ஆளுமையும் கொண்ட ஆர்வலர்கள் இந்த அவசர யுகத்தில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி தொடர்ந்தும் அதை தக்கவைத்து, பிறரையும் ஊக்குவித்து சமூகத்துக்கு ஏதோ ஒரு வழியில் ஒன்றை செய்யத்தூண்டுகிறது.

சாதாரணமாக எழுதத்தொடங்கும் ஒருவன் ஒரு கட்டத்தில் பண்பட்ட பதிவுகளை தொடர்ந்து தரக்கூடிய ஆற்றலை இவ்வலைப்பதிவு விருதுகள் தரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

ஆனால் ஒருவிடயத்தை வலைப்பதிவிடும் நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் தேடல்கள் மற்றவர்களை சென்றடைந்து அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் பயனைத்தரும்படியான பதிவுகளை தரவேண்டுமே தவிர...இவ்வகை விருதுகளை பெரும்நோக்கிற்காக மட்டும் உங்கள் பதிவுகளைத்தரக்கூடாது. அதாவது...

"பதிவுகளுக்காகவே விருதேவோழிய... விருதுக்காக பதிவன்று"
என்பதை எப்போதும் உங்கள் சிந்தையில் இருத்திக்கொள்ளுங்கள்.
(இது உங்கள் சகோதரியின் / தோழியின் சிறிய வேண்டுகோள்)

சுவாரஸ்யப்பதிவர் விருதினை பெற்றுக்கொண்ட ரமணன் அண்ணாவுக்கும் http://ramanansblog.blogspot.com/ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மீண்டும் சந்திப்போம் ...சிந்திப்போம் ஒரு சுவாரசியமான பதிவுடன் ( என்ன செய்ய... சுவாரசியப்பதிவர் விருதெல்லாம் கொடுத்துட்டாங்க... இப்ப தான் டென்சனும் கூட... இனி கொடுக்கும் பதிவெல்லாம் வாசிப்போருக்கு சுவாரசியமா இருக்கவேணுமே..)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

C.K.Mayuran said...

நன்றி டயானா.சிறந்த பதிவுகளைத் தருவோருக்கு இன்னும் விருதுகள் கிடைக்கவேண்டும்.அப்போதுதான் அவர்களது பதிவில் இன்னும் பல புதுமைகள் பிறக்கும்.இன்னும் பல தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...

கார்த்தி said...

வாழ்த்துக்கள் அக்கா!!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

விருது கொடுத்த மயூரன் அண்ணாவிற்கும், விருது பெற்ற உங்களுக்கும், ரமணன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் கோடி.. தொடர்ந்தும் நிறைய ஆக்கங்கள் உங்களிடமிருந்து எதிர் பார்க்கப் படுகிறது......

Jeya said...

வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் இன்னும் பல தரமான பதிவுகளை இட்டு எங்களை போன்றவர்களை சந்தோசப்படுத்த வேண்டுகிறேன்...

Nimalesh said...

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.........