Thursday, 10 September 2009

நோ நோ.. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே!இன்று 09.09.09 இல்
இலங்கையில் இருந்து கொண்டு துபாயில் நடந்த ஒரு விஷயம் பற்றி தான் சொல்லப்போறேன். இனிவரும்காலங்களில் போக்குவரத்து புரட்சிகளில் ஒன்றை நினைவுகூரும் ஒரு நாளாக அதுவும் துபாயில் மெட்ரோ ரயில் விடப்பட்ட நாளாக இன்றைய நாளானது நினைவுகூறப்படும் என்பதை இன்றே நான் கூறுகிறேன்.(ஹி ஹி.. சத்தியமா நான் தீர்க்கதரிசி இல்லை.. தகவல் திரட்டுதரிசி...)

உலகநாடுகள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளில் ஒன்று வாகனநெரிசல்(Traffic Jam). இதிலிருந்து விடுதலை பெரும் நோக்கில் துபாயின் பாரிய போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்றான Dubai மெட்ரோ- Railway Technology இன் வெற்றிப்படியாக இன்றிலிருந்து சுரங்கப்பாதைகள், பாலங்களில் பயணிக்கின்ற மெட்ரோ அதிவேக ரயில்கள் விடப்பட்டுள்ளன.


இந்த மெட்ரோ ரயில் செல்லும் ரயில்பாதைகள் சில இடங்களில் கட்டடங்களையும் ஊடறுத்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் இன்னொரு சிறப்பம்சம்.


இந்த ரயிலில் ஜம்னு ஏறி உட்கார்ந்தீங்கன்னு வைங்க ... சும்மா ஒரு மணித்தியாலத்தில் துபாயின் Rashidiva இலிருந்து Jebel Ali வரை(52.1km) ஹாயா போகலாம் 31,999 பயணிகளோட சேர்ந்து. (கரெக்ட் உங்களையும் சேர்த்தா 32,௦௦௦௦௦௦000. கணக்குல நீங்க இவ்வளவு கெட்டிக்காரரா??)


இந்த குறித்த பயணப்பாதையில் சுமார் 29 நிலையங்கள் உள்ளன. அவற்றில் நான்கு சுரங்கப்பாதை வழியில் அமைந்துள. ஆனாலும் இந்த 29 நிலையங்களில் இன்று 10 நிலையங்கள் மாத்திரமே தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்பயணப்பாதை ரெட் லைன் எனப்படுகிறது. இதே போன்று கிரீன் லைன் எனப்படும் பாதையும் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. இது Al Ittihad Square இலிருந்து Rashidiya வரை 22.5km நீண்டு காணப்படுகிறது.

மெட்ரோ ரயில் அமைப்பில் கில்லாடிகளான ஜப்பானியர்கள் தான் இந்த துபாய் திட்டத்தையும் வடிவமைத்து செயற்படுத்தியுள்ளனர்.

இத்தனை சிறப்புகளுடன் புரட்சி படைக்க உதித்த இந்த துபாய் மெட்ரோ ரயிலின் (ரெட் லைன் பாதை ரயிலின்) வெள்ளோட்டம் 09/09/09 இரவு 09 மணி 09 நிமிடம் 09 செக்கனுக்கு...இடம்பெற்றுள்ளது.

இதுல யார் யாரெல்லாம் இன்று பயணித்திருக்காங்கன்னா Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, மற்றும் அரச குடும்பத்தவர்கள், மந்திரிகள், வியாபார- வணிக பெரும்புள்ளிகள்.

(நாளை எனக்கு வேண்டப்பட்ட ஒருவரும் இதில் பயணிக்கிறார்... ஹி ஹி... அதனால எனக்கும் சந்தோஷமுங்கோ... )

காணக்கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை நீங்க பாக்கியசாலி தான்.. ஏனென்றால் துபாயில் இருக்கும் பலருக்கு இந்த விஷயமே தெரியாதாம்...இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருச்சே...

இனி இப்படி ஒவ்வொரு நாட்டிலும் மெட்ரோ ரயில்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டால்...
யாருமே இனி...." சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலேன்னு" பாட முடியாதே....(ரொம்ப முக்கியம்)

மேலதிக தகவல் பெற ஆசைப்படுவோர் இதை சொடுக்குங்கள்.
http://www.railway-technology.com/projects/dubai-metro/ - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

9 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

இந்த மாதிரி ஒரு ரயில் நுவரெலியாவிற்கு இருந்தால் தினமும் வீட்டுக்கு போய் வரலாம். பார்ப்போம் எப்ப வருது என..

Nimalesh said...

u r proving that u r THAGAVAL Thiratti...........lol.... keep it up da.......

Anonymous said...

Good Job keep it Up

கரவைக்குரல் said...

பதிவு சிறப்பு
பல்வேறு தகவல்களுடன் தொகுத்திருக்கிறீர்கள்
நானும் இதைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்,
பாருங்களேன்
வாழ்த்துக்கள்

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

யோகா அண்ணா.... அதுதான் என்னுடைய பிரார்த்தனையும் கூட..பார்க்கலாம்...நாங்கள் கொள்ளுபேரன் பேத்தி.. காணும் வயதில்.... வரலாம். ...


Thanks Nimal..hi hi....

Thanks for ur comment Shajahan

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி கரவைக்குரல் பதிவாளரே....

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

கரவைக்குரல் பதிவாளரே...

உங்கள் வலைப்பூவை அடைய முடியவில்லை ஏன் ??

கரவைக்குரல் said...

ம்ம் டயானா
அதில் நான் இணைத்திருந்த என் இணைப்பை தவறாகக்கொடுத்துவிட்டேன்
இப்போது பாருங்கள் சரியாக இருக்கும் என நம்புகிறேன்,

SShathiesh said...

உங்களுக்கு என் அன்புப்பரிசொன்று என் தளத்தில் காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

:)))

LinkWithin

Blog Widget by LinkWithin