Tuesday 22 September 2009

மனிதன் உணர்ந்துகொள்ளும் மனிதக்'காதல்'


''காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்''

என்ற என் மானசீக கவிக்குரு மகாகவி பாரதி மொழிந்தது போல் காதல் வாழ்க்கையினின்றும் போயிடின் வாழும் வாழ்க்கையே சாவைபோல் இருக்கும்.


காதலில்லாதவன் வாழ்க்கை 'சாவாகும் சம்பவமாகிறது'.
காதலுடன் வாழ்ந்து மரித்தவனின் வாழ்க்கை 'வாழும் சரித்திரமாகிறது'!

இதுவரை காலமும் நாங்கள் அறிந்த காதல் வரலாறுகள்தான் எத்தனை அவற்றுள் புதைந்து கிடக்கும் உண்மைகள்தான் எத்தனை எத்தனை....
விதவிதமாய் காதல் வயப்பட்டு காதலை மொழிந்த காதலர்கள் எத்தனை அவர்கள் பொறித்துச்சென்ற (சாகா)சரித்திரங்கள்தான் எத்தனை எத்தனை....

அறியாதவரை அறியும்படித்தூண்டுவதும்....
அறிந்தபின் அதன் வாயிலாகப் பேரின்பம் ஊட்டுவதும்
அது தரும் அனுபவங்கள் வழியே வாழ்க்கையின் பெரும் பகுதியைப்புகட்டுவதும்
காதலன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்??


மொழி, இனம், மதம் என.... அனைத்தையும் கடந்ததாய் காதல்...(ஆமா இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று கேட்கிறீங்களா? பரவாயில்லை... உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி சொல்லிக்காட்டுவதை இப்பதிவு விரும்புகிறது)


''எல்லாக்கடவுளும் ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள் காதல்''
''எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரே ரத்தம் காதல்''

உள்ளம் கேட்டு, உணர்ந்து ஏற்றுக்கொண்ட பாடல் வரிகள் இவை..
என் மனம் கவர்ந்த வரிகளாயும்...என் வாழ்க்கையில் ஒன்றிப்போன வரிகளாயும்...

கா -'கா'த்திருத்தல் (காதலன்/ காதலிக்காக காத்திருத்தல்)
- ''வித்திருத்தல் (அவன்/ அவள் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக தவித்திருத்தல்)
ல் - இ'ல்'லாமற்போதல் (காதலனோடு/ காதலியோடு இருக்கும்போது தன்னிலை மறந்து தனக்குள்ளேயே தொலைந்து இல்லாமற்போதல்)

இது ....ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து படித்து ரசித்த ஒரு வரைவிலக்கணம்... முகப்புத்தகத்தில் பகிர்ந்துகொண்ட ஒன்றுதான்... மீண்டும் இப்பதிவுக்காக ஞாபகப்படுத்தினேன் .

நிச்சயமாக காதல் பற்றிய பாடம் நடத்துவதற்காக அல்ல இந்தப்பதிவு .. ஆனால் நம் யதார்த்த வாழ்க்கையுடன் ஒன்றிப்போன காதலோடு காதலாக.... கசிந்து கண்ணீர் மல்க வைத்த.... உள்ளம் ஊடுருவிச்சென்ற காதல் பற்றிய வரிகளையும் பகிர்வதற்கே.

ஏதோ நம்மால முடிந்தளவுக்கு ஓரிரு வரிகளை எடுத்துவிட்டு ஆரம்பித்துவைத்தாகிற்று.. இனி இந்தத் தொடர்பதிவில் பின்னூட்டங்களாக தொடரப்போவது உங்கள் வாழ்க்கையில் பொறிக்கப்பட்டிருக்கும் காதல் வரிகள்.
நீங்கள் வடித்த/கேட்ட கவிதைகள், சினிமாப்பாடல்கள் என எதுவாகவும் இருக்கலாம்.... உங்களைப்பாதித்த காதல்வரிகள் பின்னூட்டங்களாய் களைகட்டட்டும்..

பி.கு - அனுபவம் இல்லாதவர்கள் இன்று போய் காதல்கண்ணாடியில் முகம்பார்த்தபின்னர் இங்கு மறக்காமல் வந்து பின்னூட்டுங்கள்..

ஒருமாதிரி 'வந்தி' அண்ணாவின் தொடர்பதிவு-அழைப்புக்கான இரண்டாவது தலைப்பையும் அரங்கேற்றியாச்சு... அடுத்தது என்ன?(அழகு?? பணம் ??) சிறிய இடைவேளையின்பின் தொடரும்... (ச்சே எவ்வளவு முயன்றாலும் இது தொடருது)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

6 comments:

வந்தியத்தேவன் said...

ம்ம் காதலும் நல்லாயிருக்கு, ஆனால் கடவுளை விட ஸ்ரோங்காக இல்லை. அனுபவம் இல்லாமை அல்லது அனுபவத்தை வெளியே சொல்லமுடியாமையோ காரணமாக இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை காதல் சுவிங்கம் போன்றது ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் இழுழுழுழுழுழுபடும்.

Prapa said...

//என்னைப் பொறுத்தவரை காதல் சுவிங்கம் போன்றது ஆரம்பத்தில் இனிக்கும் பின்னர் இழுழுழுழுழுழுபடும்.//

இதுதான் எங்கள் கூட்டணியின் காதல் பற்றிய கருத்து.

Nimalesh said...

no comments, bt i like this lines
''எல்லாக்கடவுளும் ஏற்றுக்கொள்ளும் ஒரே கடவுள் காதல்''
''எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரே ரத்தம் காதல்''

jeyamee said...

மற்றவர்களை சங்கடப்படுத்தாம‌
யாரையும் காயப்படுத்தாம‌
இருக்கிற காதல்
நமக்கும் எப்பவுமே சந்தோசத்தை மட்டுமே தரும்........

jeyamee said...

மற்றாவர்களை சங்கடப்படுத்தாம‌
யாரையும் காயப்படுத்தாம‌
இருக்கிற காதல்
நமக்கும் எப்பவுமே சந்தோசத்தை தரும்........
காதலோட பேரால‌
வாழ்கையில வீழ்ச்சிகள்
ஏற்படாம பார்த்தால் போதும்
காதல் ஜெயித்தலும்
தோற்றாலும்
மனதோடு இனிமை மட்டுமே இருக்கும்.........

Om Santhosh said...

மனிதன் உணர்ந்துகொள்ளும் மனிதக்'காதல்' உண்மையான காதல் கவிதை