Wednesday 10 February 2010

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!

எனது பள்ளி வாழ்க்கை பற்றி மட்டுமே எழுத புதிய வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமா என்று யோசித்தபோது 'கரவைக்குரல்' விடுத்த தொடர் பதிவுக்கான அழைப்பு இந்த wisdomblabla வை எட்டிவிட்டது. அதனால் இதிலேயே சில அனுபவங்களை தற்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மா வயிற்றுக்குள் இருந்து புரண்ட வேளையிலிருந்தே நான் இசைப்பிரியை, பைத்தியம், etc .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விவரம் தெரிந்த பள்ளி வாழ்க்கையில் விட்டு வைப்பேனா ?? 1992 இன் பின் சொல்லவே தேவையில்லை... ARR இன் இசைக்கு மட்டுமே தனியொரு அடிமையாக இருந்தேன் என்றுகூட சொல்லலாம். ARR இன் இசை எப்படி வளர்ந்த வண்ணம் இருந்ததோ அதுபோலத்தான் என் குறும்புத்தனங்களும்....அடாவடித்தனங்களும்

எங்கள் பாடசாலைக்குள் CASSETTES எடுத்துச்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது... ஆனால் புதிய பாடல்கள் கொழும்பில் வெளியான உடனேயே 2 நாட்களில் என் கரம் கிட்ட வேண்டும் என்பது நான் என் உயிர்த்தோழிக்கு(சங்கீதா) இட்ட அன்பு வேண்டுகோள்...(1995 இல்- அவள் என் தோழியர் குழாமில் இணைந்தபோது)

இந்த புதுப்பாடல் CASSETTES களை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பவர் அவளுடைய கொழும்பு மாமா....


CASSETTES பரிமாற்றம் இடம்பெறுவது பாடசாலையில் தான்......


இன்றும் ஞாபகம் இருக்கிறது - ரங்கீலா, முத்து, லவ்பேட்ஸ், இந்தியன், காதல் தேசம், மின்சாரக்கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், என் சுவாசக்காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், ஜோடி, முதல்வன், தாஜ்மகால் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...சுடச்சுட பாடல்களைப்பெற்று செவிமடுத்ததை....


கொழும்பு வாசிகளுக்கு இந்தப்பாடல்களைப் பெற்றுக்கொள்வது பெரிய விடயமே இல்ல.. ஆனா நுவரெலியாவில் இந்தப்பாடல்களை அவை வெளியான 2 , 3 நாட்களிலேயே பெற்றுக்கொள்வது பெரிய விடயம்...ஏனென்றால் ரெகார்டிங் கடைகளில் கூட அந்தப்பாடல்கள் வந்திருக்காது....இப்படியிருக்க... இந்தப்பாடல்களை வாண்டுகளாக இருந்த நாங்கள் வைத்திருந்தது எங்களைப்பொறுத்தவரை அந்தக்காலத்தில் பெரிய............. விஷயம் (இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது...)


பாடசாலையில் என்னதான் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை உடைத்து, மீறி சில விஷயங்களை செய்துவிட்டு 'COLLARS -UP' பண்ணுவது எங்களுடைய பழக்கம்... ஹி ஹி ..(உங்களிடம் கூட இருக்குமே)


இப்படி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக(பள்ளிநாட்களில் எழுதின கட்டுரை சிறுகதையெல்லாம் ஞாபகம் வருது) எங்கள் cassette பரிமாற்றம் இடம் பெற்று வந்தபோது ஒரு நாள் ..........

''டடாங் டம்'' (situation effect )

அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது...

அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...

சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....

''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல் படபடக்க....

என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது.....
(தொடரும்)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

8 comments:

புலவன் புலிகேசி said...

ஹா ஹா ஹா...நல்லாவே முழிச்சிருப்பீங்கன்னு தோனுது. எனக்கு ஏ.ஆர்.ஆர் இசை இல்லை என்றால் அன்றைய தினமே ஓடாது. நான் அவரது பரம விசிறி. உங்கள் இசை அனுபவம் சிரிப்பை வர வைக்கிறது...

Nimalesh said...

che yenna dyena Thodar Drama mathiri thodarum ne pottutinga..... haiyoooo.. atuthaa pathivu yeppa varum???? one month....wait pannanum ma????lol

Prapa said...

அட பாரடா நம்ம டயன்ச...

கரவைக்குரல் said...

ஆஹா ஆஹா என்ன ஆரம்பமே திரு திரு முழி என்று சுவாரஷ்யமாக ஆரம்பிக்கிறது.சிறப்பான ஆரம்பம்.
உங்கள் அனுபவம் பலருக்கும் பல கோணங்களில் ஏற்பட்டிருக்கும்.அதை நினைவோட்டியிருக்கிறது.
இரண்டாம் பதிவு வெகுவிரைவில் வரும் அப்படித்தானே ?

யோ வொய்ஸ் (யோகா) said...

இப்படி போனிச்சா உங்க பள்ளி வாழ்க்கை, இந்த விடயத்தை வெளியிட்டமையை சங்கீதாவிடம் போட்டு கொடுக்கிறேன்...

Arul said...

Aaaha...suvaarasyamaa irukke...idhu enna'paa TV Mega Serial ah..thodarum poduradhukku? ore adiyaa ezhudhi mudinga paaaaa......edhirpaarthu kaathu iruppadhu kashtamaa irukku

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

உங்க கதை சுவாரஷ்சியமாக இருக்கின்றது ......

ManA © said...

''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ..a உங்க மாணவ தலைவி கண்டுட்டா,, அப்போ நீங்க வடிவேல் ஸ்டைல்ல "வட போச்சே" என்று சொன்னீங்களா? இல்ல கசட் (cassette)போச்சே என்டு சொன்னீங்களா? ..