நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த, ஆசைப்பட்ட ஒரு விடயத்தை செயற்படுத்தப்போகிறேன்...
என்னுடைய இந்த வலைப்பூவில் ஒரு தமிழ்ப்பதிவினை மேற்கொள்ளஎண்ணியதன் பலனாக மேற்கொண்ட முதல் முயற்சி இது.......
எனவே இந்த கன்னி முயற்சியில் முற்று முழுதாக எனக்குப்பிடித்த ஒருவர் பற்றி, தமிழில் பதிவிட எத்தனித்தபோது......
அதற்கான சந்தர்ப்பமும் அவசியமும் இன்று அமையப்பெற்றது இறைவன் அருளால் !
எனவே முதற்கட்டமாக இறைவனுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொண்டு....வாசக நெஞ்சங்களை இப்பதிவு குளிர்விக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்....
??? எனக்கு பிடித்த அந்த நபர் ... நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியஅவசியம் இல்லை.... காரணம் என்னுடைய நிகழ்ச்சிகளில் இவருடைய இசையில்அமைந்த பாடல்களின் ஆக்கிரமிப்பு யாவரும் அறிந்ததே !
(ம்ம் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க ........)
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ............
இசைக்கு வசமாகாத நெஞ்சம் தான் உண்டோ...
அதிலும் இவர் இசைக்கு செவி சாய்க்காத செவி தான் இவ்வுலகில் உண்டோ....
காரணம் இவருடைய இசை சர்வதேசத்திலும் சங்கமித்துள்ளது !
அதனால் தான் யாவரும் எதிர்பார்த்துக்காத்திருந்த சர்வதேச சிறப்பு விருதுகளில்ஒன்றான கோல்டன் க்ளோப் விருதினை வென்றெடுத்த முதல் இந்தியர் என்றபெருமையையும் தன் வசமாகிக்கொண்டார்....
கடந்த டிசம்பர் மாதம் பதின்மூன்றாம் திகதி 2008 (சனிக்கிழமை) காலை......
வழக்கம் போல ஞாயிறு வெள்ளித்திரைக்காக வீட்டிலிருந்து கொண்டேஇணையத்தளத்தின் ஊடாக தகவல்கள் திரட்டிக்கொண்டு இருந்த போது ....
"கோல்டன் க்ளோப் விருதுக்காக 2009" என்ற தலைப்பு தலை காட்டி, பதினான்காம் திகதி வெள்ளித்திரைக்கு தலையாய் விளங்கியது.
எனவே உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்க மறுநாளுக்குரிய வெள்ளித்திரையை"இசைப்புயல் சிறப்பு வெள்ளித்திரை"யாக வலம் வரச்செய்யும் பொருட்டு இன்னும் இன்னும் இசைப்புயல் பற்றிய நிகழ்கால நடப்புகளை திரட்டிக்கொண்டேன்....
(2009 இசைப்புயலின் பிறந்தநாளன்று SHAKTHI FMக்கு நடந்த அசம்பாவிதம் 'இசைப்புயல் சிறப்பு SHAKTHI எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியை செய்யமுடியால் செய்திருதாலும்கூட....அதற்கு முன்கூட்டியே இந்த இசைப்புயல் சிறப்பு வெள்ளித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எண்ணத்தை தந்த இறைவனுக்கே 'எல்லாப்புகழும்....!)
குறிப்பாக அவர் இசையில் வெளிவந்திருந்த
'சிலம்டோக் மில்லியனர்' திரைப்பாடல்கள்...
பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தீம் இசை ....
இப்படி என்னென்ன விடயங்கள் .... நிகழ்கால நடப்புகளாக அவருடன்தொடர்பானவைகளாக இருந்தனவோ, அத்தனை அம்சங்களையும்ஒருசேரத்திரட்டித்தந்திருந்தேன் ....
(அன்று நிகழ்ச்சியை செவிமடுத்த அன்பு உள்ளங்களிடமிருந்து விமர்சனங்கள்,கருத்துக்களையும் பெற்றுக்கொண்டேன்....உள்ளூர அப்படியொரு மகிழ்ச்சி !)
இதன்பின் ஒவ்வொருநாளும் இந்த கோல்டன் க்ளோப் விருது அறிவிப்பு தினத்திற்காக இசைப்புயலின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுள் ஒருத்தியாய் ஆவலுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருந்ததன் பலனாக அந்த மகிழ்ச்சிகரமான செய்தி ஜனவரி பன்னிரெண்டாம் திகதி 2009, காலை எட்டு நாற்பத்தைந்து அளவில் செவி நனைத்தது!
அதை நானே சொல்றத விட நீங்களே .....பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்....
'வாழும் தசாப்தம்' , இசைப்புயல்........ இன்னும் இன்னும் சாதனைகளையும்விருதுகளையும் அள்ளிக்கொள்ள வேண்டும் என்று அனைத்து ரசிகர்கள்சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்....
என் நீண்ட நாள் ஆசையும் நிறைவேறியது.....!....(ஹி ஹி )
அற்புதம்......
ReplyDeleteஇசையில் எல்லை கடந்த எம் இசை மன்னனுக்கு எம் நல்வாழ்த்துக்கள்....
Raayiz Razick
It's a Honor for the entire Tamil Community and Indians.
ReplyDeleteI wish him all the very Best and Wish for more Achievement.
Sashi
Atputham..mannikkavum enakku key board ill eppadi thamizh type pannuvadhu endru theriyaadhu....
ReplyDeleteNaan atpudham endru sonnadhu isai puyalin vetriyayum, ungazhadhu ayaraadha uzhaippayum thaan..
Ungazh kadina uzhaippu menmelum peruha vaazhthuhiren..
Endrum Anbudan
Arul
Gud wrk....sis....abt d rahuman...!
ReplyDeletenyc articl........xptng morer post....like dis.....!
Al d best....>!
good good
ReplyDeleteவாழ்த்துக்கள் டயானா .. தமிழில் நல்ல ஒரு ஆரம்பம்.. தொடரவும்.
ReplyDeleteஎழுத்துப் பிழைகள் இல்லாததும் சிறப்பு..
எ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுக்கள். அவரின் இசைப்புயலில் மெய் மறந்தவர்களுள் நானும் ஒருவன். :-))))
ReplyDeleteதமிழில் எழுதும் தங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.