Friday, 11 December 2009

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR


பிரம்மிக்க வைக்கும் தொழிநுட்ப விருந்தின்றி நீண்ட நாட்களாக வாடி வறண்டு வற்றிப்போய் இருக்கின்ற கண்களுக்கு முப்பரிமாணவிருந்து படைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது 'அவதார்'.

டிசம்பர் 18 - என்னதான் இந்த திகதி வேட்டைக்காரன் திரைப்படத்தை ஞாபகப்படுத்தினாலும், அதிக பட்ச பரபரப்புடன் உலகை ஒரு உலுக்கு உலுக்கத்தயாராகி வரும் AVATAR, வசூல் சாதனைப்படமான
TITANIC ஐ கவிழ்க்கும் திரைப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

JAMES CAMERON இன் சாதனையை இந்தப்பன்னிரெண்டு வருட காலத்துக்குள் யாரும் முறியடிக்காததால் அவர் அவ(தா)ர் மூலமாக தானே முறியடிப்போம் என கிளம்பிட்டாரோ ?என்னவோ ..

புதுவித சாகச தொழினுட்பங்கள், அவற்றின் ஆழமான பயன்பாட்டை நாம் பொதுவாக JAMES CAMERON இன் திரைப்படங்களில் காணலாம். சிறந்த உதாரணங்கள் THE TERMINATOR - 1984 , ALIENS -1986 , TERMINATOR 2 : JUDGEMENT DAY -1991, TITANIC -1997

அந்தவகையில் இந்த AVATAR உம் தொழிநுட்பத்தில் புதுவித அவதாரமெடுக்கிறது.
இந்த தொழிநுட்ப வேலைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் என கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்த தாராள செலவை செய்திருக்கும் நிறுவனம் லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட் (LIGHT STORM ENTERTAINMENT). 20TH CENTURY FOX வெளியிடுகிறது .

என்னதான் உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் இது டிசம்பர் 18 வெளிவர இருந்தாலும் நேற்று லண்டனில் பிரிமியர் கட்சிகள் அரங்கேறி விட்டது. படத்தை பார்த்தவர்களிடம் இருந்து நேர் கருத்துக்களை அறியக்கூடியதாகவும் உள்ளது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என உறுதியாக நம்பப்படுகிறது. இந்த AVATAR , TITANIC பட வசூல் சாதனையை முறியடிக்கும் இந்தப்படத்தின் 3D தன்மை அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திகொடுக்கும் என பரவலாக பேசப்பட்டாலும், சாதரணமாக எல்லாத்திரையரங்குகளிலும் இவ்வசதியைஎதிர்பார்க்க முடியாது. எனவே இந்த AVATAR அவதார சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்தக்கதையின் சுருக்கம்


கடற்படை நாயகன் 'ஜாக்'குக்கு (சாம் வொர்திங்டன்) ஒரு போரில் காயமடைந்து அவனுடைய இடுப்புக்குக்கீழ் பகுதி செயலிழந்து போன நிலையில், பண்டோரா என்ற 'நவிகள்' வசிக்கும் கிரகத்துக்கு போகும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு வசிக்கும் இந்த நவிகள் மனிதர்களை விட அதியுயர் சக்தி படைத்தவர்கள். அவர்களையும் அந்தக் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்யும் குழுவில் இணையும் நாயகனுக்கு தனது கால்களை பெற்று மீண்டும் நடமாடத்தக்கதான சந்தர்ப்பமும் அமைகிறது. சாதரணமாக பண்டோரா கிரகத்தில் மனிதர்கள் சுவாசிக்க முடியாது. இதன் காரணமாக மனித DNA கொண்டு நவிகளை உருவாக்கி அந்த கிரகத்துக்குள் நுழையவிட வேண்டிய தேவை ஆராய்ச்சி குழுவுக்கு ஏற்பட இந்தத்தேவை ஜாக்குக்கு புது அவதாரத்தை கொடுக்கிறது.3 மீட்டர் உயரம், நீலநிற உடல், நீண்ட வால் என ஒரு புதுவித தோற்றத்தை தன் வசப்படுத்திக்கொள்கிறார்.

''The Avatars are living, breathing bodies that are controlled by a human "DRIVER" through a technology that links the driver's mind to their Avatar body ''.

பண்டோரா கிரகத்தின் அழகிலும் புதுமைகளிலும் தன்னை மறக்கும் நாயகன் நவிப்பெண் ஒருத்தியிடம்(நேத்ரி) தன் மனதை பறி கொடுக்கிறான்.

இனி ஜாக் சாயப்போவது எந்தப்பக்கம் மனிதர்கள் பக்கமா ?? நவிகள் பக்கமா ??

படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்க. இப்போது முன்னோட்டம் மட்டும் உங்களுக்காகஇந்தப்படத்திலும் காதலின் சாயத்தை இயக்குனர் தொட்டிருப்பதால் TITANIC போலவே அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இதை மனது மறக்காத ஒரு படைப்பாக்குவார் என்று நம்பலாம்.

இந்தப்படம் ஜேம்ஸ் கமேரோனின் கனவுப்படங்களில் ஒன்று. காரணம் சிறுவயதில் இவர் வாசித்த பல அறிவியல் புனைகதைகள் அவை தந்த பாதிப்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி தந்துள்ள படம் தான் இந்த 'அவதார்' என்பதை அவருடைய நேர்காணல்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது.

TITANIC திரைப்படத்தின் பின் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்தப்படத்துக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அது மட்டுமல்ல இதில் அவர் பயன்படுத்தியுள்ள 3Dடெக்னாலஜி ஹாலிவுட் சினி உலகின் இன்னொரு படி.
அத்தோடு முகபாவங்களை மிகத்துல்லியமாக படம்பிடித்து அதை டிஜிட்டல் உருவங்களோடு ஒன்றிணைத்து, நடிகர்களை கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இணையாக ஓட விட்டு, நடிக்கவைத்து நிஜம் எது கிராபிக்ஸ் எது என பிரித்தரியாதளவுக்கு தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறாராம். இந்தப்படத்தில் 40 % உண்மை, 60 % - கணணி வித்தை என்றாலும் படம் பார்க்கும் போது அது தெரியாதளவுக்கு இருக்கவேண்டும் என அதிக சிரத்தை எடுத்து தன் கனவுப்படத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்திருக்கும் JAMES CAMERON , இந்தப்படத்துக்கான ஆஸ்கார் கனவுகளோடும் காத்திருக்கிறார்.

நாமும் காத்திருப்போம் படத்தைப்பார்ப்பதற்காக....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

வந்தியத்தேவன் said...

ட்ரையிலர் பார்த்தேன் மிரட்டியிருக்கின்றார்கள். ஆனால் நம்ம நாட்டில்(லிபேர்ட்டி என நினைக்கின்றேன்) 23ந்திகதிதான் வெளியாகின்றது. இல்லையென்றால் வேட்டைக்காரனுக்குப் போகாமல் அவதாருக்கு போயிருப்பேன்.

butterfly Surya said...

டயானா பகிர்விற்கு நன்றி.

நான் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். அருமையாக எழுதி விட்டீர்கள். வாழ்த்துகள் தோழி.

அன்புடன்

சூர்யா

Nimalesh said...

nambamudiyavillai nambamudiya vaillai aduthu aduthu 2 pathivu from Dye.... he he he lol
yea nice da ur vimarsanam......waiting for the movie to watch...

saisayan said...

akka, i m waitng this film.. i already bought ticket too. here now no tickets .. all are waitng ....

tralier is going every theater ...

elarum veddaikarana vida ithaithan expect panrnka..!!!

SUBBU said...

சூப்பர் டயானா!!!

LinkWithin

Blog Widget by LinkWithin