Thursday 6 May 2010

விட்டகுறை தொட்டகுறை 'திரு திரு துரு துரு'


ரொம்ப ஓவராத் தான் ஒய்வு எடுத்துட்டேன் போல பதிவுலகத்திலிருந்து ... புரியுது உங்கள் ஆதங்கம்... வலைப்பூவை எட்டிப்பார்த்துட்டு ஏமாற்றத்தோடு தொடர் கதைக்கான முடிவு கிடைக்காமல் போன அனைவரும் .... மன்னித்து மறப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...
மீண்டும் உங்கள் அன்புச் சகோதரி- நண்பி (நான்தான்) பதிவுக்களத்தில்..
தொபுக்கடீர்னு குதித்து இனியும் ஏமாற்றாமல் இருக்க வந்திருக்கிறேன்..............
துரு துரு டயானா திரு திரு முழியுடன்.... தொடர்கிறது....

ஞாபக மீட்டலுக்காக கடந்த பதிவிலிருந்து............

//அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது..
அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....
''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல்படபடக்க....
என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது....//



இனி

மின்னல் வேகத்துல ஒரு யோசனை .. அப்டியே ஒய்யாரமாய் மனசோரத்தில் ஆட

மாணவத்தலைவியிடம் துணிந்து பொய் சொன்னேன்...

இந்த cassette ...... (அதிபர்)SISTER 'S FEAST க்காக நடனம் பழக கொண்டுவந்தது.....என்று ஒருமாதிரி சொல்லி சமாளிச்சாச்சு என்றாலும்.... மாணவத்தலைவி என்ன விட்டபாடில்ல...
பதில வந்து SISTER 'ட்ட(அதிபர்) சொல்லு என்று கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டா.....

ஒரு மாதிரி SISTER 'ட்ட (அதிபர்) உங்கட FEAST 'க்காகத்தான் டான்ஸ் பழக CASSETTE 'ஐ திருட்டுத்தனமாக கொண்டு வந்தேன் என்று சொல்ல..அவர் என்ன ஒருக்கா மேலேயும் கீழேயும் பார்த்துட்டு....ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டு... சரி பரவாயில்ல ... ஆனா எங்க PLAYER ? CASSETTE 'ஐ மட்டும் வச்சுக்கொண்டு பிளேயர் இல்லாம எப்படி ? என்று கேட்ட கேள்வியில ஆடிப்போன நான் அரைகுறையாய் ஒரு முழுசு முழுசிப்போட்டு.... இன்னொரு பொய்யை எடுத்து விட்டேன்... என் உயிர்த்தோழி சங்கீதா கொண்டு வாறன் என்று சொன்னவ ஆனா மறந்துட்டு வந்துட்டாவாம் என்றேன்.. அடுத்து அவளையும் கூப்பிட்டு விசாரணை...

எனக்கு உசிரே போன மாதிரி ஆயிட்டுது.... அவள் என்னத்த உளறிக்கொட்டப் போறலோன்னு...
நல்லவேளை சாடிக்கேத்த முடியா அவளும் ஒரு மாதிரி சமாளிச்சா...

பாதி நம்பியும் பாதி நம்பாமலும் ஒரு மாதிரி 1/2 மணித்தியாலத்தில் எங்கள போக விட்ட SISTER (அதிபர்).... ''FEAST நாளில் நல்ல ஒரு PERFORMANCE தரவேண்டும்'' என்று கட்டளையிட்டது....மட்டும் தான் எங்கள் காதில் விழுந்தது... தப்பிச்சா போதும் என்று ஓடி வந்து வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டோம்...

பிறகென்ன இடை வேளையில்
அப்படியே மாணவிகள் புடை சூழ ''நடந்தது என்ன'' பாணியில் இருவருமாக அதிபர் அலுவலகத்துக்குள் நடந்தவற்றை விளக்கினோம்...

கதம் கதம் ..............


என்ன .... இன்னும் என்ன முடிக்க விடுறீங்க இல்ல ............ஓஓஓஓ FEAST நாளில் நாங்க PERFORM பண்ணினது எந்தப்பாட்டுக்குன்னு கேட்குறீங்களா ??
இதோ இந்தப்பாட்டுக்குதான்....ஆனா இது ''கண்டு கொண்டேன் '' படப்பாட்டு அல்ல ஏனென்றால் 1999 இல் அந்தப்படப்பாட்டுக்கள் வெளியாகவேயில்லை..உண்மையிலேயே மாட்டுப்பட்டது 'தாஜ்மஹால்' காஸ்செட்டே(CASSETTE..) ஆனால் அதன் மேலுறையில் ''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் விரைவில்'' என இருந்தது.... ஹி ஹி..எல்லாம் ஒரு திருப்பம்தான்...

ஆசிரியர் தினத்துடன் சேர்த்தே SISTER ' ஓட FEAST ஐயும் கொண்டாடினோம் 1999 இல்...
(அறிவியல்-போட்டி காரணமாக நேரம் போதவில்லை எனவே A . R . ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியான ஒரு குட்டிப் பாட்டைத்தேர்ந்தெடுத்து பழகி ஆடினோம்)



பட்டப்பகலில் சூரியன் மந்த கதியில் காய்ந்து கொண்டிருந்தபோது... நாங்க நிலா காய்கிறது பாட்டுக்கு ... ததிங்கினத்தோம் தத்தோம் ....



இந்த 'திரு திரு துரு துரு' அனுபவம் பிடித்திருந்தால் அன்புடன் பின்னூட்டமிடுங்கள்....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf