Showing posts with label TECHNOLOGY. Show all posts
Showing posts with label TECHNOLOGY. Show all posts

Thursday, 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 10 September 2009

நோ நோ.. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே!



இன்று 09.09.09 இல்
இலங்கையில் இருந்து கொண்டு துபாயில் நடந்த ஒரு விஷயம் பற்றி தான் சொல்லப்போறேன். இனிவரும்காலங்களில் போக்குவரத்து புரட்சிகளில் ஒன்றை நினைவுகூரும் ஒரு நாளாக அதுவும் துபாயில் மெட்ரோ ரயில் விடப்பட்ட நாளாக இன்றைய நாளானது நினைவுகூறப்படும் என்பதை இன்றே நான் கூறுகிறேன்.(ஹி ஹி.. சத்தியமா நான் தீர்க்கதரிசி இல்லை.. தகவல் திரட்டுதரிசி...)

உலகநாடுகள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளில் ஒன்று வாகனநெரிசல்(Traffic Jam). இதிலிருந்து விடுதலை பெரும் நோக்கில் துபாயின் பாரிய போக்குவரத்துத் திட்டங்களில் ஒன்றான Dubai மெட்ரோ- Railway Technology இன் வெற்றிப்படியாக இன்றிலிருந்து சுரங்கப்பாதைகள், பாலங்களில் பயணிக்கின்ற மெட்ரோ அதிவேக ரயில்கள் விடப்பட்டுள்ளன.


இந்த மெட்ரோ ரயில் செல்லும் ரயில்பாதைகள் சில இடங்களில் கட்டடங்களையும் ஊடறுத்து செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் இன்னொரு சிறப்பம்சம்.


இந்த ரயிலில் ஜம்னு ஏறி உட்கார்ந்தீங்கன்னு வைங்க ... சும்மா ஒரு மணித்தியாலத்தில் துபாயின் Rashidiva இலிருந்து Jebel Ali வரை(52.1km) ஹாயா போகலாம் 31,999 பயணிகளோட சேர்ந்து. (கரெக்ட் உங்களையும் சேர்த்தா 32,௦௦௦௦௦௦000. கணக்குல நீங்க இவ்வளவு கெட்டிக்காரரா??)


இந்த குறித்த பயணப்பாதையில் சுமார் 29 நிலையங்கள் உள்ளன. அவற்றில் நான்கு சுரங்கப்பாதை வழியில் அமைந்துள. ஆனாலும் இந்த 29 நிலையங்களில் இன்று 10 நிலையங்கள் மாத்திரமே தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்பயணப்பாதை ரெட் லைன் எனப்படுகிறது. இதே போன்று கிரீன் லைன் எனப்படும் பாதையும் இன்னும் சில நாட்களில் திறக்கப்பட உள்ளது. இது Al Ittihad Square இலிருந்து Rashidiya வரை 22.5km நீண்டு காணப்படுகிறது.

மெட்ரோ ரயில் அமைப்பில் கில்லாடிகளான ஜப்பானியர்கள் தான் இந்த துபாய் திட்டத்தையும் வடிவமைத்து செயற்படுத்தியுள்ளனர்.

இத்தனை சிறப்புகளுடன் புரட்சி படைக்க உதித்த இந்த துபாய் மெட்ரோ ரயிலின் (ரெட் லைன் பாதை ரயிலின்) வெள்ளோட்டம் 09/09/09 இரவு 09 மணி 09 நிமிடம் 09 செக்கனுக்கு...இடம்பெற்றுள்ளது.

இதுல யார் யாரெல்லாம் இன்று பயணித்திருக்காங்கன்னா Sheikh Mohammed bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, மற்றும் அரச குடும்பத்தவர்கள், மந்திரிகள், வியாபார- வணிக பெரும்புள்ளிகள்.

(நாளை எனக்கு வேண்டப்பட்ட ஒருவரும் இதில் பயணிக்கிறார்... ஹி ஹி... அதனால எனக்கும் சந்தோஷமுங்கோ... )

காணக்கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை நீங்க பாக்கியசாலி தான்.. ஏனென்றால் துபாயில் இருக்கும் பலருக்கு இந்த விஷயமே தெரியாதாம்...இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருச்சே...

இனி இப்படி ஒவ்வொரு நாட்டிலும் மெட்ரோ ரயில்கள் புழக்கத்துக்கு வந்துவிட்டால்...
யாருமே இனி...." சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலேன்னு" பாட முடியாதே....(ரொம்ப முக்கியம்)

மேலதிக தகவல் பெற ஆசைப்படுவோர் இதை சொடுக்குங்கள்.
http://www.railway-technology.com/projects/dubai-metro/ - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday, 4 August 2009

பஞ்சாக்கும் FRING மூலம் 'ட்ரிங் ட்ரிங்'


கையடக்கத்தொலைபேசியானது .. இக்காலத்தில் 'தொல்லை'பேசியாகவும் மாறி வரும் சந்தர்ப்பத்திலும்கூட... இதன் பாவனையுடன் இணைய-வலைப்பின்னல் இணையும்போது சில குறிப்பிட்ட செலவுகளையும் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது.

குறிப்பாக கடல் கடந்து வாழும் எமது உறவுகள் நண்பர்களுடன் உரையாட, அவர்களுடன் தினமும் தொடர்பு கொள்ள சிக்கனமான வழிமுறைகளை தேடுகிறோம். தேடிக்கண்டதை பயன்படுத்துகிறோம். இப்படியான வழிமுறைகள் மூலம் முடியுமானவரை எமது அழைப்புகளுக்கான கட்டணங்களை குறைக்கக்கூடியதாய் இருப்பதோடு, நீண்ட நேரம் உரையாடக்கூடியதாயும் உள்ளது. இவற்றுள் இப்போது அதிக பாவனையில் இருப்பவை முகப்புத்தகம், இஸ்கைப், மேசென்ஜெர்,ICQ etc... என்பனவாகும்.

இவற்றோடு தற்போது மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தை பரப்பிவரும் தொழிநுட்ப முறையானது Internet Telephony Network இனை அடிப்படையாகக்கொண்ட FRING என்ற (peer-to-peer) வலைக்கட்டமைப்பு முறை மூலம் செயற்படும் Mobile VoIP ஆகும்.

Avi Shechter இதனை கண்டுபிடித்தவராக இருந்த போதும் இவரோடு இன்னும் இருவரும் இந்த கண்டுபிடிப்புக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் Boaz Zilberman மற்றும் Alex Nerst.
இந்த Fring மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் VoIP(Voice of Internet Protocol) மற்றும் PSTN(Public switched telephone network) இனூடாக செலுத்தப்பட்டு GSM தொழிநுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக செயற்படுத்தப்படுகிறது.

கைப்பேசியில் இந்த Fringஇனை தரவிறக்கம் செய்துகொள்வதன் மூலமாக Skypeஇலிருந்து Skypeஇற்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள முடியும். இதேபோல ஒலித்தொடர்பாடல் சம்பந்தப்பட்ட ஏனைய சமூகவலைப்பின்னல் தொடர்புடைய இணையத்தளங்களையும் FRING மூலம் பெற்றுப்பயன்பெறமுடியும்.
FRINGஇனை உங்கள் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய http://www.fring.com/default.asp இணைப்பினை Click செய்க.

அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி பயன்பெறுக.

பயன்படுத்திட்டு சொல்லுவீங்க பாருங்க ஒரு பன்ச்
"அழைப்புக்கட்டணங்களை பஞ்சாய் பறக்கச்செய்யும் FRING" அப்டீன்னு.

முக்கியகுறிப்பு : iPhone, iPod Touch, Windows Mobile, Nokia 5800 Music Xpress போன்ற மாடல்களுக்கு உசிதமானது.
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday, 26 July 2009

Continuum-Fingerboard


நீண்ட நாளாக இந்த குறித்த அம்சம் பற்றி பதிவிட எத்தனித்திருந்தேன். அதற்கான ஒரு முழுமையான தேடலிலும் மூழ்கியிருந்தேன். தேடுதலில் கிடைத்த அம்சங்கள் உங்களுக்கும் பயன் தரும் என்ற நோக்கில் ... இருவாரங்களுக்கு முன்னர் Continuum Finger Board என்ற இசைக்கருவி பற்றிய ஒரு தகவலைப்படித்து, அதுபற்றி அறிந்துகொள்ள உந்தப்பட்டதன் விளைவாக (அது என்ன தகவல்னு அறிய ஆசைப்படுறீங்க இல்ல..) அதாவது இசைப்புயல், எந்திரன் திரைப்படப்பாடலுக்காக இந்த Continuum Finger Board இசைக்கருவியை பயன்படுத்துகிறார் என்ற தகவலை வெள்ளித்திரை நிகழ்ச்சிக்காக பெற்றபோது உண்டான ஈடுபாடு!

இதன் அமைப்பு சாதாரணமாக நாங்கள் பயன்படுத்தும்/ கண்டிருக்கும் Music-Keyboard போலில்லாமல் (அதன் அமைப்பிலும் சரி அது தன்பால் கொண்டிருக்கும் தொழிநுட்பத்திலும் சரி) வித்தியாசப்பட்டிருக்கு. படத்தை பார்க்கும் போதே உங்களுக்கு புரியும்.

Lippold Haken (University of ILLINOIS) இனால் வடிவமைக்கப்பட்ட இக்கருவி இதுவரை உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
Touch Screen அமைப்பு இதன் சிறப்பம்சமாக இருக்கின்றது. அத்தோடு உருவாக்கப்படும் ஒலியை தொகுத்துத்தரக்கூடியமை, வேறு எந்த ஒரு (மீட்டப்படும்) இசைக்கருவியையும் கொண்டு செய்யமுடியாத ஒன்று!

இந்திய இசைத்துறையை பொறுத்தவரை இதை பயன்படுத்திய பெருமை இசைப்புயலை மட்டுமே சார்ந்து நிற்கிறது. மேலும் இக்கருவியை அவர் முதல் தடவையாக,ஒரு திரைப்படத்திற்காக பயன்படுத்தியது டெல்லி -௦06 "ரெஹ்ந து" என்ற பாடலுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்னொரு சிறப்பு - இந்த இசைக்கருவியை மீட்டியபடியே அந்தப்பாடலை இசைப்புயல் பாடியமை.

இந்த இசைக்கருவியை பயன்படுத்துகின்ற ஏனைய இசையமைப்பாளர்கள் மற்றும் இதைப்பயன்படுத்தி படைக்கப்பட்ட சில படைப்புகள்:

1) (Dream Theater's keyboardist) Jordan Rudess

a) Octavarium என்ற அல்பத்திலிருந்து "Octavarium" , "Sacrificed Sons" பாடல்கள்
b) 2007's Systematic Chaos இலிருந்து "The Dark Eternal Night" and "Constant Motion"
c) Black Clouds & Silver Linings என்ற அல்பத்திலிருந்து "A Nightmare to Remember", "The Count of Tuscany", "The Shattered Fortress" பாடல்கள்.
d) 2007 இல் வெளியான The Road Home அல்பம்


2) John Williams

Indiana Jones and the Kingdom of the Crystal Skull திரைப்பட BGM

3) Jay Metarri

4) John Paul Jones

5) Randy Kerber


இந்த இசைக்கருவியை பயன்படுத்துகிற சிலரில் ஆறு பேரின் பெயரை நான் கொடுத்துட்டேன். நீங்க இப்ப இரண்டு பேரின் பெயரையாவது முடிஞ்சா கண்டு பிடிச்சு பின்னூட்டமிடுங்கள்! (பின்ன இவ்வளவு விஷயம் நான் தேடிக்கொடுத்திருக்கேன்.. உங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்க வேணாமா?? ஹி ஹி..)

உங்கள் செவிகளுக்காக Continuum-Fingerboard பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் கீழே:
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf