Sunday 14 February 2010

''துறு துறு திரு திரு''வுக்கிடையில் காதல் கொஞ்சம் அதை கவிதை மிஞ்சும்


படித்து ரசித்த கவிதை அதுவும் ... காதலை விஞ்ஞானம், கற்பனையுடன் சேர்த்துக்குழைத்த கவிதை...

படித்து ரசித்ததால் பகிர்வதற்கு மனம் துடிக்கிறது ....


புவிஈர்ப்பினால் புவியில் விழுந்து காயப்பட்டுப் போகிறது ஆப்பிள்...

நல்லவேளை காதலின் ஈர்ப்பினால் தடுக்கிவிழும் போதெல்லாம்

என்மீதே விழுகிறாய்

காயமே இல்லாமல் !



நன்றி "கொஞ்சும் கவிதைகள் " (சப்ராஸ் அபூபக்கர் சொன்னது)

( நான் சொல்லும் நன்றி சப்ராஸ் அபூபக்கருக்கு முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு)




ITHU என்னன்னு பார்க்குறீங்களா ??


இதான்.... அந்தக்காலத்துல ஏவாளும், ஆதாமும் கடிச்சிட்டு மிச்சம் வச்ச ஆப்பிள்..


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 10 February 2010

துறு துறு டயானா... திரு திரு முழியுடன்!

எனது பள்ளி வாழ்க்கை பற்றி மட்டுமே எழுத புதிய வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமா என்று யோசித்தபோது 'கரவைக்குரல்' விடுத்த தொடர் பதிவுக்கான அழைப்பு இந்த wisdomblabla வை எட்டிவிட்டது. அதனால் இதிலேயே சில அனுபவங்களை தற்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மா வயிற்றுக்குள் இருந்து புரண்ட வேளையிலிருந்தே நான் இசைப்பிரியை, பைத்தியம், etc .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். விவரம் தெரிந்த பள்ளி வாழ்க்கையில் விட்டு வைப்பேனா ?? 1992 இன் பின் சொல்லவே தேவையில்லை... ARR இன் இசைக்கு மட்டுமே தனியொரு அடிமையாக இருந்தேன் என்றுகூட சொல்லலாம். ARR இன் இசை எப்படி வளர்ந்த வண்ணம் இருந்ததோ அதுபோலத்தான் என் குறும்புத்தனங்களும்....அடாவடித்தனங்களும்

எங்கள் பாடசாலைக்குள் CASSETTES எடுத்துச்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது... ஆனால் புதிய பாடல்கள் கொழும்பில் வெளியான உடனேயே 2 நாட்களில் என் கரம் கிட்ட வேண்டும் என்பது நான் என் உயிர்த்தோழிக்கு(சங்கீதா) இட்ட அன்பு வேண்டுகோள்...(1995 இல்- அவள் என் தோழியர் குழாமில் இணைந்தபோது)

இந்த புதுப்பாடல் CASSETTES களை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பவர் அவளுடைய கொழும்பு மாமா....


CASSETTES பரிமாற்றம் இடம்பெறுவது பாடசாலையில் தான்......


இன்றும் ஞாபகம் இருக்கிறது - ரங்கீலா, முத்து, லவ்பேட்ஸ், இந்தியன், காதல் தேசம், மின்சாரக்கனவு, இருவர், ரட்சகன், ஜீன்ஸ், என் சுவாசக்காற்றே, படையப்பா, காதலர் தினம், தாளம், சங்கமம், ஜோடி, முதல்வன், தாஜ்மகால் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...சுடச்சுட பாடல்களைப்பெற்று செவிமடுத்ததை....


கொழும்பு வாசிகளுக்கு இந்தப்பாடல்களைப் பெற்றுக்கொள்வது பெரிய விடயமே இல்ல.. ஆனா நுவரெலியாவில் இந்தப்பாடல்களை அவை வெளியான 2 , 3 நாட்களிலேயே பெற்றுக்கொள்வது பெரிய விடயம்...ஏனென்றால் ரெகார்டிங் கடைகளில் கூட அந்தப்பாடல்கள் வந்திருக்காது....இப்படியிருக்க... இந்தப்பாடல்களை வாண்டுகளாக இருந்த நாங்கள் வைத்திருந்தது எங்களைப்பொறுத்தவரை அந்தக்காலத்தில் பெரிய............. விஷயம் (இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது...)


பாடசாலையில் என்னதான் தடைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை உடைத்து, மீறி சில விஷயங்களை செய்துவிட்டு 'COLLARS -UP' பண்ணுவது எங்களுடைய பழக்கம்... ஹி ஹி ..(உங்களிடம் கூட இருக்குமே)


இப்படி நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக(பள்ளிநாட்களில் எழுதின கட்டுரை சிறுகதையெல்லாம் ஞாபகம் வருது) எங்கள் cassette பரிமாற்றம் இடம் பெற்று வந்தபோது ஒரு நாள் ..........

''டடாங் டம்'' (situation effect )

அந்த ஒருநாள் வகுப்புக்குள் திடீர்ச்சோதனை... என்னிடம் இருந்த cassette மாட்டிட்டுது...

அது ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'' பாட்டு cassette ...

சோதனைசெய்த மாணவத்தலைவி ''I have found it '' என்று சொல்ல....

''கண்டுபிடிச்சிட்டாய்யா கண்டுபிடிச்சிட்டாய்யா'' இப்படி மனசு வடிவேல் sytle இல் படபடக்க....

என்ன செய்றதெண்டு தெரியாம திரு திருன்னு முழித்து நின்றபோது.....
(தொடரும்)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday 9 February 2010

'மிஸ்'ஆக விடுவோமா ??

கிட்டத்தட்ட ஒரு மாதம் பதிவிடாமல் ஒய்வு எடுத்துக்கொண்டேன் போல.... (இப்டித்தான் சொல்லித்திரிய வேண்டி கிடக்கு வாசக நெஞ்சங்களிடம் இருந்து தப்பிக்க)

கடந்த ஆண்டில் என் கவனத்துக்கு புலப்பட்டும்கூட, மேற்கொண்டு எதிர்ப்பதிவிட முடியாமல் போனவற்றுக்கான பதிவாக இப்பதிவு....


1 )

http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_13.html

பதிவுக்கு சொந்தக்காரர் சகோதரன் சதீசன் சத்தியமூர்த்திக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்...அவர் என் வலைப்பதிவுக்காக அன்போடு தந்த 'SCRUMPTIOUS BLOG AWARD 'காக.


வெளிப்படையாக சொல்லப்போனால் நான் அடிக்கடி பதிவுகள் இடுவது கிடையாது.. எழுத 1000 - 1000 ஆசைகளும், யோசனைகளும் இருந்தாலும் பதிவிடுவதற்கான நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை...((

நேரம் கிடைக்கும்போது நண்பர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் தொடுப்புகளை வைத்து அவர்களின் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிடுவதோடு சரி... அதுவும் இப்போது குறைந்து வருகிறது....(((


சதீஷன் தம்பி நல்ல ஒரு படைப்பாளி....எந்த நேரமும் ஒருவித ஆர்வத்துடனேயே திரிந்து கொண்டிருப்பவர்....வெற்றி பண்பலையில் அவருடைய நிகழ்ச்சிகளை செவிமடுத்திருக்கிறேனேயொழிய தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது

அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தப்பதிவுலகம்தான்...

முதன் முதலாக நான் வாசித்த அவருடைய பதிவு கந்தசாமி - திரைப்படம் பற்றியது..

அந்தப்படம் வந்த ஆரம்பத்தில்... தாறுமாறாக விமர்சனங்கள் விதைக்கப்பட்டபோது.... இவருடைய விமர்சிக்கும் சிந்தனை சற்று வித்தியாசமாகவே இருந்தது.. இதுவே என்னை இவருடைய பதிவுகளை வாசிக்கத்தூண்டியது.. அத்தோடு அவருடைய பதிவுப்பக்க தலைப்புகள் சரவெடியாகவே இருக்கும்.. அவை வாசிக்கத்தூண்டும்..
இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து 'SCRUMPTIOUS BLOG AWARD' பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியே
...

2) http://enularalkal.blogspot.com/2009/12/2009-1.html அடிக்கடி என் வலைப்பதிவை எட்டிப்பார்த்து.. குறைநிறைகளை சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிக்கும் அன்புப்பதிவர் 'வந்தி' அண்ணா, தான் 2009 இல் ரசித்த பதிவுகள் பற்றிய ஒரு தொகுப்பைத் தந்திருந்தார் ..அதில் என்னுடைய ''அவதார்'' திரைப்படம் பற்றிய பதிவு அவரைக்கவர்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.. நன்றி !


பலரின் பதிவுகளை தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் சுடச்சுட பதிவுகள் தந்து அசத்துபவரும் கூட... தன் வேலைகளுக்கு மத்தியில் எப்படி பதிவுகள் பலவற்றை வாசிக்கிறார்- 'பின்'னூட்டமிடுகிறார் என்று... நான் அவரைப்பார்த்து வியந்ததுண்டு... தொடரட்டும் அவர் சேவை....


3) http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html எனது பள்ளி-வாழ்க்கை குறும்புத்தனங்கள், நண்பர்கள் பற்றிய பதிவை வேண்டி நின்ற கரவைக்குரல் - பாவம் என் பதிவுக்காக காத்திருந்து காத்திருந்தே அவர் குரல் கரைந்திருக்கும்.. இன்றுவரை அவருடைய மூச்சுப்பேச்சையே காணவில்லை... தாங்கள் எங்கே உள்ளீர்கள் ?? கொஞ்சம் வந்து விட்டுப்போங்கோ

அடுத்து அரங்கேறப்போவது உங்கள் பதிவுதானுங்கோ..!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf