Saturday 19 November 2011

பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !

என்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு ?? என்பவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.

நானும் முதலில் கேட்டபோது என்னது ????????? என்ன பழம்? என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆம்! பிரப்பம் பழம் தான்


நடந்தது இது தான் ? வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.
சாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)




பெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட
விருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......

முகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...
''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

பழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...
இந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும்? சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே !


பிரம்பு

இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

இப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf