Saturday 19 November 2011

பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !

என்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு ?? என்பவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.

நானும் முதலில் கேட்டபோது என்னது ????????? என்ன பழம்? என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆம்! பிரப்பம் பழம் தான்


நடந்தது இது தான் ? வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.
சாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)




பெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட
விருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......

முகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...
''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

பழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...
இந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும்? சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே !


பிரம்பு

இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

இப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 2 March 2011

அதிசய ராத்திரி - 2010 இன் சிவராத்திரி

சிறு வயது முதல் நான் மிகவும் விரும்பி அனுஷ்டித்து வரும் இந்த சிவராத்திரி தினம் இம்முறையும்.. கடிதென விரைந்திடும் காலச்சக்கரத்தில்..

ஆனால் இம்முறை விரதம் பிடிக்க முடியாத நிலை என்றாலும் விடிய விடிய விழித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை (புதிய உறவான எனது குழந்தையோடு...)
புதிய அனுபவம் தான்.....

இன்று இந்தப் பதிவின் நோக்கம் கீழே உள்ள காணொளியை கண்ணுருவோருக்கு புரியும்.

'கடந்த வருடம் நுவரெலியா காயத்திரி கோயில் வளாகத்தில்
கமெரா கைப்பேசியில் சுட்ட கண்கொள்ளா அதிசயக்காணொளி'

முகில்கள் சிவனின் கண்களை ( அப்படித்தான் இதை கண்ணுற்றோர் சொல்கிறார்கள் ) உங்களுக்கு புலப்படுத்துகிறதா ?

இன்று இரவுதோறும் பக்திப் பரவசத்தோடு சொல்வோம் 'ஓம் நமசிவாய'

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday 14 February 2011

உலககெல்லாம் ஒரு சொல்: ஒரு சொல்லில் உலகம் - காதல்


காதல் உள்ளங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday 28 January 2011

குடிப்போமா... தேத்தண்ணி ?

எப்படி போகுது வாழ்க்கை? உங்களைப்பார்த்து தான் கேட்கிறேன்...

ஆ... என்ன ... என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தீங்களா ?

பரவாயில்லையே ... உங்களைபோன்ற பதிவுலகவாசிகள் என்னை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க.... உண்மைய சொல்லவேண்டுமென்றால்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தொடர் ஒய்வு.. வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு
பதிவுலகையும் ஆசையுடன் எட்டிப்பார்க்க முடிகிறது....

கண்களும் மனதும் எட்டிப்பார்த்தாலும்
விரல்கள் ஒரு பதிவை இட்டுச்செல்லவே ஆசைப்படுகிறது.... அவற்றின்
ஆசையை நான் ஏன் கெடுப்பானேன்....?

எந்த ஒரு விஷயத்தை நாங்கள் வாழ்க்கையில் சந்தித்தாலும் அதில் முதல் முதல் நாங்கள் எதிர்கொள்ளும் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது..
பள்ளியின் முதல் நாள், முதல் காதல், முதல் முத்தம், ... இந்த வரிசையில் முதல்
வேலை கூட......


சக்தி பண்பலைக்குள் வரும்முன்னர் ஒரு தேயிலை நிறுவனம்(DILMAH -டில்மா) எனக்கு பல வேலைகளை கற்றுத்தந்தது...வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்காக....
அதுவும் உயர்தரத்தை முடித்துக்கொண்டு, பள்ளிவாழ்கையை நிறைவு செய்து கொண்டு, உலகை எதிர்கொள்ளும் புதிய உத்திகளை கற்றுக்கொள்ள எனக்கு உதவிய நிறுவனம் அது.. காரணம் அதனுடைய கட்டுக்கோப்பான ஒருங்கியம்.
ஒரு சாதாரண அடித்தள வேலையைக்கூட எவ்வாறு பூரணமாக செய்ய வேண்டும்... அதையே இன்னொரு மாதிரி சொல்வதென்றால் ''பக்காவா''
செய்வதற்கான ஆற்றலை கற்றுத்தந்த நிறுவனம்.

நான் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்றபடியால் ஆய்வுகூடத்தோடு சம்பந்தமான வேலையில் சேர வேண்டுமென்ற ஆவலில் தந்தையின் வழிநடத்தலுடன் இந்த
டில்மா(DILMAH) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் சேர்ந்தேன்.

இதில் எனக்கு முதல் வழங்கப்பட்ட பணி பொதிசெய்வதற்காக நிறுவனத்துக்கு
கொண்டுவரப்படும் தேயிலை மாதிரிகளை சுவைத்து தரப்படுத்துவது. 'Tea Taster' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்..
மிகவும் சுவாரசியமான வேலை ஆனால் ஒரு நாளைக்கு 100 மாதிரிகளை சுவைக்கும் போது வெறுத்தே போய்விடும்.

ஆனால் எனக்குள் ஒரு சந்தோசம் .. இந்த Tea Tasting என்பது எல்லாராலும் செய்ய முடியாத காரியம்.. காரணம் ஒரு தேநீர் மாதிரியை தொண்டையின் ஆரம்பப்பகுதிவரை இழுத்து நாவினால் அதன் தன்மையையும் தரத்தையும் உணர்ந்து குறிப்பில் எழுதி... வழங்கப்பட்ட மாதிரி முதல் கட்டத்தில் Auction இல் உடன்பட்டு பெறப்பட்ட தேயிலையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேநீர் மாதிரியை சுவைக்கும் போது அது கொண்டிருக்கும் சுவைக்கேற்ப தரப்படுத்தலாம். COLOURY , PLAIN , FAIR , THIN... இப்படி சுவையின் தன்மையை குறித்துக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். இதை எல்லாராலும் உணர முடியாது. இதற்கென பிரத்தியேகமான பயிற்சியும் அவசியம். ஆனால் எனக்கு தேவைப்பட்டது ஒரே ஒருநாள் தான். எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது கடவுளின் கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டேன். வேலையைத் தொடர்ந்தேன்.
நாளுக்கு நாள் தேயிலை வகைகளின் தன்மை, அவற்றின் உற்பத்தி, பரிசோதனைகள் என்று எக்கசெக்கமான அம்சங்களை தேடித்தேடி படித்துக்கொண்டேன். அவை மறக்க முடியாத நாட்கள்....
அனுபவங்கள்.

தேயிலை உடற்சுகாதாரத்தில் பங்களிப்பாற்றுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதயத்துக்கும் நன்மை பயக்கின்றது.

குறிப்பாக
Chrysanthemum Tea - இரவு பகல் பாராமல் மூளைக்கு அதிக வேலை கொடுப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea/Oolong Tea - உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுவோருக்கு, அசைவ உணவு உண்போருக்கு ஏற்றது

Green Tea - அதிக தூரம் பயணிப்போர் , மாசு நிறைந்த இடங்களில் பணியாற்றுவோருக்கு ஏற்றது

Green Tea + Flower Tea - அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை பார்ப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea + Green Tea - அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளவர்களுக்கு உகந்தது.


எப்போதும் கணனியோடு காலம் தள்ளுவோருக்கு எந்த வகையான தேநீரும் உகந்தது.
எனவே எப்போது கணனிக்கு முன்னால் நீங்கள் அமர்ந்தாலும் ஒரு கோப்பை தேத்தண்ணியோடு உற்கார்ந்து வேலையைப்பாருங்க.

அப்போ நான் போய்ட்டு வாறன் ... என்ன எங்கேயா ?? தேத்தண்ணி கோப்பைய எடுத்துக் கொண்டு வரத்தான்...


'TAA TAA' sorry TEA TAA

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf