Monday 27 April 2009

ஈகோவால் மடிந்த காதல் - Love Dies because of EGO!

Once upon a time there was an island,where all the feelings lived.
One day there was a storm in the sea and the island was about to get drowned.
Every feelings were scared but love made a boat to escape .
Then All the feelings boardered the boat..

Only 1 feeling was left.
Love got down to see who it was..It was Ego
Love tried and tried but ego wasn't moving, also the water was rising..
Every one asked love to leave him and come in the boat, but love was
made to love.

At last all the feelings escaped and Love dies with ego on the island..

Love Dies because of EGO!

So, Kill Ego And Save Love.....

Moral of the Story
'Argument wins the situations but loses the person. So when arguing with your loved ones, remember that situations is never more important than your loved ones.....' - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday 24 April 2009

'மைக்ரோசாப்ட்' கணிப்பான் ஃபெயில் ஆயிடுச்சு!

Microsoft's Calculator failed in following calculation.

எதுல... எப்படி எப்படி பெயில் ஆயிடுச்சுன்னு கேட்கிறவங்க.....

இப்ப .... அப்படி அப்படி

இந்த வழிமுறையூடாக சென்று கணிப்பானை பெற்றுக்கொள்ளுங்கள் Start-->Run-->type Calc and Check the following...

2704/50 = 54.08 Works Fine ( விடை கிடைக்கும் )
2704/51 = 53.01960784 Works
Fine ( விடை கிடைக்கும் )
2704/52 = Try yourself Doesn't Work( தலைகீழா நின்றாலும் விடை கிடைக்காது )

எனவே இந்த விடைய சரியா கொடுக்க முடியாததால மைக்ரோசாப்ட் கணிப்பான் ஃ பெயில் ஆயிடுச்சு என்ற முடிவுக்கு வரலாமில்லையா??(Microsoft Calculator failed)

வாசிச்சது போதும் நீங்களும் ஒருக்கா ட்ரை பண்ணிப்பாருங்க....

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday 23 April 2009

இது நல்ல கேள்வி: நம்பர் 1-(டயானாவின் சந்தேகம்)


என்னோட சின்ன வயசில என்னோட அப்பா, அம்மா, பள்ளி ஆசிரியர்கள் ஏன் என்னோட நண்பிகள் கூட.... உலகம் போற்றும் சில சில மேதைகள் தங்களோட பள்ளிப்பருவத்தில எப்டியெல்லாம் கஷ்டப்பட்டு படிச்சாங்கன்னு கதை கதையா சொல்லுவாங்க... எல்லாத்தையும் நானும் பொறுமையா கேட்டுட்டு இருப்பேன்..(வேற என்னத்த செய்ய ?)

இவங்க எல்லாம் சொன்னாங்க ...
தொலைகாட்டிய கண்டு பிடிச்சாரே 'கலிலியோ கலிலி' அவர் நிலா வெளிச்சத்தில படிச்சாராம்.. அப்புறம் இந்த 'சேக்ஸ்பியர்' இருக்காரு இல்லையா ? அவர் மெழுகுதிரி வெளிச்சத்துலதான் படிச்சாராம்... நாங்க எல்லோருமே லவ் பண்ணி லவ் பண்ணி பேசுவோமே தொலைபேசி.... அத கண்டுபிடிச்சாரே 'கிரகாம் பெல்'.. விளக்கு வெளிச்சத்திலதான் படிச்சாராம்.

அப்புறம் யாரோ இன்னொரு புண்ணியவான்கூட மின்மினிப்பூச்சி வெளிச்சத்துலதான் படிச்சாராம்(காதுல பூ சுத்தினாங்க)

எல்லாம் சரி..... இப்போ என்னோட கேள்வியெல்லாம் என்னன்னா
"இவங்க அத்தனை பேரும் பகலில் என்ன செய்தாங்களாம் ????"

பி.கு :( சத்தியமா இந்த கேள்விய ரூம் போட்டு யோசிக்கல)


ப்ளீஸ் யாரவது என்னோட சந்தேகத்த தீர்த்து வைப்பீங்களா ??? - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

உலககோப்பைக்கான 'நீர்மூழ்கிக்கப்பல் ஓட்டப்போட்டி 2009'



பின்ன வேற என்னத்த கண்ணுங்களா எதிர்பார்த்தீங்க ?? நீர் மூழ்கிக்கப்பல்கள் எந்த காலத்துல நீர்பரப்புக்கு மேல ஓடியிருக்கு...ஹி ஹி ...

'சும்மா டைம் பாஸ் மச்சி'

உருப்படியான பதிவோட நாளை மறுதினம் சந்திக்கிறேன்.... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday 15 April 2009

Why breakfast with yogurt is important....?

புதுவருஷத்தில எதாச்சும்பிரயோசனமா இருக்கட்டுமேன்னுஒரு ஹெல்த் டிப் ...அவ்வளவு தாங்க

(முக்கிய குறிப்பு :இங்கிலீஷ்வாசிக்கிறது போர்ன்னு நினைச்சா, தயவு செய்து வேற பதிவுக்குபோய்டுங்க)

"Importance of having Breakfast"

Breakfast can help prevent strokes, heart attack and sudden death. Advice on not to skip breakfast!

Healthy living. For those who always skip breakfast, you should stop that habit now! You've heard many times that "Breakfast is the most important meal of the day." Now, recent research confirms that one of the worst practices you can develop may be avoiding breakfast. Why?


Because the frequency of heart attack, sudden death, and stroke peaks between 6: 00a.m. and noon, with the highest incidence being between 8: 00a.m. and 10:00a.m.What mechanism within the body could account for this significant jump in sudden death in the early morning hours? We may have an Answer. Platelet, tiny elements in the blood that keep us from bleeding to Death if we get a cut, can clump together inside our arteries due to Cholesterol or plaque buildup in the artery lining. It is in the morning hours that platelets become the most activated and tend to form these internal blood clots at the greatest frequency.

However, eating even a very light breakfast prevents the morning platelet activation that is associated with heart attacks and strokes. Studies performed at Memorial University in St.Johns, Newfoundland found that eating a light, very low-fat breakfast was critical in modifying the morning platelet activation. Subjects in the study consumed either low-fat or fat-free yogurt, orange juice, fruit, and a source of protein coming from yogurt or fat-free milk. So if you skip breakfast, it's important that you change this practice immediately in light of this research. Develop a simple plan to eat cereal, such as oatmeal or Bran Flakes, along with six ounces of grape juice or orange juice, and perhaps a piece of fruit. This simple plan will keep your platelets from sticking together, keep blood clots from forming, and perhaps head off a potential Heart Attack or stroke. So never ever skip breakfast
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday 12 April 2009

இன்டர்நெட் உடைமைகள் ஜாக்கிரதை !


அன்பார்ந்த நண்பர்களே,

இன்று எனது வலைப்பூவினை எட்டிப்பார்த்த நீங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதை என்னால் உணர முடிகிறது.

ஒரு முதுகெலும்பில்லாதவன் இட்ட கீழ் கண்ட ஒரு பதிவுதான் அதற்கான காரணம் என்று நான் சொல்லவேண்டுமா என்ன ?

HACKED!






PROJECT ZGF5bmEgYmxvZw== |client: *hidden*|
Credits: SpIdEr BalL


STOP BLOGGING IN BLOGGER! USE WORDPRESS!


இன்று நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர் என்னுடைய மின்னஞ்சல் முகவரி, வலைப்பூ மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றை திருடி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தான் அந்த 'ஹக்கர்'.

ஏனோ என்ன காரணமோ .... என்று எண்ணி நான் குழம்பவில்லை! காரணம் இப்படியான விடயங்களை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன். எதிர்கொள்ளத் தயாராகவும் இருந்தேன்.

இந்த உலகில் ஒருவர் நல்லவிடயங்களை செய்து கொண்டு போனால் அதை கெடுத்து குட்டிச்சுவராக்கவென்றே ஒரு கும்பல் அலைகிறது. அது எந்த துறையாக இருந்தாலும்கூட.. விதிவிலக்கல்ல...எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.
போட்டி பொறாமை வஞ்சகம் நிறைந்த உலகில் இது இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

உண்மையிலேயே அந்த 'ஹக்கரை' நினைக்கும்போது எனக்கு பரிதாபமே மேலிடுகிறது. அவன் நினைத்தும்கூட பார்த்திருக்க மாட்டான்..அவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த (எனக்கு உரித்துடைய) சகல இன்டர்நெட் சம்பந்தப்பட்ட தொடர்பாடல் சொத்துக்களையும் மீள இந்த டயானா பெறுவாள் என்று! பாவம் மீள என்னுடைய சொத்துக்களை நோட்டம்விட அவன் எத்தனிக்கும்போது ஏமாற்றமே அவனுக்கு மிஞ்சப்போகிறது...( நெஞ்சு வெடிச்சிடுமோ?? )

எது எப்படியோ எனக்கும் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது இன்று..அதேவேளை இது தொடர்பான சில முக்கிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து, நீங்களும் இந்த மாதிரியான நிலைமைக்கு முகம்கொடுக்காதவண்ணம் உங்களை, உங்கள் சம்பந்தப்பட்ட வலைய தொடர்பாடல் உரித்துகளை கட்டிக்காப்பாற்றும் ஒருவாய்ப்பு எனக்கு கிடைத்ததை இட்டு எனக்கும் சந்தோஷமே!

அந்த முக்கிய அம்சங்களோடு அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்!
ஓகேயா ?

இதுவரை என் வாழ்க்கையில் எத்தனை தடைகளை, சோதனைகளை, சவால்களை சந்தித்திருப்பேன்.
இதெல்லாம் ஜுஜுபி எங்களுக்கு .... என்ன நான் சொல்றது சரிதானே ?

(உங்க கேள்வி :
எல்லாம் சரி யாரந்த ஹக்கர்??.... கண்டுபிடிச்சாச்சா ?? அவனை என்ன செய்தீங்க?

எனது பதில் :
நிச்சயம் தெரிஞ்சிக்க ஆசப்படுறீங்களா ?? ம்ம் சொல்லுங்க ?? உங்க ஆர்வத்தை பொறுத்து பதில் சொல்கிறேன் அடுத்த பதிவில்)




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

THIS BLOG IS HACKED!


HACKED!






PROJECT ZGF5bmEgYmxvZw== |client: *hidden*|
Credits: SpIdEr BalL


STOP BLOGGING IN BLOGGER! USE WORDPRESS!




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Tuesday 7 April 2009

பேருந்தில் நொந்தபோது !

தினமும் காலை வீட்டு அலுவல்களை முடித்துக்கொண்டு சுமார் 7 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டேன் என்றால் தொடர்ந்து ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலம் வரை பேருந்து.. பேருந்து... பேருந்து... தான். அதாவது 3 பேருந்துகள் மாறித்தான் பன்னிபிட்டியவை அடைய வேண்டும். இருப்பிடத்திலிருந்து அளுத் பாலம (புதிய பாலம்) வரை 187(ஜாஎல), பின் அதிலிருந்து பொரெல்ல வரை பயணிக்கும் 154 (அங்குலான)அல்லது 135(களனி), அதன் பின் தாலாட்டும் பேருந்து 174(கொட்டாவ).

ஒரு புதிய நாளை இனிய நாளாக எண்ணிக்கொண்டு பயணத்தை தொடங்கி, இந்த பேருந்துகளில் ஏறி இறங்கும் போது ச்சே ..என்னடா வாழ்க்கை இது என்றாகி விடும். இப்ப இத வாசிக்கும் உங்களில் பலர் பேருந்தில் பல கசப்பான அனுபவங்களுக்கு முகம் கொடுத்திருக்கலாம். அதோட சேர்த்து எனது அன்றாட அனுபவமும் இங்கே..சாராம்சமாக... ஆனாலும் கொஞ்சம் காரமாக...

நமது நாட்டைப் பொறுத்தவரை எத்தனையோ விடயங்கள் கவனிக்க வேண்டியவர்களால் கவனிப்பாரற்று கிடக்கும் நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் குறிப்பிட்ட சில பேருந்து கண்டக்டர்கள், பயணிக்கு தர வேண்டிய மீதி 1 அல்லது 2 ரூபா(கூடுதலான சந்தர்ப்பம்) அல்லது சில வேளை அதற்கும் மேற்பட்ட தொகையினை தருவதில்லை. உதாரணத்துக்கு வத்தளையில் இருந்து (அளுத் பாலம) புதிய பாலத்துக்கு 9 ரூபா. மீதியாக 1 ரூபா தரவேண்டிய நிலையில், கண்டக்டர் சொல்லும் பதில் 'இறங்கும் போது வாங்கிசெல்லுங்க'. காலையில் பயணிக்கும் வண்டிகளில் எல்லாமே எம்மை நிலைப்படுத்தி 'பாலன்ஸ்' பண்ணி நிற்க முடியாத நிலையில் பயணிப்பவை. அந்தளவுக்கு அடைந்து கொண்டுதான் போகும்.(இதை நாங்க 'சமன் பஸ்' என்று சொல்லுவோம்: அதாவது ஒரு 'சமன் டின்னுக்குள்' எப்படி மீன் அடைக்கப்படுகிறதோ அதவிட மிக இறுக்கமாகவும் மூச்சுவிட முடியாத நிலையிலும் பஸ்சுக்குள் பயணிக்கும் நாங்களும்) புட் போர்டில் ஆள் நிறைந்து வழிந்தாலும் கூட ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று நிதானிச்சுதான் வண்டிகள் பயணிக்கும்(ஒரு சில விதி விலக்கானவை). இப்படிப்பட்ட வண்டிகளில் பயணிக்கும்போது ஒரு இறங்கு வழியில் இருந்து கண்டக்டர் நிற்கும் மற்றைய இறங்கு வழிக்கு செல்லமுடியாது.(செல்வதாயின் நடுவில் நிற்கும் எல்லோரையும் இடித்துதள்ளிக்கொண்டு தான் இறங்க வேண்டும்) சரி இறங்கி கண்டக்டர் நிற்கும் மற்றப்பக்க இறங்கு வழிக்குச்சென்று மீதியினை வாங்குவோமென்று நினைத்துப்போனால் கண்டக்டர் மீண்டும் உள்ளே போய்விடுவான். அதுக்கு பிறகு எங்க மீதியை வாங்கிறது... கோவிந்தா.... கோவிந்தா!

இது ஒரு புறமிருக்க பல நேரங்களில் கண்டக்டர் எங்களிடமே 1 ரூபா சில்லறை கேட்பது. இத கேட்கிறபோதுதான் இன்னும் கடுப்பாகும். காரணம் மூட்டை முடிச்சுகளோடு பேருந்தினுள் ஏறி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வேதனையோடு நின்று கொண்டு இருக்கும் போது 'ஒரு ரூபா தா', 'இரண்டு ரூபா தா' என்று உயிரை எடுப்பான். அதுவும் பல சந்தர்ப்பங்களில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மீதியை வைத்துக்கொண்டுதான் சில்லறைகளை எங்களிடம் கேட்டு நச்சரிப்பான். இல்லை என்று சொன்னால் அதுக்கு வேற எங்களையே ஏசுவான். இப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒரு 'அந்நியன்' வரமாட்டானா என பல தடவை மனசுக்குள் கேட்டுப்பார்த்ததுண்டு (நிறைய தமிழ் சினிமாப்படம் பார்ப்பதால வந்த வினை)
சிலநேரங்களில் அவனுடைய வசவு தாங்கமுடியாமல் நானே எதிர்த்துக்கேள்வி கேட்டு வாதாடி சண்டைபோட்ட சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.(பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா, அதுவும் அநியாயம் நடக்கும்போது சும்மா இருக்க முடியாது)

இதே கதி தான் 154 இலும். அதில் இன்னொரு கொடுமை இருக்கு. அதாவது அந்த பேருந்துக்காக புதிய பாலத்தில் காத்திருக்கும் போது, புட் போர்டில் கால் வைத்து ஏற முடியாத நிலையில் தான் வரும். இந்தப்பேருந்தில் ஏறுவதற்க்கு அப்படி ஒரு போட்டி. சுமார் காலை 7.20 இலிருந்து 8. 30 வரை பொரெல்ல நோக்கி பயணிப்போர் இந்த அனுபவத்துக்கு நிச்சயம் முகம் கொடுத்திருப்பர். கொடுமையிலும் கொடுமையான விஷயம். 'கரணம் தப்பினால் மரணம்' எனும் அளவுக்கு பயணிகள் ஒருவரை ஒருவர் இடித்துத்தள்ளிகொண்டு உள்ளே செல்ல இடமில்லாத அந்த பஸ்சில் ஏறும் கொடுமை.. அப்பப்பா.... அதை பார்த்து அல்லது அனுபவித்தால் தான் தெரியும்.

ஒரு பெண் என்ற ரீதியில் நான் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சினை, சில 'சொறிஞ்சான் கேசுப்பொறுக்கிகளால் '(மன்னிக்க வேண்டும், கீழ்த்தரமான சொற்பிரயோகத்துக்காக: இதை விட எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை) அனுபவிக்கும் பாலியல் துன்புறுத்தல்கள். என்னைப்போன்ற எத்தனையோ பெண்கள் இந்த துன்புறுத்தல்களுக்கு விதி விலக்கல்ல. அந்தளவுக்கு இப்படிப்பட்டவர்களின் தொல்லை நாளாந்தம் தொடருகிறது.

இவ்வாறான கேசுகளை இனம் கண்டு தவிர்ப்பதெப்படி ?

1) எமக்கு பின்னால் வந்து நின்று கொண்டு எம்மீது சாய்ந்து அந்த சொ.கே. பொ அதாங்க 'சொறிஞ்சான் கேசுப் பொறுக்கிகள்' உரசத்தொடங்கும்போது..உஷார்..
நெரிசல் காரணமா யாரோ சாதாரணமா மேலே விழுறாங்க என்று நாங்க நினைச்சாலும், சிறிது நேரத்தின்பின் கொடுமையான அருவருக்கத்தக்க சொறிதல் தொடங்கும். எனவே யார் வந்து பின்னால் நின்றாலும் முதலே முறைச்சுப்பாருங்க: பின்னால நிற்பவன் நல்லவனா இருந்தாகூட வேறு வழியில்லை

2) 'கள்ளு' குடிச்ச பார்வை வீச்சு காட்டாயம் இந்த சொ.கே.பொ.க்களிடம் இருக்கும்.

3) 'சீட்'(இருக்கை) கிடைச்சு உட்காரும்போது பக்கவாட்டில் நின்றுகொண்டும் இந்த கேசுகள் உரசும். உடனேயே எழும்பி இருக்கையை அவனுக்கு கொடுத்துட்டு நீங்க நில்லுங்க.

4) பஸ்சில் சீட்டுகள் ஏராளம் காலியாக இருக்கும்போது நம்ம பக்கத்துல தேடிவந்து உட்காரும் இந்த சொ.கே.பொ.க்கள். அப்படியான சந்தர்ப்பங்களில், உட்கார்ந்துள்ள இருக்கையை விட்டு இன்னொரு காலி இருக்கைக்கு மாறுங்கள்.

5) ரொம்ப டாச்சர் கொடுத்த அந்த இடத்திலேயே பொங்கி வெடிச்சு அவனுக்கு முடிஞ்சா தர்ம அடி வாங்கிகொடுங்க...(சாத்தியம் குறைவுதான்... முயற்சிசெய்து பாருங்க)

[பெண்கள் மட்டுமே பயணிக்கக்கூடிய பேருந்து நடைமுறைக்கு வந்தால்... ஹ்ம்ம்..... ஆசப்படமட்டும் தான் முடியும் நம்நாட்டில்!]

174 பேருந்தை பொறுத்தவரை அது ஒரு நேரம் விழுங்கி... பின்ன.. சாதாரண வேகத்தில் போனால் பொரெல்லயிலிருந்து பன்னிபிட்டியவை 30 நிமிடங்களில் அடைந்துவிடலாம். ஆனா இந்த பஸ்ல போகும்போது எடுக்கும் நேரம் 50- 55 நிமிடங்கள். தேவையற்ற நிறுத்தங்களில் அதிக நேரம் வீணே நிறுத்தி வைக்கப்படுவதும், தாலாட்டும் வேகத்தில் செல்வதும்தான் இதற்கான காரணம்.

நான் பகிர்ந்துகொண்ட இந்த விடயங்கள்....சில துளிகள் மட்டுமே.... கடலளவு அநியாயங்களும் பிரச்சினைகளும் இன்னும் ஏராளம் ஏராளம்.....
எடுத்துச்சொல்ல நேரம் கிடைக்கும் போது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf