Showing posts with label VERY RARE AND AMAZING. Show all posts
Showing posts with label VERY RARE AND AMAZING. Show all posts

Friday, 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 2 March 2011

அதிசய ராத்திரி - 2010 இன் சிவராத்திரி

சிறு வயது முதல் நான் மிகவும் விரும்பி அனுஷ்டித்து வரும் இந்த சிவராத்திரி தினம் இம்முறையும்.. கடிதென விரைந்திடும் காலச்சக்கரத்தில்..

ஆனால் இம்முறை விரதம் பிடிக்க முடியாத நிலை என்றாலும் விடிய விடிய விழித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை (புதிய உறவான எனது குழந்தையோடு...)
புதிய அனுபவம் தான்.....

இன்று இந்தப் பதிவின் நோக்கம் கீழே உள்ள காணொளியை கண்ணுருவோருக்கு புரியும்.

'கடந்த வருடம் நுவரெலியா காயத்திரி கோயில் வளாகத்தில்
கமெரா கைப்பேசியில் சுட்ட கண்கொள்ளா அதிசயக்காணொளி'

முகில்கள் சிவனின் கண்களை ( அப்படித்தான் இதை கண்ணுற்றோர் சொல்கிறார்கள் ) உங்களுக்கு புலப்படுத்துகிறதா ?

இன்று இரவுதோறும் பக்திப் பரவசத்தோடு சொல்வோம் 'ஓம் நமசிவாய'

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 24 April 2009

'மைக்ரோசாப்ட்' கணிப்பான் ஃபெயில் ஆயிடுச்சு!

Microsoft's Calculator failed in following calculation.

எதுல... எப்படி எப்படி ஃபெயில் ஆயிடுச்சுன்னு கேட்கிறவங்க.....

இப்ப .... அப்படி அப்படி

இந்த வழிமுறையூடாக சென்று கணிப்பானை பெற்றுக்கொள்ளுங்கள் Start-->Run-->type Calc and Check the following...

2704/50 = 54.08 Works Fine ( விடை கிடைக்கும் )
2704/51 = 53.01960784 Works
Fine ( விடை கிடைக்கும் )
2704/52 = Try yourself Doesn't Work( தலைகீழா நின்றாலும் விடை கிடைக்காது )

எனவே இந்த விடைய சரியா கொடுக்க முடியாததால மைக்ரோசாப்ட் கணிப்பான் ஃ பெயில் ஆயிடுச்சு என்ற முடிவுக்கு வரலாமில்லையா??(Microsoft Calculator failed)

வாசிச்சது போதும் நீங்களும் ஒருக்கா ட்ரை பண்ணிப்பாருங்க....

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 11 October 2008

AMAZING WORLD CLOCK

http://www.poodwaddle.com/worldclock.swf

Click on this Link to view the Amazing World Clock

P.N:"Time is the most Precious thing in the world". Therefore I Started my Blogspot Page with
the most precious thing. - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf