Saturday 20 November 2010

இன்று எனக்கு உயர்வு தந்த சக்தி பண்பலை எனும் என் தாய்க்கு 12 ஆவது பிறந்ததினம்.......

ஒரு வாரமாக உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் திறந்து சில வார்த்தைகள்.............

இந்த இனிய நாளில் .......நீண்ட இடைவேளைக்குப்பின் எனது எழுத்துக்கள் பதிவுலகை முத்தமிடுகின்றன..

இன்று சக்தி தன் 12 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு இருக்கும் இத்தருணம்.... எனக்கு சக்தியோடு இணைந்து கொண்டு பூர்த்தி செய்கின்ற 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் என்று சொல்லிக் கொள்ளலாம்..

சக்தியில் நானும் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசையின் உந்தலில் இணைந்து கொள்ள முற்பட்ட வேளையில் என்னிடமிருந்த 3 மூலதனங்கள்
1) நம்பிக்கை
2) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
3) ஜனரஞ்சகமாக பிறர் ரசிக்கும்படி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு தீ .............

சக்தியின் ரசிகையாக இருந்தபோதே இவற்றை என்னிடம் இனம் கண்டு, எனக்கு உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தி சக்திக் குடும்பத்தோடு இணைய எனக்கு வாய்ப்பளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர், முன்னாள் சக்திப் பணிப்பாளர், (என்னுடைய கோட் பாதர் என்று சொன்னால் கூட தப்பில்லை)
திரு. R .P . அபர்ணாசுதன் அவர்களுக்கும்....

இப்போது நான் அடைந்துள்ள வளர்ச்சிக்கும் (பகுதி நேர அறிவிப்பாளர், அறிவிப்பாளர், வார இறுதி நாட்களுக்கான பிரதி முகாமையாளர்) , இந்தப் படிப்படியான வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்களாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்
ஜீவா அக்கா, மயூரன் அண்ணா, கணா அண்ணா, கஜமுகன் அண்ணா, ஷெல்டன் அண்ணா, சுமன் அண்ணா, ரவுப் அண்ணா, குணா அண்ணா, உமா அக்கா, சத்ய சன்னிதா அக்கா ஆகியோருக்கும்

இப்போது எம்மை வழி நடாத்திக் கொண்டிருக்கும் சக்தி நிலையைப்பொறுப்பதிகாரி திரு.காண்டீபன் அண்ணா அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே தருணம்.... 2005 இல் டிசெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை 'தபால் விருப்பம்' என்னுடைய முதல் நிகழ்ச்சி.... அந்த நிகழ்ச்சிக்காக வானலையில் நடை பயிற்றுவித்து நிகழ்ச்சியை என்னுடன் தொகுத்து வழங்கியவர் காண்டீபன் அண்ணா என்பதையும் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

சக்தியோடு இணைந்து கொண்ட ஞாபக மீட்டல்கள் பல உள்ளன என்றாலும் இப்போதைக்கு இவை போதும் என்ற எண்ணத்தோடு ...

சக்தி கொடுத்ததும் பல
சாதனைகளாய் படைத்ததும் பல
அது இனியும் தொடரும் ...............

சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சக்திக் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் 2005 - கடல் கடந்த தேசம் நாடகத்தில் பங்கேற்றபோது
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf