Friday 11 December 2009

Titanic சாதனையை தகர்க்கவரும் சினிமாவின் புது அவதாரம் - AVATAR


பிரம்மிக்க வைக்கும் தொழிநுட்ப விருந்தின்றி நீண்ட நாட்களாக வாடி வறண்டு வற்றிப்போய் இருக்கின்ற கண்களுக்கு முப்பரிமாணவிருந்து படைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது 'அவதார்'.

டிசம்பர் 18 - என்னதான் இந்த திகதி வேட்டைக்காரன் திரைப்படத்தை ஞாபகப்படுத்தினாலும், அதிக பட்ச பரபரப்புடன் உலகை ஒரு உலுக்கு உலுக்கத்தயாராகி வரும் AVATAR, வசூல் சாதனைப்படமான
TITANIC ஐ கவிழ்க்கும் திரைப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

JAMES CAMERON இன் சாதனையை இந்தப்பன்னிரெண்டு வருட காலத்துக்குள் யாரும் முறியடிக்காததால் அவர் அவ(தா)ர் மூலமாக தானே முறியடிப்போம் என கிளம்பிட்டாரோ ?என்னவோ ..

புதுவித சாகச தொழினுட்பங்கள், அவற்றின் ஆழமான பயன்பாட்டை நாம் பொதுவாக JAMES CAMERON இன் திரைப்படங்களில் காணலாம். சிறந்த உதாரணங்கள் THE TERMINATOR - 1984 , ALIENS -1986 , TERMINATOR 2 : JUDGEMENT DAY -1991, TITANIC -1997

அந்தவகையில் இந்த AVATAR உம் தொழிநுட்பத்தில் புதுவித அவதாரமெடுக்கிறது.
இந்த தொழிநுட்ப வேலைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் என கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இந்த தாராள செலவை செய்திருக்கும் நிறுவனம் லைட்ஸ் ஸ்ட்ரோம் எண்டர்டெயின்மெண்ட் (LIGHT STORM ENTERTAINMENT). 20TH CENTURY FOX வெளியிடுகிறது .

என்னதான் உத்தியோகபூர்வமாக உலகளாவிய ரீதியில் இது டிசம்பர் 18 வெளிவர இருந்தாலும் நேற்று லண்டனில் பிரிமியர் கட்சிகள் அரங்கேறி விட்டது. படத்தை பார்த்தவர்களிடம் இருந்து நேர் கருத்துக்களை அறியக்கூடியதாகவும் உள்ளது. எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என உறுதியாக நம்பப்படுகிறது. இந்த AVATAR , TITANIC பட வசூல் சாதனையை முறியடிக்கும் இந்தப்படத்தின் 3D தன்மை அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திகொடுக்கும் என பரவலாக பேசப்பட்டாலும், சாதரணமாக எல்லாத்திரையரங்குகளிலும் இவ்வசதியைஎதிர்பார்க்க முடியாது. எனவே இந்த AVATAR அவதார சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்தக்கதையின் சுருக்கம்


கடற்படை நாயகன் 'ஜாக்'குக்கு (சாம் வொர்திங்டன்) ஒரு போரில் காயமடைந்து அவனுடைய இடுப்புக்குக்கீழ் பகுதி செயலிழந்து போன நிலையில், பண்டோரா என்ற 'நவிகள்' வசிக்கும் கிரகத்துக்கு போகும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு வசிக்கும் இந்த நவிகள் மனிதர்களை விட அதியுயர் சக்தி படைத்தவர்கள். அவர்களையும் அந்தக் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்யும் குழுவில் இணையும் நாயகனுக்கு தனது கால்களை பெற்று மீண்டும் நடமாடத்தக்கதான சந்தர்ப்பமும் அமைகிறது. சாதரணமாக பண்டோரா கிரகத்தில் மனிதர்கள் சுவாசிக்க முடியாது. இதன் காரணமாக மனித DNA கொண்டு நவிகளை உருவாக்கி அந்த கிரகத்துக்குள் நுழையவிட வேண்டிய தேவை ஆராய்ச்சி குழுவுக்கு ஏற்பட இந்தத்தேவை ஜாக்குக்கு புது அவதாரத்தை கொடுக்கிறது.



3 மீட்டர் உயரம், நீலநிற உடல், நீண்ட வால் என ஒரு புதுவித தோற்றத்தை தன் வசப்படுத்திக்கொள்கிறார்.

''The Avatars are living, breathing bodies that are controlled by a human "DRIVER" through a technology that links the driver's mind to their Avatar body ''.

பண்டோரா கிரகத்தின் அழகிலும் புதுமைகளிலும் தன்னை மறக்கும் நாயகன் நவிப்பெண் ஒருத்தியிடம்(நேத்ரி) தன் மனதை பறி கொடுக்கிறான்.

இனி ஜாக் சாயப்போவது எந்தப்பக்கம் மனிதர்கள் பக்கமா ?? நவிகள் பக்கமா ??

படத்தைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்க. இப்போது முன்னோட்டம் மட்டும் உங்களுக்காக



இந்தப்படத்திலும் காதலின் சாயத்தை இயக்குனர் தொட்டிருப்பதால் TITANIC போலவே அதை சரியான விதத்தில் கொண்டு சென்று இதை மனது மறக்காத ஒரு படைப்பாக்குவார் என்று நம்பலாம்.

இந்தப்படம் ஜேம்ஸ் கமேரோனின் கனவுப்படங்களில் ஒன்று. காரணம் சிறுவயதில் இவர் வாசித்த பல அறிவியல் புனைகதைகள் அவை தந்த பாதிப்புகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி தந்துள்ள படம் தான் இந்த 'அவதார்' என்பதை அவருடைய நேர்காணல்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது.

TITANIC திரைப்படத்தின் பின் கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்தப்படத்துக்காக அவர் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அது மட்டுமல்ல இதில் அவர் பயன்படுத்தியுள்ள 3Dடெக்னாலஜி ஹாலிவுட் சினி உலகின் இன்னொரு படி.
அத்தோடு முகபாவங்களை மிகத்துல்லியமாக படம்பிடித்து அதை டிஜிட்டல் உருவங்களோடு ஒன்றிணைத்து, நடிகர்களை கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இணையாக ஓட விட்டு, நடிக்கவைத்து நிஜம் எது கிராபிக்ஸ் எது என பிரித்தரியாதளவுக்கு தன் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறாராம். இந்தப்படத்தில் 40 % உண்மை, 60 % - கணணி வித்தை என்றாலும் படம் பார்க்கும் போது அது தெரியாதளவுக்கு இருக்கவேண்டும் என அதிக சிரத்தை எடுத்து தன் கனவுப்படத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்திருக்கும் JAMES CAMERON , இந்தப்படத்துக்கான ஆஸ்கார் கனவுகளோடும் காத்திருக்கிறார்.

நாமும் காத்திருப்போம் படத்தைப்பார்ப்பதற்காக....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

இறுதியும் உறுதியுமாய்


யப்பாடா ஒரு மாதிரி கிளைமாக்ஸ்க்கு வந்தாச்சு
ரப்பரை விட மிக மோசமாக இழுபட்ட இந்த தொடர் பதிவுகளில் இன்று இறுதிக்கட்டமாய்....

பணம்

இந்த ஒன்று தான் தினம் தினம் உலகை கவ்விக்கொண்டிருக்கிறது.
இங்கு எல்லாமே இதை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவனை மதிக்கவைப்பது .... மிதிக்க வைப்பது இந்தப்பணம்.

எத்தனையோ நல்ல செயல்களில் இருந்து இழி செயல்கள் வரை ஊடுருவும் பணத்தை யாருமே உதறித்தள்ளி விட்டு வாழ்வதென்பது நம் யாராலேயுமே இயலாத காரியம்.

கீதை குறிப்பிடுவது போன்று ...


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
பணத்தின் கதியும் இது தானே.....

பணத்தில் மிதப்பவர்களும் சரி பணம் இன்றிக் கிடப்பவர்களும் சரி... இந்த வாசகம் மொழியப்பட்டது எம் ஒவ்வொருவருக்காகவும் தான்.

மனிதன் தனக்கு எது எதுவெல்லாம் நன்மை பயப்பதாக நினைக்கிறானோ அதையெல்லாம் கடவுளாக்கி பார்க்கும் சிந்தனை கொண்டவன். அதனால் இந்தப் பணத்தையும் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

இந்தப் பணத்துக்குள் தம்மை தொலைத்து விட்டு எம்மில் பலர் காலம் கடந்து வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த யுகத்தில் பணத்தோடு வாழ்க்கை என்பதை விடுத்து வாழ்க்கைகாக பணம் என்ற பக்குவத்தோடு வாழப்பழகிக்கொண்டால்

பணம் - நல்ல நண்பன்
இல்லாவிடின்

பணம் - என்றும் காலன்.


பின் குறிப்பு :

இந்த 'பணம்' தலைப்பில் நான் பதிவிட எண்ணியது வேறு ஆனால் பதிந்தது வேறு. இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த எண்ணத்தை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.
இனி வரவுள்ள என் பதிவிற்காக நேரம் அதிகம் தேவைப்பட்டதால் இந்த பதிவை சாதாரணமாக முடித்துள்ளேன்.


அடுத்து வரும் பதிவு என்ன ????? முடிந்தால் ஊகியுங்கள் ...காத்திருங்கள்...

என்னது க்ளு வேணுமா ? OK


என்னைப்பார் என் கண்ணைப்பார்

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday 7 December 2009

தொடர்வது 'அழகு'

நீண்ட ஒரு இடைவேளைக்குப்பின்
வந்தியத்தேவன் அண்ணா அறைகூவல் விடுத்திருந்த தொடர் பதிவுத் தலைப்புகளில் மூன்றாவது இன்று களம் காணப்போகிறது...


அழகு

உண்மையில் அழகானவை என்று சொல்லப்படுபவை கண்களால் பார்க்கப்படுபவை அல்ல:அவை மனத்தால் மட்டுமே உணரப்படக்கூடியவை.

இதை இன்னும் தெளிவா சொல்வதென்றால்,

The best and most beautiful things in the world cannot be seen, nor touched ...
but are felt in the heart.
-- Helen Keller


ஆழமா கொஞ்சம் யோசிச்சா இதன் அர்த்தம் புரியும்.

இந்த உலகில் சில உண்மைகள், சில உறவுகள், சில உணர்வுகள் வரையறுக்க முடியாத பெறுமதியோடு... உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்ல....

என்னைப்பொறுத்தவரை மேலே நான் குறிப்பிட்டது போல
மனதினால் உணரப்படக்கூடியவை மட்டும்தான் உண்மையான அழகோடு வலம் வருபவை.


அன்பு
கருணை

நம்பிக்கை

இந்த மூன்றையும் எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் அதன் நிலை மாறாது. இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகினை மனதுக்குள் தூவுகின்றன.

உறவுகளுடனான பந்தத்தை உறுதிப்படுத்துவது
-அன்பு


பிற உயிர்களுடன் உயிர்ப்பாய் இருக்கச்செய்வது
-கருணை
இறைவன் என்ற விடைகாணமுடியாத கேள்விக்கு பதிலாய் அமைவது
-நம்பிக்கை
(உங்களுக்குள் உங்களைத்தேடி விடை காண வைப்பது
தன்னம்பிக்கை)

Real beauty is CONFIDENCE in yourself என்று கூட சொல்வார்கள்.

இந்த மூன்றும் யாரிடம் வற்றாத ஊற்றாக இருக்கின்றதோ அந்த மனிதன்தான் இம்மையிலும் மறுமையிலும் உண்மையிலேயே பேரழகன்.

அன்பென்ற மழையில் அகிலங்கள் நனையட்டும்
கருணைக்கடலில் உலக உயிர்கள் கலக்கட்டும்
இறைவன் என்ற முடிவிலியில் பேரானந்தம் நிலைக்கட்டும்

இப்போது எது அழகு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

அடுத்து தொடர்பதிவின் இறுதித்தலைப்பு ''பணம்'' - எப்ப வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது .. எனக்கு பதிவிட நேரம் கிடைக்கும் போது வரும்....


வரட்டா .....!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf