Saturday, 20 November 2010

இன்று எனக்கு உயர்வு தந்த சக்தி பண்பலை எனும் என் தாய்க்கு 12 ஆவது பிறந்ததினம்.......

ஒரு வாரமாக உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் திறந்து சில வார்த்தைகள்.............

இந்த இனிய நாளில் .......நீண்ட இடைவேளைக்குப்பின் எனது எழுத்துக்கள் பதிவுலகை முத்தமிடுகின்றன..

இன்று சக்தி தன் 12 ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு இருக்கும் இத்தருணம்.... எனக்கு சக்தியோடு இணைந்து கொண்டு பூர்த்தி செய்கின்ற 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் என்று சொல்லிக் கொள்ளலாம்..

சக்தியில் நானும் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற ஆசையின் உந்தலில் இணைந்து கொள்ள முற்பட்ட வேளையில் என்னிடமிருந்த 3 மூலதனங்கள்
1) நம்பிக்கை
2) கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
3) ஜனரஞ்சகமாக பிறர் ரசிக்கும்படி வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்ற ஒரு தீ .............

சக்தியின் ரசிகையாக இருந்தபோதே இவற்றை என்னிடம் இனம் கண்டு, எனக்கு உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தி சக்திக் குடும்பத்தோடு இணைய எனக்கு வாய்ப்பளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர், முன்னாள் சக்திப் பணிப்பாளர், (என்னுடைய கோட் பாதர் என்று சொன்னால் கூட தப்பில்லை)
திரு. R .P . அபர்ணாசுதன் அவர்களுக்கும்....

இப்போது நான் அடைந்துள்ள வளர்ச்சிக்கும் (பகுதி நேர அறிவிப்பாளர், அறிவிப்பாளர், வார இறுதி நாட்களுக்கான பிரதி முகாமையாளர்) , இந்தப் படிப்படியான வளர்ச்சிக்கு காரண கர்த்தாக்களாக இருந்த, இருந்து கொண்டிருக்கிற சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்
ஜீவா அக்கா, மயூரன் அண்ணா, கணா அண்ணா, கஜமுகன் அண்ணா, ஷெல்டன் அண்ணா, சுமன் அண்ணா, ரவுப் அண்ணா, குணா அண்ணா, உமா அக்கா, சத்ய சன்னிதா அக்கா ஆகியோருக்கும்

இப்போது எம்மை வழி நடாத்திக் கொண்டிருக்கும் சக்தி நிலையைப்பொறுப்பதிகாரி திரு.காண்டீபன் அண்ணா அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே தருணம்.... 2005 இல் டிசெம்பர் 24 ஆம் திகதி சனிக்கிழமை 'தபால் விருப்பம்' என்னுடைய முதல் நிகழ்ச்சி.... அந்த நிகழ்ச்சிக்காக வானலையில் நடை பயிற்றுவித்து நிகழ்ச்சியை என்னுடன் தொகுத்து வழங்கியவர் காண்டீபன் அண்ணா என்பதையும் நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

சக்தியோடு இணைந்து கொண்ட ஞாபக மீட்டல்கள் பல உள்ளன என்றாலும் இப்போதைக்கு இவை போதும் என்ற எண்ணத்தோடு ...

சக்தி கொடுத்ததும் பல
சாதனைகளாய் படைத்ததும் பல
அது இனியும் தொடரும் ...............

சக்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


சக்திக் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் 2005 - கடல் கடந்த தேசம் நாடகத்தில் பங்கேற்றபோது
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

15 comments:

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...

.....//ஒரு வாரமாக உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றாலும் மனம் திறந்து சில வார்த்தைகள்.............//
உடல் நிலை விரைவில் சீராக இறைவனை வேண்டுகின்றேன்...

வானலையில் நான் கேட்டு ரசித்த முதல் வானலை சக்தி Fm தான்....நான் நோய்வாய்பட்டு இரவில் துாங்காமல் தவிக்கையில் துணையாக இருந்ததும் சக்திதான்....
என் வாழ்நாளில் மறக்கமுடியாத வானலை சக்தி Fm கு 10 ஆண்டுகள் இணைந்திருந்த இவனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
(other wishes sent to ur 4n)

jeeva said...

i like this....
happy birthday sakyhi fm...

kajan said...

nice akka

Anonymous said...

nice akka. super experience share 4 da future shakthi members

Anonymous said...

First of all Get well soon dyena,
வாழ்த்துக்கள் உங்களுக்கு, 5 வருட கடும் உழைப்பு உங்களை உயர்த்தி உள்ளது என்றுதான் சொல்லவேணும்
முடிந்தால் உங்கள் முதல் அறிவிப்பை எம்முடன் மறுபடியும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி

Many Thanks....

Shajahan
www.twitter/kshajahan
Qatar

Farhath said...

சக்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
உடல் நிலை விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகின்றேன்...

மகாதேவன்-V.K said...

சக்தியின் பரம ரசிகர்களில் நானும் ஒருத்தன் என்றும் அடிக்கடி கேட்ப்பென் இப்போதுதான் வேலைப்பளு காரணமாக இடையிடையே கேட்ப்பதுண்டு.
தங்களின் விடா முயச்சியால் வெற்றி கிடைத்தது என்பது பல முயச்சியாளர்களுக்கு முன் உதாரணம் நீங்கள்.

"வாழ்க சக்தி வானொலி"

"வாழ்க உங்களைப்போன்ற அன்பு அறிவிப்பாளர்கள்"

Kajanthan said...

சக்திக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....வானலையில் உங்கள் சேவை தொடரட்டும்.....
என்றும் வழித்துணையாய் நாமிருப்போம்......

KANA VARO said...

சக்திக்கு வாழ்த்துக்கள். சக்தியில் உங்கள் நிகழ்ச்சிகள் வித்தியாசமானவை. அதற்கு உங்கள் தயார்படுத்தல்களும் அபாரம். நம்மவர்களை முன்னுக்கு கொண்டுவர பாடுபடுங்கள்.

SShathiesh-சதீஷ். said...

சக்திக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

SShathiesh-சதீஷ். said...

.

nimalesh said...

Belated birthday wishes to Shakthi…. Nice to see u in blog after long time…… welcome + get well soon.

ம.தி.சுதா said...

என் கவிதைகளுக்கு களம் அமைத்துத் தந்த சக்திக்கு என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

என்றும் சத்தியின் சேவை தொடர வாழ்த்துகிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/.

நேசமுடன் ஹாசிம் said...

வாழ்த்துகள் தொடரட்டும் தங்களின் மேலான இலக்கியப்பணி

இன்னும் பல்லாண்டு காலம் சக்தி வென்றிட வாழ்த்துகள்

http://ta.indli.com/

இந்த தளத்திலும் தங்களின் படைப்புகள் பதிவுகளை பகிருங்கள்
நன்றி

LinkWithin

Blog Widget by LinkWithin