Saturday 19 November 2011

பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !

என்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு ?? என்பவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.

நானும் முதலில் கேட்டபோது என்னது ????????? என்ன பழம்? என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆம்! பிரப்பம் பழம் தான்


நடந்தது இது தான் ? வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.
சாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)




பெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட
விருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......

முகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...
''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

பழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...
இந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும்? சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே !


பிரம்பு

இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

இப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

16 comments:

priyamudanprabu said...

கெள்விபட்டதே இல்லை..

chandramohanadash mohan said...

The fruit is also rich in Folic Acid, which is ideal for proper brain development

chandramohanadash mohan said...

The fruit is also rich in Folic Acid, which is ideal for proper brain development

Rishi said...

Akka i tried maximum get more detail than you give but i did get any info about it .. i asked one of my relation & one of friend who's native place is Batticalo they also don't knw abt this fruit..

RJ Dyena said...

THANKS PRABU, RISHI

AND SPECIALLY MOHAN FOR UR VALUABLE RESEARCH.:)

MathaN said...

இது பிரம்பு செடியின் பழம்
பிரம்புச் செடியை பிரப்பம் மரம் என்றழைப்பார்கள் அதன் பழம் பிரப்பம்பழம்.....

Dr.S.Soundarapandian said...

Thanks a lot Dayana ! A rare posting is yours ! During krishna Jayanthi day (Birth day of Krishna) people 0f Tamilnadu worship Him with this PIRAPPAM PAZAM ! I too tasted it ! Forgotten similar fruits are many ! -
Dr.S.Soundarapandian
M.A.(Tamil), M.A.(English), B.Ed.,Dip.(Sanskrit) ,Ph.D
Chennai - 33

Dr.S.Soundarapandian said...

Thanks a lot Dayana ! A rare posting is yours ! During krishna Jayanthi day (Birth day of Krishna) people 0f Tamilnadu worship Him with this PIRAPPAM PAZAM ! I too tasted it ! Forgotten similar fruits are many ! -
Dr.S.Soundarapandian
M.A.(Tamil), M.A.(English), B.Ed.,Dip.(Sanskrit) ,Ph.D
Chennai - 33

RJ Dyena said...

முனைவர் சு.சௌந்தரபாண்டியன் ஐயா ,
தங்களைப் போன்ற கல்விமான்களின் வருகை என் வலைப்பதிவுகளுக்கு என்றும் பெருமை சேர்ப்பவை. உங்கள் மதிப்பிற்குரிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

ramalingam india said...

piLLayaar sadhurthiyin po.dhu indha pazham kadayil virkapaattadhu miga azhagaana varigl kondu irundhadhai G + il photo poda ninaithu ..idhu patri thediyapodhu sariyaana thagaval illai cane endru the.dinal veru sedigaL vandhadhu kadaisiyaaga ingu vandhu vitten pala ubayogamaana thagavalgal kidaithadhu idhu engal gramathil perum alavu uLLadhu uLLe pogamudiyaadhu mutkaL nam udalai kizhithu vidum

இமா க்றிஸ் said...

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு பிரப்பம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். உள்ளே கொஞ்சம் ரம்புட்டான் போல இருந்ததாக நினைவு. மூதூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொண்டுவந்து கொடுத்தார். அங்கும் அரிதாகத் தான் கிடைக்கும் என்றார்.

சின்னக் காலத்தில் குழப்படி விட்டால் அம்மா, " என்ன! பிரப்பம் பழம் வேணுமா?" என்பார். ;)

Vella said...

நானும் சாப்பிட்டு இருக்கிறேன்

Latha ananthalakskhmi said...

பிரப்பம் பழம் சாப்பிட புளிப்பு சுவையுடன் இருக்கும். ஆடிமாதம் கிடைக்கும். மேல்தோல் மிக மெல்லியதாக கண்ணாடி போல் இருக்கும். பழம் கிடைத்தால் பதிவு செய்கிறேன். மினியேச்சர் அன்னாசி பழம் மாதிரி அமைப்பில் இருக்கும்.

Unknown said...

Does anyone know the English name for this???

RJ Dyena said...

Cane fruit
https://www.flickr.com/photos/107400714@N07/14903769470

Anonymous said...

வருடா வருடம் வினாயகர்
சதுர்த்தி அன்று வாங்கி பூஜை முடித்த பிறகு சாப்பிடுவோம் புளிப்பு சுவை இருக்கும்