Sunday, 13 July 2014

இது அலப்பறை அல்ல அனுபவம்






நான் கால்பந்தாட்ட ரசிகையாகக் காரணம் என் தந்தை. ஏனென்றால் அவரும் ஓர் கால்பந்தாட்ட வீரர். எனது சிறுபிராயத்தில் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இடம் பெறும்போது தந்தையுடன் சேர்ந்து நானும் விடிய விடிய பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. அதிலும் சுவாரசியம் மறுநாள் காலை நான் தான் அவருக்கு வென்ற அணி, அடித்த GOAL கள் பற்றிய விபரத்தை சொல்வேன்... 

1990 இல் தான் நான் பார்த்த முதல் போட்டித் தொடர். அந்த வயதில் போட்டி பற்றி அவ்வளவு தெரியாது ஆனால் டீம் போட்டு விளையாடும் ஆடை கலர் வைத்து சப்போர்ட் செய்ததை இப்போது நினைத்து பார்க்கும் போது ஒரே ஹீ ஹீ ஹீ .....

அப்படி நான் தெரிவு செய்த முதல் டீம் தான் GERMANY.. இறுதிப்போட்டியில் ARGENTINA வும் GERMANY யுமே மோதின. ஜெர்மனி 1-0 இல் வென்றது. 


அதற்குப் பிறகு 1994 இல் ஓரளவு போட்டி பற்றிய அறிவு தெரிந்த பருவம் Brazil அணியின் ரசிகையானேன். சப்போர்ட் பண்ணினேன். அதுவே வென்றது பெனால்டி முறையில் (3-2)Italy உடன் மோதி. 

1998 இல் தந்தை சப்போர்ட் பண்ணியதால் Argentina வுக்கு நானும் சப்போர்ட் பண்ணினேன். ஆனால் அது இறுதிப்போட்டிக்கு வரவில்லை. இறுதிபோட்டிக்கு பிரேசிலை இட்டுசென்ற Ronaldo என் Football Hero ஆனார். Ronaldo Cut பிரபலமாக பேசப்பட்டு, பின்பற்றப்பட்ட காலமது. 

2002 மீண்டும் Rotation இல் ஜெர்மனிக்கு சப்போர்ட் பண்ணினேன்.ஆனால் வென்றது Brazil, Ronaldo அதிரடியில்(2-0). 

2006 இல் பிரேசிலும் 2010இல் Argentina வும் இறுதிப்போட்டிக்கு வராமல் கை விரித்தன(நான் சப்போர்ட் பண்ணியும் :p). ஒரே ஆறுதல் ரொனால்டாவின் சாதனை(15th World Cup Goal 2006). 

1990 இல் மோதிய ARGENTINAவும் ஜெர்மனியும் மீண்டும்… 

இதோ இம்முறை (2014) ஜெர்மனிக்கு நான் சப்போர்டிங் ... வெயிட் அன்ட் சி வாட்ஸ் ஹப்பெனிங் !



- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf