பிரம்ம முகூர்த்த தியான கழகத்தில் இணைந்து குருவுடன் (Sri Shakthi Sumanan Ayya) சாதனை செய்ய ஆரம்பித்து இன்றுடன் 86 நாட்கள் நிறைவடைந்து விட்டன.(நான் அதில் 70 நாட்கள் பூர்த்தி செய்துவிட்டேன் - சில பயண நாட்கள் மற்றும் பணி நிமித்தமான சில அவசர வேலைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய நாட்களில் நள்ளிரவு தாண்டிய கண்விழிப்பினால் உடலுக்கு தேவைப்பட்ட ஒய்வு காரணமாக என்னை மறந்து உறங்கி சாதனை தவறவிடப்பட்ட நாட்கள் தவிர்த்து). நான் இருந்த நிலைக்கு இதுவே ஒரு பெரிய சாதனை, முன்பெல்லாம் அதிகாலை எழ வேண்டும் என நினைத்து தொடர்ச்சியாக அதை பயிற்சிக்க எண்ணித் தொடங்கினாலும் அது இடை நடுவே (இரு வாரங்களுக்கு உள்ளாகவே பலமுறை தடைப்பட்டுள்ளன. பிரதான காரணம் நானிருக்கும் பிரதேசத்தில் நிலவும் குளிர் மற்றும் எனக்கு ஏற்படும் தொடர் தும்மல் மற்றும் மூக்கிலிருந்து நீர்வழிதல். ஆனாலும் இதை எதிர்கொண்டு வெற்றிகாண வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அதற்கான வாய்ப்பாக எமது குருநாதர் நடாத்தி வரும் அதிகாலை பிரம்ம முகூர்த்த மூலாதார குழுச் சாதனை முறையை பயன்படுத்திக் கொண்டேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், பல நேரங்களில் நித்திரை கலக்கத்துடன் சாதனைக்கு அமர்ந்து குருவின் வழிகாட்டலை உள்வாங்கி செய்யத்தொடங்கி, அதற்குள்ளும் அரை விழிப்பில் உறங்கி திடீரென முழித்து என பல commedy எனக்குளாகவே நடைபெற்ற சில சிறப்பான சம்பவங்கள் உள்ளன. ஆனால் ஓரிரு நாள் விடுபட்டிருந்தாலும்கூட அதை குற்ற உணர்ச்சியாக எண்ணாமல் தெய்வ செயலே என எண்ணி எனது இலக்கை நோக்கி பயணித்த வண்ணம் தொடர்ச்சியாக அதிகாலை சாதனையில் கலந்துகொண்டேன். அதற்குரிய சில உயரிய பலன்களாக எனது சிந்தனைத்திறனில் ஓர் மாற்றம், ஒழுங்கு (நினைவு தெரிந்த நாள் முதல் ஏற்கனவே உள்ள ஒன்று எனினும் அது நிகழ்கால வாழ்க்கை முறையால் சற்று கலைந்து போயிருந்தது.) மீளக்கட்டமைப்பட்டது, உற்சாகமாக அதிகாலையில் எழுவது (சாதனைக்காகவே), எனது உயர்கல்வியில் நான் மேற்கொள்ளும் சிரத்தை மற்றும் அர்ப்பணிப்பு (பல காலமாக ஒரு சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது) மற்றும் நேர முகாமைத்துவம், எத்தனை குழப்பம், பிரச்சினை பௌதீக வாழ்க்கையில் வரும்போதும் அதை சமாளிக்கும் தன்மையில் முன்னேற்றம், எனது வேலைப்பளு அதிகம் (அதிக பொறுப்பான நான்கைந்து வேலைகளை வாழ்வாதாரத்தை சமாளிக்க செய்யவேண்டியுள்ளதால் மற்றும் இவை TIMELY BOUNDED - கேட்ட நேரத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் தினசரி செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, மொழி பெயர்ப்பு - subtitling, Documentation, Site Commitments & Completions என இவற்றுடன் இணைந்து கொள்ளும் தினசரி வீட்டுக்கடமைகள், சமூக சேவைகள் என அனைத்தும் இருந்தும் உற்சாகமாகவே உள்ளேன் 3 -4 மணி நேர உறக்கத்துடன், எல்லாவற்றையும் தாண்டி ஓர் தெய்வீக வழிநடத்தலை (சிறு வயதில் ஆரம்பித்ததுதான்) நான் முழுமையாக உணர்கின்றேன். ஆராதிக்கிறேன். இருந்தும் இன்னும் உள்முகமாக குருவின் வழிநடத்தலுடனும் தெய்வீகக் கருணையுடன் நிறைய படிகளை கடக்க வேண்டியுள்ளது. சரியான தருணத்தில் அவை அனைத்தும் நிகழும். தற்போது எனது நிலை வெறும் ஆரம்பம் மட்டுமே!