Sunday, 3 January 2010

''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)

முன்குறிப்பு:
''PAA''- நிச்சயமாக இது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் அல்ல


ஒரு ரயில் தன் பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் ,

ஒரு வயதானவரும், 25 வயது பூர்த்தியான அவருடைய மகனும்..

எதிர்ப்பக்க இருக்கைகளில் ஒரு இளம் ஜோடி...இவர்களை கவனித்த வண்ணம்..

ரயில் தன் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு கணமும் அந்த இளைஞனின் கண்களிலும் உள்ளத்திலும் அவ்வளவு குதூகலம்!


யன்னல் பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவன் தன் கரத்தை வெளியே நீட்டி தழுவிச்செல்லும் காற்றை அனுபவித்தான். பின் மரங்களைக் காட்டி "அப்பா பாருங்கோ மரமெல்லாம் பின்னோக்கி அசையுது" என்றான்.

வயதானவரும் புன்னகைத்தவாறே தன் மகனின் வியப்புகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.


எதிர்ப்பக்கத்தில் இருந்த ஜோடிக்கு ஒரே குழப்பம்... என்னடா 25 வயதுப் பொடியன் சின்னப்பிள்ளை போல நடந்து கொள்கிறானே என்று...

குழப்பமும் வியப்பும் ஒருங்கே சேர அவனை தொடர்ந்தும் கவனித்துக்கொண்டு இருந்தது அந்த ஜோடி..சிறிது நேரத்தில் '' அப்பா பாருங்கோ குளத்தில பறவை நீந்துது என்றான்'' மகிழ்ச்சி பொங்க....


அந்த நேரத்தில் மழை வரவே மழைத்துளிகள் அவன் கைகளில் பட, தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அப்பா இப்போது மழைத்துளிகள் என்னைத் தொடுகின்றன என்று ஆனந்தத்தில் துள்ளினான்...


இதுக்குமேலும் பார்க்க சகிக்காமல், அந்த ஜோடி பெரியவரிடம் பேச்சு கொடுத்தது..

உங்கள் மகனை நீங்கள் நல்ல ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது ? என்று கேட்டது...


''ஓம் நாங்கள் இண்டைக்கு தான் ஆஸ்பத்திரியில் இருந்து வாறம்... என்ட மகனுக்கு இன்று தான் அவனுடைய வாழ்க்கையில் முதன் முதலாக தன் இரு கண்களாலும் உலகத்தைக்காணும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது'' என்றார்...அந்தப்பெரியவர்பிறந்திருக்கும் புது வருடத்தில் எதோ நம்மால முடிஞ்ச ஒரு செண்டிமெண்ட் கதையுடன் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து உங்கள் மனதிலும் கூட நல்ல விஷயத்தை இந்தக்கதை மூலமாக பதித்துச் செல்லலாம் என்ற நப்பாசையில்....படித்து பாதித்த இந்தக்கதை சொல்லும் படிப்பினை:


''எந்த ஒரு விஷயத்தையும் முற்றுமுழுவதாய் அறிந்து கொள்ளாமல் முடிவுக்கு வராதீர்கள்''

'கதை' மனதை எதோ பண்ணுதில்ல?

இத இத இதத்தான் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்த்தேன்....
வர்றேன்..
(வடிவேல் கொடுத்த ட்ரைனிங் ஹி....ஹி...)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

3 comments:

Bunny said...

cool my sister...daz a nice one...BUNNY

Nimalesh said...

Puthuvarushathula muthal pathive very touchy ........da.....yeppadi pa.... mudiuthe....

cheena (சீனா) said...

அன்பின் டயானா

புரிகிறது - நாம் எதனையுமே முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது - உண்மை

நல்வாழ்த்துகள் சுவாரசியமாகக் கொண்டு சென்று அறிவுரை கூறியதற்கு

நல்வாழ்த்துகள் டயானா

LinkWithin

Blog Widget by LinkWithin