ஏற்கனவே நானும் ஒருசில பாடல்களை கேட்டு பெற்று பத்திரப்படுத்தி வைத்திருந்தாலும் இன்று ஒட்டுமொத்த பாடல்களும் இணையத்தில் வெளியான நிலையில்
அந்தப்பாடல்களை உங்கள் முன்னிலையில் அலசிப்பார்க்கும் ஆசையில் இந்தப்பதிவு !
பொதுவாக ஒரு பாடலைக் கண்மூடிக் கேட்கும்போது A .R .ரஹ்மான் இசை புறம்பாய்த் தெரியும்.
அந்த தன்மை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களில் இருந்தாலும், அவருக்கே உரிய தனித்துவம் (SPECIALITY) இந்தப் பாடல்களின் வாயிலாகப் புலப்படவில்லை.
ஹோசனா(விஜய் பிரகாஷ், BLAZEE , SUZZANE ) மற்றும் ஓமனப்பெண்ணே(பென்னி தயாள்) பாடல்களில் ONE LOVE அல்பத்தின் தாஜ்மஹால் பாடலின் தாக்கமும், வேறு சில பாடல்களின் கலவை கலந்த நிலையிலும் தெரிவதோடு,
BLUE ஹிந்தி படத்தின் FIQURAANA பாடலின் தாக்கம் அன்பில் அவன்(தேவன், சின்மை) மற்றும் கண்ணுக்குள்(நரேஷ் ஐயர்) பாடல்களில்....
ஆரோமேலே(அல்போன்ஸ்) பாட்டு ஆரம்பம் பக்கா ''ஏலே நேரம் வந்திருச்சி''- சக்கரக்கட்டியில் இருந்து..ஆனால் மீதிப்பாதியின் கலவை புதிது...
''மன்னிப்பாயா''(ஸ்ரேயா கோஷல் , A .R .R ) பாட்டு கேட்க நல்லா இருந்தாலும் ஏதோ ஒரு குறை உள்ளது....(மன்னிப்பாயா என்ற வார்த்தையை பாடலில் இருந்து தவிர்த்திருக்கலாம்... காரணம் அந்தப்பாட்டு எனக்கு ''குரு'' திரைப்பட ஆருயிரே பாடலை வார்த்தைகளால் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது..
கார்த்திக் பாடிய தீம் பாட்டு சுமார் ரகம்....
இந்த அத்தனை பாடல்களையும் கிட்டத்தட்ட மாறி மாறி 5 தடவைகள் கேட்டுவிட்டு தான் இந்தப்பதிவை இடுகிறேன்....
ஒருவேளை படம் வெளியான பின்னர் பாடல்கள் காட்சியமைப்புகளோடு இன்னும் சிறப்பாயமைய வாய்ப்புகள் இருக்கு...
என்றாலும் ஏதோ ஒரு ஏமாற்றம்.. வழமையாக இசைப்புயலின் பாடல் கேட்கும் போது ஏற்படும் ஒருவித மெய் சிலிர்க்கும் அனுபவம்..(VTV க்கு முதல் வெளிவந்த சக்கரக்கட்டியின் மருதாணி பாடலின் INTERLUDES இல் இருந்து கூட அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது..) ஆனால் இந்தப்படத்தின் ஒரு பாடலில் கூட அந்த அனுபவம் ஏனோ எனக்கு ஏற்படவில்லை...:(
இசைப்புயலின் தீவிர ரசிகர்கள் இந்தப்பதிவை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை..
என்னைப்போல சில இசைப்புயல் வெறியர்கள் இதே உணர்வுடன் இருப்பது போல்
பலர் அனைத்து பாடல்களும் நன்றே என்று சொல்லவும் செய்கிறார்கள்..
எனினும் பாடல்கள் பற்றிய ரசனை அவரவர் உள்ளச்செவியை பொறுத்தது... அது மட்டுமல்லாமல் முகம்கொடுக்கும் EXPOSTURE யும் பொறுத்தது.
VTV பாடல்கள் பற்றிய என்னுடைய உணர்வு இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் ....இசைப்புயல் ஹிந்தி திரையிசைக்குள் ஆதிக்கம் செலுத்த முழுமையாக நுழைந்த பின் அந்தப்பாடல்களை கேட்டு பழகியதால் எனக்கொள்ளலாமா ??
ஆம் இப்ப அப்படித்தான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்...
இதுவரை கேட்டதில் ஹோசனா பாடலும், ஓமனப்பெண்ணே பாடலும் என்னுடைய தெரிவாக அமைகின்றன..
ஹோசனா பாடலின் ''ஹெல்லோ... ஹலோ'' என வரும் BLAZEE யின் கணணிமயப்படுத்தப்பட்ட குரல் பிடித்திருப்பதால்... இப்போது என் RINGTONE கூட அதுவாகிப்போனது...
என்ன செய்ய எல்லாம் A .R .R இன் மாயம்!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
என்னைப்போல சில இசைப்புயல் வெறியர்கள் இதே உணர்வுடன் இருப்பது போல்
பலர் அனைத்து பாடல்களும் நன்றே என்று சொல்லவும் செய்கிறார்கள்..
எனினும் பாடல்கள் பற்றிய ரசனை அவரவர் உள்ளச்செவியை பொறுத்தது... அது மட்டுமல்லாமல் முகம்கொடுக்கும் EXPOSTURE யும் பொறுத்தது.
VTV பாடல்கள் பற்றிய என்னுடைய உணர்வு இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் ....இசைப்புயல் ஹிந்தி திரையிசைக்குள் ஆதிக்கம் செலுத்த முழுமையாக நுழைந்த பின் அந்தப்பாடல்களை கேட்டு பழகியதால் எனக்கொள்ளலாமா ??
ஆம் இப்ப அப்படித்தான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்...
இதுவரை கேட்டதில் ஹோசனா பாடலும், ஓமனப்பெண்ணே பாடலும் என்னுடைய தெரிவாக அமைகின்றன..
ஹோசனா பாடலின் ''ஹெல்லோ... ஹலோ'' என வரும் BLAZEE யின் கணணிமயப்படுத்தப்பட்ட குரல் பிடித்திருப்பதால்... இப்போது என் RINGTONE கூட அதுவாகிப்போனது...
என்ன செய்ய எல்லாம் A .R .R இன் மாயம்!
இனி உங்கள் அபிப்பிராயம் ?? தொடரட்டும்
12 comments:
பாடல்கள் ஹிட்டோ இல்லையோ என்னைப் பொறுத்தவரை விழலுக்கு நிறைத்த நீர் காரணம் சிம்பு கதாநாயகன். சிலவேளைகளில் சிம்பு கெளதமுக்கு அடங்கி நடந்தால் படம் பார்கக்கூடியதாக இருக்கும் இல்லையேல் என்ன கொடுமை தான்.
ரகுமானில் புதிசாக எதுவும் தெரியவில்லை.
கவலை வேண்டாம் டயானா, ரகுமான் பாட்டு எப்படியும் ஏமாற்றாது
விண்ணைத் தாண்டாமல் மனதைத் தொடும்...
VTV விண்ணையும் தாண்டும் . ஏனெனில்..A.R Rahman um.. தாமரையும் சேர்ந்து ஒரு கலக்கல் கலக்கி இருகிறார்கள்.. பாடல்கள் சூப்பர்ர்ர்ர்ர்ர்...
விண்னை தாண்டி பாடல்கள் ஒலிக்கட்டும்!
உண்மை. ரகுமானின் பாடல்கள் என்கிற தனித்தவம் இதில் தெரியவில்லை
Vinnai thandum Dye..... Kavalai vendam........bt irunthalum Taxi Taxi yendra pattuke yethaa song ithula illa....allmost yellam melody.....
பாடல்கள் வந்த நாளிலிருந்து தலைவரின் இசையிலும் தாமரையின் வரிகளிலும் மூழ்கி கொண்டே இருக்கிறேன். அனைத்து பாடல்களும் அருமை அழகு. குறிப்பாக ஓசன்னா மர்றும் மன்னிப்பாயா
Copared to the couples retreat tracks VTV songs are great. Rahman has shown his variety in each son track. VTV songs are going to be the best songs of this year. There were no hit songs in the year of 2009. Bad kutthu song culture has spoiled the quality tamil songs.VTV songs are going be in the top of the charts for along period.
வி:தா:வ பாடல்கள் தமிழ் பாடல்களில் புதிய அத்தியாயம்.
akku veru aani veraa pirichchu meinju irukkireenga..oru vishayatha alasi aaraindhu adhail patri thedi vezhiyidum ungazh aatralukku oru Salaam podalaam/salute pannalaam.
Enakkku ivvalavu vishayam ellaam theriyaadhu aana..saadharanamaa ketkumpodhu paadal'hazh ok'aaha irundhaalum..thirumba thirumba ketka thoondavillai...orukka ketkalaam rendu tharam ketkalaam..but avvalavuthaan...aaha oho endru puhazhum azhavukku angu ondrum illai :)
Post a Comment