காத்திருந்த அன்பர்களே நண்பர்களே ... இதோ என்னுடைய சின்ன மூளையை கசக்கிப்பிழிந்து ஐன்ஸ்டீன் பூட்டாவின் கேள்விக்கான விடையை கண்டுபிடித்துள்ளேன். இந்த விடை சரி என்றால் அந்த 2% க்குள் நானும் அடக்கம்....... இல்லை என்றாலும் கூட அதே 2%க்குள் தான்.. அப்டின்னு சொல்லி மனசை தேற்றிக்கொள்கிறேன்... விடுங்க ...
(புதிதாக இந்த வலைப்பூவில் நுழைந்தோர் கவனிக்க: இப்பதிவில் கொடுக்கப்பட்ட பதிலுக்கான கேள்விக்காக கீழ்நோக்கி ஒன்று விட்ட பதிவை விசிட் செய்யவும். அதுக்குப்பிறகு இங்கு மூக்கை....மன்னிக்கவும்... பார்வையை நுழைக்கவும்)
சரி நான் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி கண்டுபிடித்த விடையில் முரணின்றி அமைந்த அமைப்பினை கீழே தந்திருக்கிறேன்...
Nationality - Colour - Beverage - Smoke Brand - Pet
Norwegian - Yellow - Water - Dunhill - Cats
Dane - Blue - Tea - Blend - Horses
Brit -Red - Milk - Pall Mall -Birds
German - Green - Coffee - Prince - Fish
Swedish - White - Beer - Blue Master - Dogs
எனவே மீனுக்கு சொந்தக்காரர் ஜெர்மனியர்.
கேள்வியின் பின்னூட்டத்தில் இணைந்த இன்னொரு அனானிக்கும் இதே விடை வந்துள்ளது. என்றாலும் இந்த கேள்விக்கான விடையை யாராச்சும் உறுதிப்படுத்த முடியும் என்றால்... நல்லது.
ஒரு கேள்விக்கு விடைய சொல்லிட்டு அந்த பதில் சரியானதா என காத்திருப்பதும் கொடுமைதான்.... சபா .....
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
1 comment:
yeppadi dyena ippadi,,,, suthama puriyavilla... i will ask with ma frns........
Post a Comment