நீண்ட நாளாக இந்த குறித்த அம்சம் பற்றி பதிவிட எத்தனித்திருந்தேன். அதற்கான ஒரு முழுமையான தேடலிலும் மூழ்கியிருந்தேன். தேடுதலில் கிடைத்த அம்சங்கள் உங்களுக்கும் பயன் தரும் என்ற நோக்கில் ... இருவாரங்களுக்கு முன்னர் Continuum Finger Board என்ற இசைக்கருவி பற்றிய ஒரு தகவலைப்படித்து, அதுபற்றி அறிந்துகொள்ள உந்தப்பட்டதன் விளைவாக (அது என்ன தகவல்னு அறிய ஆசைப்படுறீங்க இல்ல..) அதாவது இசைப்புயல், எந்திரன் திரைப்படப்பாடலுக்காக இந்த Continuum Finger Board இசைக்கருவியை பயன்படுத்துகிறார் என்ற தகவலை வெள்ளித்திரை நிகழ்ச்சிக்காக பெற்றபோது உண்டான ஈடுபாடு!
இதன் அமைப்பு சாதாரணமாக நாங்கள் பயன்படுத்தும்/ கண்டிருக்கும் Music-Keyboard போலில்லாமல் (அதன் அமைப்பிலும் சரி அது தன்பால் கொண்டிருக்கும் தொழிநுட்பத்திலும் சரி) வித்தியாசப்பட்டிருக்கு. படத்தை பார்க்கும் போதே உங்களுக்கு புரியும்.
Lippold Haken (University of ILLINOIS) இனால் வடிவமைக்கப்பட்ட இக்கருவி இதுவரை உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
Touch Screen அமைப்பு இதன் சிறப்பம்சமாக இருக்கின்றது. அத்தோடு உருவாக்கப்படும் ஒலியை தொகுத்துத்தரக்கூடியமை, வேறு எந்த ஒரு (மீட்டப்படும்) இசைக்கருவியையும் கொண்டு செய்யமுடியாத ஒன்று!
இந்திய இசைத்துறையை பொறுத்தவரை இதை பயன்படுத்திய பெருமை இசைப்புயலை மட்டுமே சார்ந்து நிற்கிறது. மேலும் இக்கருவியை அவர் முதல் தடவையாக,ஒரு திரைப்படத்திற்காக பயன்படுத்தியது டெல்லி -௦06 "ரெஹ்ந து" என்ற பாடலுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்னொரு சிறப்பு - இந்த இசைக்கருவியை மீட்டியபடியே அந்தப்பாடலை இசைப்புயல் பாடியமை.
இந்த இசைக்கருவியை பயன்படுத்துகின்ற ஏனைய இசையமைப்பாளர்கள் மற்றும் இதைப்பயன்படுத்தி படைக்கப்பட்ட சில படைப்புகள்:
1) (Dream Theater's keyboardist) Jordan Rudess
a) Octavarium என்ற அல்பத்திலிருந்து "Octavarium" , "Sacrificed Sons" பாடல்கள்
b) 2007's Systematic Chaos இலிருந்து "The Dark Eternal Night" and "Constant Motion"
c) Black Clouds & Silver Linings என்ற அல்பத்திலிருந்து "A Nightmare to Remember", "The Count of Tuscany", "The Shattered Fortress" பாடல்கள்.
d) 2007 இல் வெளியான The Road Home அல்பம்
2) John Williams
Indiana Jones and the Kingdom of the Crystal Skull திரைப்பட BGM
3) Jay Metarri
4) John Paul Jones
5) Randy Kerber
இந்த இசைக்கருவியை பயன்படுத்துகிற சிலரில் ஆறு பேரின் பெயரை நான் கொடுத்துட்டேன். நீங்க இப்ப இரண்டு பேரின் பெயரையாவது முடிஞ்சா கண்டு பிடிச்சு பின்னூட்டமிடுங்கள்! (பின்ன இவ்வளவு விஷயம் நான் தேடிக்கொடுத்திருக்கேன்.. உங்களுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்க வேணாமா?? ஹி ஹி..)
உங்கள் செவிகளுக்காக Continuum-Fingerboard பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் கீழே:
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf