இளைய தலைமுறையினருக்கு இவருடைய பெயர் மட்டுமே பரிச்சயம்... ஆனால் ஒரு பெண்ணாக.. தமிழர் பாரம்பரியமான கர்நாடக இசையில் கொடிகட்டி பறந்தவர் என்ற பெருமையுடன், தமிழ்த்திரை இசையுலகிலும் ஒரு தலை சிறந்த இசையமைப்பாளராக பாடகியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் இவர் .
முழுப்பெயர் - தாமல் கிருஷ்ணசுவாமி பட்டம்மாள். ஆனால் உண்மையான பெயர் அலமேலுவாக இருக்க... 'பட்டா.. பட்டா' என்று செல்லமாக எல்லாராலும் அழைக்கப்பட்டு, பிறகு 'பட்டம்மாள்' என்றே இசை வரலாற்றில் பொறிக்கப்பட்டவர்.
இவருடைய சமகாலத்தவர்களான சுப்பு லக்ஷ்மி, வசந்தகுமாரி இருவரும்கூட இசை முத்துக்களாக திகழ்ந்தவர்கள் என்றாலும் பட்டம்மாளின் புகழ் சர்வ தேசமும் எட்டிப்பார்த்து, கர்நாடக இசையை தொட்டுத்துலக்கியது. கேள்வி ஞானத்தில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த இவருக்கு இசைக்குரு என்று யாரும் இருக்கவில்லை என்பது தான் ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயம். ஆனாலும் இவருடைய ஆரம்ப பள்ளிப்பருவத்தில் ' தெலுங்கு வாத்தியார்' என்று ஒருவர் இசைக்கான பிள்ளையார்சுழி இட்டுக்கொடுத்திருந்தாராம்.( இதுபற்றி யாருக்காச்சும் தெரிந்த பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள்)
தன்னுடைய பத்தாவது வயதிலேயே இந்திய அரசு நடாத்திய இசைப்பரீட்சையில் கலந்துகொண்டு சித்தி எய்திய பட்டாமாளின் இசைத்தாகம் அவருடைய ரத்தத்திலேயே ஊறியிருந்தது. (அவருடைய தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி, தாயார் காந்திமதி (ராஜம்மாள்) இருவரும் இசையோடு தம்மை இணைத்தவர்கள்)
இவர் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விக்கிபீடியாவை நாடுங்கள்
28.03.1919இல் உதித்த இந்த இசைக்களஞ்சியம்(ஆமா இப்ப இவருக்கு 90 வயது), பல சவால்கள் தாண்டி, வெற்றி கண்டு தன்னை இசைக்காக முழுமையாக அர்ப்பணித்து, சாதனைப்பெண்களில் ஒருவராக திகழ்ந்து இத்தனை காலமும் இசையுள்ளங்களை தன் வசப்படுத்திய 'சங்கீத சாகர ரத்னா' D.K.பட்டம்மாள் என்றும் நம் உள்ளங்களில்!
1 comment:
saw this on poocharam too......
Post a Comment