Sunday, 10 January 2010

விண்ணை தாண்டுமா???? VTV பாடல்கள்

..எவ்வளவுதான் கட்டிக் காக்கப்பட்டிருந்தாலும் உலகளாவிய உத்தியோகபூர்வ வெளியீட்டின் முன்னர் இணையங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள்... தடுப்புகளைத் தாண்டி வந்து தொட்டு பலரின் எதிர் பார்ப்புகளை முட்டிக்கொண்டும் இருக்கிறது.

ஏற்கனவே நானும் ஒருசில பாடல்களை கேட்டு பெற்று பத்திரப்படுத்தி வைத்திருந்தாலும் இன்று ஒட்டுமொத்த பாடல்களும் இணையத்தில் வெளியான நிலையில்

அந்தப்பாடல்களை உங்கள் முன்னிலையில் அலசிப்பார்க்கும் ஆசையில் இந்தப்பதிவு !

பொதுவாக ஒரு பாடலைக் கண்மூடிக் கேட்கும்போது A .R .ரஹ்மான் இசை புறம்பாய்த் தெரியும்.

அந்த தன்மை விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களில் இருந்தாலும், அவருக்கே உரிய தனித்துவம் (SPECIALITY) இந்தப் பாடல்களின் வாயிலாகப் புலப்படவில்லை.

ஹோசனா(விஜய் பிரகாஷ், BLAZEE , SUZZANE ) மற்றும் ஓமனப்பெண்ணே(பென்னி தயாள்) பாடல்களில் ONE LOVE அல்பத்தின் தாஜ்மஹால் பாடலின் தாக்கமும், வேறு சில பாடல்களின் கலவை கலந்த நிலையிலும் தெரிவதோடு,

BLUE ஹிந்தி படத்தின் FIQURAANA பாடலின் தாக்கம் அன்பில் அவன்(தேவன், சின்மை) மற்றும் கண்ணுக்குள்(நரேஷ் ஐயர்) பாடல்களில்....

ஆரோமேலே(அல்போன்ஸ்) பாட்டு ஆரம்பம் பக்கா ''ஏலே நேரம் வந்திருச்சி''- சக்கரக்கட்டியில் இருந்து..ஆனால் மீதிப்பாதியின் கலவை புதிது...

''மன்னிப்பாயா''(ஸ்ரேயா கோஷல் , A .R .R ) பாட்டு கேட்க நல்லா இருந்தாலும் ஏதோ ஒரு குறை உள்ளது....(மன்னிப்பாயா என்ற வார்த்தையை பாடலில் இருந்து தவிர்த்திருக்கலாம்... காரணம் அந்தப்பாட்டு எனக்கு ''குரு'' திரைப்பட ஆருயிரே பாடலை வார்த்தைகளால் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது..

கார்த்திக் பாடிய தீம் பாட்டு சுமார் ரகம்....

இந்த அத்தனை பாடல்களையும் கிட்டத்தட்ட மாறி மாறி 5 தடவைகள் கேட்டுவிட்டு தான் இந்தப்பதிவை இடுகிறேன்....

ஒருவேளை படம் வெளியான பின்னர் பாடல்கள் காட்சியமைப்புகளோடு இன்னும் சிறப்பாயமைய வாய்ப்புகள் இருக்கு...


என்றாலும் ஏதோ ஒரு ஏமாற்றம்.. வழமையாக இசைப்புயலின் பாடல் கேட்கும் போது ஏற்படும் ஒருவித மெய் சிலிர்க்கும் அனுபவம்..(VTV க்கு முதல் வெளிவந்த சக்கரக்கட்டியின் மருதாணி பாடலின் INTERLUDES இல் இருந்து கூட அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது..) ஆனால் இந்தப்படத்தின் ஒரு பாடலில் கூட அந்த அனுபவம் ஏனோ எனக்கு ஏற்படவில்லை...:(

இசைப்புயலின் தீவிர ரசிகர்கள் இந்தப்பதிவை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை..

என்னைப்போல சில இசைப்புயல் வெறியர்கள் இதே உணர்வுடன் இருப்பது போல்
பலர் அனைத்து பாடல்களும் நன்றே என்று சொல்லவும் செய்கிறார்கள்..

எனினும் பாடல்கள் பற்றிய ரசனை அவரவர் உள்ளச்செவியை பொறுத்தது... அது மட்டுமல்லாமல் முகம்கொடுக்கும்
EXPOSTURE யும் பொறுத்தது.

VTV பாடல்கள் பற்றிய என்னுடைய உணர்வு இவ்வாறு அமைந்திருப்பதற்கான காரணம் ....இசைப்புயல் ஹிந்தி திரையிசைக்குள் ஆதிக்கம் செலுத்த முழுமையாக நுழைந்த பின் அந்தப்பாடல்களை கேட்டு பழகியதால் எனக்கொள்ளலாமா ??

ஆம் இப்ப அப்படித்தான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்...


இதுவரை கேட்டதில் ஹோசனா பாடலும், ஓமனப்பெண்ணே பாடலும் என்னுடைய தெரிவாக அமைகின்றன..

ஹோசனா பாடலின் ''ஹெல்லோ... ஹலோ'' என வரும் BLAZEE யின் கணணிமயப்படுத்தப்பட்ட குரல் பிடித்திருப்பதால்... இப்போது என் RINGTONE கூட அதுவாகிப்போனது...
என்ன செய்ய எல்லாம் A .R .R இன் மாயம்!


இனி உங்கள் அபிப்பிராயம் ?? தொடரட்டும்
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Sunday, 3 January 2010

''PAA'' ('பா'சம் - 'பா'ர்வைகள் - 'பா'டம்)

முன்குறிப்பு:
''PAA''- நிச்சயமாக இது ஹிந்தித் திரைப்பட விமர்சனம் அல்ல


ஒரு ரயில் தன் பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் ,

ஒரு வயதானவரும், 25 வயது பூர்த்தியான அவருடைய மகனும்..

எதிர்ப்பக்க இருக்கைகளில் ஒரு இளம் ஜோடி...இவர்களை கவனித்த வண்ணம்..

ரயில் தன் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு கணமும் அந்த இளைஞனின் கண்களிலும் உள்ளத்திலும் அவ்வளவு குதூகலம்!


யன்னல் பக்கத்தில் அமர்ந்து கொண்ட அவன் தன் கரத்தை வெளியே நீட்டி தழுவிச்செல்லும் காற்றை அனுபவித்தான். பின் மரங்களைக் காட்டி "அப்பா பாருங்கோ மரமெல்லாம் பின்னோக்கி அசையுது" என்றான்.

வயதானவரும் புன்னகைத்தவாறே தன் மகனின் வியப்புகளுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தார்.


எதிர்ப்பக்கத்தில் இருந்த ஜோடிக்கு ஒரே குழப்பம்... என்னடா 25 வயதுப் பொடியன் சின்னப்பிள்ளை போல நடந்து கொள்கிறானே என்று...

குழப்பமும் வியப்பும் ஒருங்கே சேர அவனை தொடர்ந்தும் கவனித்துக்கொண்டு இருந்தது அந்த ஜோடி..



சிறிது நேரத்தில் '' அப்பா பாருங்கோ குளத்தில பறவை நீந்துது என்றான்'' மகிழ்ச்சி பொங்க....


அந்த நேரத்தில் மழை வரவே மழைத்துளிகள் அவன் கைகளில் பட, தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அப்பா இப்போது மழைத்துளிகள் என்னைத் தொடுகின்றன என்று ஆனந்தத்தில் துள்ளினான்...


இதுக்குமேலும் பார்க்க சகிக்காமல், அந்த ஜோடி பெரியவரிடம் பேச்சு கொடுத்தது..

உங்கள் மகனை நீங்கள் நல்ல ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்து ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது ? என்று கேட்டது...


''ஓம் நாங்கள் இண்டைக்கு தான் ஆஸ்பத்திரியில் இருந்து வாறம்... என்ட மகனுக்கு இன்று தான் அவனுடைய வாழ்க்கையில் முதன் முதலாக தன் இரு கண்களாலும் உலகத்தைக்காணும் பாக்கியம் கிடைத்திருக்கின்றது'' என்றார்...அந்தப்பெரியவர்



பிறந்திருக்கும் புது வருடத்தில் எதோ நம்மால முடிஞ்ச ஒரு செண்டிமெண்ட் கதையுடன் பதிவுலகத்தை எட்டிப்பார்த்து உங்கள் மனதிலும் கூட நல்ல விஷயத்தை இந்தக்கதை மூலமாக பதித்துச் செல்லலாம் என்ற நப்பாசையில்....படித்து பாதித்த இந்தக்கதை சொல்லும் படிப்பினை:


''எந்த ஒரு விஷயத்தையும் முற்றுமுழுவதாய் அறிந்து கொள்ளாமல் முடிவுக்கு வராதீர்கள்''

'கதை' மனதை எதோ பண்ணுதில்ல?

இத இத இதத்தான் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்த்தேன்....
வர்றேன்..
(வடிவேல் கொடுத்த ட்ரைனிங் ஹி....ஹி...)
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf