Saturday, 19 June 2010

பலமும் பலவீனமும் பிரமிப்பும் ராவண்




(இந்தப் பதிவு - கண்டிப்பாக பார்த்தவர்களுக்கு மட்டும்)

1) இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படத்திலும் காட்டப்படாத அளவுக்கு காட்டின் அழகு கண்களை நிறைக்கிறது. அழகானவற்றை பிரமிக்க வைக்கும் அளவுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் காட்டுவது சந்தோஷ் சிவனுக்கு கை வந்த கலை. அதை இங்கும் நிரூபித்திருக்கிறார். மலை, மழை, மரங்கள், நீர், ஏன் ஐஸ்வர்யா ராய் கூட அழகின் செழுமையில் ஒருபடி மேல்தான் இந்தப் படத்தில்.
திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.
(மணிகண்டனுக்கும் இதில் பங்குண்டு)



ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங்க்கும் கிரெடிட் கொடுக்கலாம். பெயரோடத்தின்போது கிராபிக்ஸ் வியக்கவைக்கிறது

2 ) சொல்லிக்கொள்ளும் படியாக வீர தீர சண்டைக்காட்சிகள் இல்லை என்றாலும் நிறைவுக்கட்டத்தில் தொங்குபாலச் சண்டை... ஆஹா.... கமெராவின் கோணத்தில் மெய் சிலிர்க்கவைத்தது.

3) எனக்கு ஐசுவை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் இந்தப்படத்தைப் பொறுத்தவரை ஐசுவின் கதாபாத்திரம் மட்டுமே மனதை நிறைக்கிறது...திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் கூட.



4) இசைப்புயலின் BGM மிரட்டுகிறது காட்சிகளுக்குத் தக்கவாறு... என்றாலும் இந்தப்படத்தை பொறுத்தவரை காட்சிகளுக்கிடையில் பாடல்களுக்கான செருகல்கள் அர்த்தமற்று இருக்கின்றன.


5) ராவண் கதாபாத்திரத்தை இன்னும் பலமானதாகக் காட்டியிருக்கலாம்
(இது எனது உள் மனதின் ஏக்கம்... ரொம்ப எதிர்பார்தேன்பா)


6) நவீன ராமாயணம் + அதன் திருப்பங்கள் - இயக்குநர் சிகரம்
மணிரத்தினத்துக்கு மட்டுமே உரிய சிறப்பு

7) மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை.(மணி அங்கிள் அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்)

8) கிளைமாக்ஸ் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் திருப்புமுனை கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்(த்ரில் அதிகரித்திருக்கும்).. ஏனென்றால் எதிர்பார்த்தது தான் கிளைமாக்ஸ் ஆனது. எனவே எனக்கு த்ரில் இல்லாமல் போனது :((
(உங்களுக்கு எப்படியோ தெரியாது)


9) விக்ரமும், ப்ரியாமணியும் தாங்களே ஹிந்தி dub: குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

10) சில பிரம்மிப்பூட்டும் இடங்களை இந்தப்படத்துக்காகவே தேடித் தேடி ஒளிப்பதிவு செய்திருக்காங்க




விஷ்ணு பகவானின் இரண்டாகப் பிளந்திருந்த சயன சிலை Locationஐ எப்படித் தேடிப்பிடித்தார்களோ தெரியல.
(அந்த இடத்துக்கு நேரே சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. படம் பார்த்தபோது)

11) பிரதான நடிகர்கள் இந்தப்படத்துக்காக எடுத்திருக்கும் ரிஸ்க்குகள் படம் பார்க்கும்போது அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிக்கச்செய்கிறது.

12) ஹனுமான் பாத்திரத்தை பிரதிபலிக்கும் கோவிந்தாவின் பாத்திரத்தை(தமிழில் கார்த்திக்) மதுப்புட்டியோடு மணி அங்கிள் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல்

குறைகளும் நிறைகளும் இருந்தாலும்
நம்பிப் பார்க்கலாம் இந்த நவீன ராமாயணத்தை..
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

19 comments:

வந்தியத்தேவன் said...

//மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை.(மணி அங்கிள் அதை கொஞ்சம் கவனித்திருக்கலாம்)

வசனம் திருமதி.மணிரத்னம்//

சின்ன சந்தேகம் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? இல்லை தமிழ்ப் படத்தை விட்டுவிட்டு ஹிந்திக்கு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள், இல்லை அபிசேக்கின் ரசிகையா?

சுதர்ஷன் said...

nice review. mani always rocks with cinematography ... santhosh sivan was good in uyire also

R.Arunprasadh said...

உங்களின் பதிவை வாசித்து பார்த்தேன். நீங்க ஹிந்தியில் தானே அந்த படத்தை பார்த்திங்க.. தமிழ் படத்தில் படம் முழுமை பெற்றிருக்குனு சொல்லலாம். (ஒரளவு தான்) இயற்கையை தான் நானும் ரசித்தேன். எனது பதிவிலும் இயற்கைக்கு ஒரு முக்கிய இடம் கொடுத்தேன். மனத்திற்கு மகிழ்ச்சி நீங்களும் என்னை போன்றே இயற்கையை ரசித்ததற்கு!
http://aprasadh.blogspot.com

Anonymous said...

yaa nalla padam yaarum nampi paarkkalam.....dye

vaseeharan said...

////திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.////
yes akka... Cinematography superb... great work by Santhosh sivan and Manikandan..

We had expected alot different from Mani... Naveena RAMAYANAM ok.. but some thing lacks in that...

////மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை////

Vasanam Thamilil Sugasini... uyirpaga illathan... manida trademark Missing... too much vasanagal i think..

Ennoda sontha Karuthu.. Filmda last Half hour, cinematography, BGM hero A.R.R than padatha flop aagama thooki niruthuranga... Something lacks in Mani's style...

RJ Dyena said...

@வந்தியத்தேவன்

Subtitle ஆங்கிலத்தில் போட்டாங்க... அத்தோட எனக்கு ஹிந்தி கொஞ்சம் விளங்கும்... இலங்கையில் இப்போதைக்கு ஹிந்தி படம் தான் பார்க்கலாம்.. (புக் பண்ணி பார்க்கக் கூடிய வசதி Liberty'la மட்டும் தான் இருக்கு அண்ணா..

தமிழிலில் பார்க்க இன்னும் ஒரு வாரமாவது போகும் பரீட்சை வேற இருக்கு


தமிழ் வசனம் திருமதி.மணிரத்னம் என்றாலும்
மணிஅங்கிள் தான் முழுப்படைப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பது என் ஆவல். ஹிந்திக்கான வசனம் -Vijay Krishna Acharya

Thanks Sudharshan for ur comments

Thanks a lot Arun
i will read ur blog as well

aamaa - Anonymous
ungal varugaikku nandri

vaseeharan said...

////திரையரங்கின் A/C குளிரையும் தாண்டி ஒளிப்பதிவு கண்களைக் குளுமைப்படுத்தியது எனலாம்.////
yes akka... Cinematography superb... great work by Santhosh sivan and Manikandan..

We had expected alot different from Mani... Naveena RAMAYANAM ok.. but some thing lacks in that...

////மணிரத்தினத்தின் திரைப்படங்களுக்குரிய இன்னுமொரு சிறப்பு - வசனங்கள். ஆனால் இந்தப்படத்தைப் பொறுத்தவரை அவ்வளவு உயிர்ப்பான வசனங்கள் இல்லை. சாதாரணமாக பேசப்பட்ட வசனங்கள்
மனதை எள்ளளவேனும் ஏதும் செய்யவுமில்லை////

Vasanam Thamilil Sugasini... uyirpaga illathan... manida trademark Missing... too much vasanagal i think..

Ennoda sontha Karuthu.. Filmda last Half hour, cinematography, BGM hero A.R.R than padatha flop aagama thooki niruthuranga... Something lacks in Mani's style...

Dhee Voice Academy said...

OBVIOUSLY CORRECT KKA!!...
குறிப்பாக ஒளிப்பதிவாளருக்கும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கும் தலைவணங்குகிறேன்...

இயற்கையை தான் நானும் ரசித்தேன்.....
வழக்கமாக யாராவது ஒரு விஐபியின் கதையை அல்லது புகழ்பெற்ற காப்பியத்தின் கதைகளை உல்டா செய்து தனது படங்களை உருவாக்குபவர், இந்த முறை வீரப்பன் கதையையும் ராமாயணத்தையும் கலந்து ராவணனை உருவாக்கியுள்ளார்.

வந்தியத்தேவன் said...

உங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள். லிபேர்ட்டியில் இருந்து நான் வெகுதொலைவில் இருப்பதால் அங்கேயுள்ள நிலமைதெரியாது. இங்கே இரண்டு மொழிகளிலும் திரையிட்டிருக்கின்றார்கள்.

மணி அங்கிள் சாமர்த்தியமாக கதை யார் என்பதை காட்டவில்லை என அறிந்தேன். அதேபோல் வசனமும் சுஹாசினியின் பெயரில் அவரோ எவரோ? எங்கள் சுஜாதா இல்லாத குறை பல இடங்களில் தெரிவதாக அறிந்தேன், ஐசுக்காக விரைவில் பார்க்கலாம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாசிக்க வந்தேன், அப்புறம் படம் பார்த்தவாகள் மட்டும் வாசிக்க வேண்டும் என இருந்ததை பார்த்து விட்டு வாசிக்க வில்லை.

படம் பார்த்துவிட்டு வாசிக்கிறேன்

பனித்துளி சங்கர் said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்துவிடுகிறேன் . உங்களின் விமர்சனம் அருமை . பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீ. அகிலன் said...

maturity தெரிகிறது உங்கள் விமர்சனத்தில் sis, azhagaana vasana nadai!
:)

Nimalesh said...

i watched in both version it waz awesome movie.... Hats off to the Mani & co.& ur preview to look gud thx for sharing it ...
i like the Hindhi version than Tamil.........dat's oni ma view....:)

KANA VARO said...

நானும் ராவணனுக்கு முதல் ராவன் பார்க்க திட்டமிட்டுள்ளேன்...

தர்ஷன் said...

அந்த சயனித்திருக்கும் விஷ்ணு சிலை கலை இயக்குனரின் கைங்கரியம் என நினைக்கிறேன்.
நீங்கள் போய் பார்க்கும் போது இல்லாமல் இருக்கலாம்.

AGASIYAM said...
This comment has been removed by a blog administrator.
YUVARAJ S said...

இந்த படத்தில் ஒளிபதிவை தவிர (கண்கொள்ளா இயற்கை காட்சிகள்) வேறு ஒன்றும் இல்லை.

என்னோட விமர்சனத்தை படியுங்கள். சும்மா கலாய்த்து இருக்கேன்.

ம.தி.சுதா said...

நல்லதொரு பார்வை படங்களின் தேர்ந்தெடுப்பும் நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்...

test said...

//விஷ்ணு பகவானின் இரண்டாகப் பிளந்திருந்த சயன சிலை Locationஐ எப்படித் தேடிப்பிடித்தார்களோ தெரியல.
(அந்த இடத்துக்கு நேரே சென்று பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை .. படம் பார்த்தபோது)//

விஷ்ணு சிலை, உடைந்த கோபுரம், மற்றும் பழமை வாய்ந்த கட்டடங்கள் எல்லாமே ஆர்ட் டைரக்டர் கைவண்ணம்! உண்மை போல் தோன்றுவது, உங்களைச் சென்று பார்க்கவேண்டும் போல் எண்ணவைப்பது அவருக்குக்கிடைத்த வெற்றி!
ஒளிப்பதிவு, கலை இன்னும் பலரின் அசாதாரண திறமையும் உழைப்பும், மணியின் சொதப்பலான கதையால் வீணாகிப் போனதுதான் உண்மை!!!