Monday, 11 March 2013

வீட்டுக்குள் இரண்டு வெள்ளை வில்லன்கள்



இப்போதெல்லாம் திரும்பிய திசையில் ஏதாவது ஒரு மரணச் செய்தி தான் நம் ஒவ்வொருவர் செவிகளையும் எட்டிய வண்ணம் உள்ளது... அதில் பல மாரடைப்புச் சாவு, நீரிழிவுச்  சாவு, சிறுநீரக அல்லது ஈரல் சம்பந்தப்பட்ட நோய்ச் சாவாக இருப்பது பயமுறுத்தும் ஓர் விடயம். ஏனென்றால் இவை பாரபட்சம் இல்லாமல் எந்த வயதில் உள்ளவரையும் காவு கொண்ட வண்ணமே உள்ளன.

உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம் நோய்களின் பிரதான காரணிகளாக உள்ளன.

இன்று இந்தப்பதிவில் நான் எதைச்  சுட்டிக்காட்டி உங்கள் மனதில் பதிவிக்க விரும்புகிறேன் என்றால்............

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இரண்டு வெள்ளை விஷங்களைப்பற்றி...

முதல்ல அவை என்னவா இருக்கும் எண்டு நீங்க யோசிங்க ..பிறகு நான் சொல்றேன்...ஓகே....






யோசிச்சு முடிச்சு ஒரு முடிவுக்கு வந்தாச்சா

ம்ம் .. பலே.... சரியா யோசிச்சிருக்கீங்க ...

அந்த இரண்டு வெள்ளை விஷ வில்லன்கள் 

1. சீனி
2. உப்பு


சீனி தரும் விளைவுகள்

 வில்லியம் டப்டி 1975ல் எழுதிய சுகர் ப்ளுஸ் (Sugar Blues) என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-



தினந்தோறும் சீனி உட்கொள்ளும்பொழுது பிரச்னை தீவிரமடைகிறது. உடலில் அமிலத்தன்மை தொடர்ச்சியாக அதிகரிக்கும்பொழுது அதனைச் சரிப்படுத்துவதற்காக இன்னும் நிறைய தாதுப்பொருட்களும் வைட்டமின்களும் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நேரத்தில் பற்களிலிருந்தும் எலும்பிலிருந்தும் நிறைய கால்சியம் அபகரிக்கப்படுகிறது. மொத்தத்தில் உடல் பலவீனமடைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் சீனி குளுக்கோஸ் (கிளைக்கோஜன்) வடிவத்தில் ஈரலில் சேமித்து வைக்கப்படுகிறது. ஈரலின் சேமிப்புத் தன்மைக்கு ஒரு வரையறை இருப்பதால், தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பட்சத்தில் ஈரல் பலூன் மாதிரி விரிகிறது. ஈரலில் இடமில்லாத பட்சத்தில், கூடுதல் கிளைக்கோஜன் கொழுப்பு அமிலங்களாக இரத்தத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. இவை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதிகம் இயங்காத பாகத்தில் (வயிறு, பிட்டம், மார்பகம், தொடை) சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்தப் பாகங்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துபோகும்பொழுது, அவை இருதயம், சிறுநீரகம் போன்றவற்றிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் இயக்கம் குறைந்துவிடுகிறது. அதீத இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
இதனால் இணைப்பரிவு நரம்பு மண்டலமும் (parasympathetic nervous system) அதன் கண்காணிப்பில் இருக்கும் சிறுமூளை போன்ற உறுப்புக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றன அல்லது செயலிழக்கின்றன. வெள்ளை செல்கள் பெருகுகின்றன. திசு உருவாக்கம் தாமதமாகிறது.
நம்முடைய எதிர்ப்புச் சக்தி குறைந்துபோய் சூடு, குளிர்ச்சி, கொசுக்கடி, கிருமிகள் பாதிப்பு என்று எதுவாக இருந்தாலும் நம்மை விரைவில் பாதிக்கிறது.
அளவுக்கு அதிகமான சீனி, மூளை இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும். பெரும்பாலான காய்கறிகளில் உள்ள குளுட்டமிக் அமிலம்தான் சீரான மூளை இயக்கத்திற்குத் துணை புரிகிறது. அவற்றில் உள்ள 'பி' வைட்டமின்கள்தான் இந்த வேலையைச் செய்கின்றன.
சிம்பையோட்டிக் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட 'பி' வைட்டமின்கள் நம்முடைய குடலில் வாழ்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் வாடி இறந்துபோகின்றன. நம் உடலில் உள்ள 'பி' வைட்டமின்களின் அளவு குறைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி தூக்கத்தை ஏற்படுத்துகிறது. கணிதத் திறனும் நினைவாற்றலும் குறைய ஆரம்பிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சீனி வாயிலோ அல்லது வயிற்றிலோ ஜீரணிக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக கீழ் குடலுக்குச் சென்று நம் இரத்தத்தில் கலக்கிறது. இதனால்தான் சீனி உட்கொண்ட பிறகு "திடீர் சக்தி" ஏற்படுகிறது.
இரத்த நாளங்களில் இப்படித் திடுமென சுக்ரோஸ் சேருவது நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கிறது. சீனி வயிற்றில் நிகழும் இயல்பான இயக்கத்தில் ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. ரொட்டி, இறைச்சி, கோக் பானங்கள் போன்ற வேறு உணவுகளோடு சீனியைச் சேர்த்து உண்ணும் பொழுது வயிறு சீனியைச் சிறிது நேரம் தக்க வைத்துக்கொள்கிறது. 
இறைச்சி ஜீரணம் ஆகும் வரைக்கும் ரொட்டி மற்றும் கோக் பானத்தில் உள்ள சீனி அங்கு தங்கிவிடுகிறது. இறைச்சியில் உள்ள புரதம் செரிக்கும் வரை சீனி அங்கேயே புளித்துப்போய்விடுகிறது. புரதத்தைச் சீனியோடு சேர்க்கும்பொழுது அவை நொதித்துப்போய் விஷமாகின்றன.

உப்பு  தரும் விளைவுகள் 

உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிரதான காரணியாக அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பெரும்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும். 
சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவதனால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 
எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். 
ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன் சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இதுவே ஆரோக்கியத்துக்கு ஒரே வழி.



இனியாவது  உப்பையும் சீனியையும் ஓவரா சாப்பிட்டவங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா....

நன்றி -panippulam .com


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

No comments: