Sunday, 9 August 2009

'உணர்வாய்' மழை(யை)!

"மழையே ஓ மழையே புன்னகை தூவுறியே", "வான் மேகம் பூப்பூவாய் தூவும்", "வானமழை போலே புதுபாடல்கள்... கான மழை தூவும் முகிலாடல்கள்" இந்தப்பாட்டுக்கள் எல்லாம் மனதோரம் எட்டிப்பார்த்துச்செல்லும் மழையை நான் ரசிக்கும் நாட்களிலெல்லாம்...

அந்த "மழையின் அழகை கண்டு ரசிக்க இரண்டு கண்கள் போதாது". இது மழை ரசிப்போர் சங்க உறுப்பினர்களின் ஆதங்க வாசகம்.

இயற்கை அன்னை தந்த வரங்களில் இந்த மழையானது மழலைகள் மலைத்து ரசிக்கும் சொர்க்கம். மழலைப்பருவம் கடந்தும்கூட இன்னும் சிலர் அதை மறக்காமல் ரசிக்கிறார்கள் (அந்தப்பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..)

" 'சோ'வென அழுகிறது -மேகத்தின் கருக்கட்டலில் மழைக்குழந்தை " ஏதோ பள்ளிப்பருவ நாட்களில் கிறுக்கிய கவிதை... இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. சில்லென்ற நினைவுகளும் கூடவே.... அந்த நாட்களில், சிறுவயதுசோகங்களை பகிர்ந்து அழும்போது இந்த மழையும் என்னோடு சேர்ந்தே அழுதிருக்கிறது.

கண்கள் எந்தளவுக்கு மழையின் அழகினை ரசிக்கின்றனவோ அந்தளவுக்கு செவிகளும் கூட அதன் ஓசை கேட்டு உள்ளந்தனை லயிக்கச்செய்கிறது.

மழை தரும் ஓசையில் செவிகள் பெறும் அந்த இன்பம் சிலவேளைகளில் காதுவரை கம்பளியை இழுத்துப்போர்த்தியபடி என்னை உறங்கவும் வைத்திருக்கிறது.

நுவரெலியா பிரதேசம் மழையின் உல்லாசபுரி என்பதால்.. அங்கிருந்த நானும் அதன் வருகையை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன். ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன். (ஆனா இப்ப நுவரெலியாவில் காலநிலை மாறிப்போச்சு... அம்மா அடிக்கடி சொல்லும் 'பஞ்ச் இல்லா' வசனம்)
ஹையோடா.... இந்த மழை பற்றி சொன்னா.. சொல்லிக்கொண்டே போகலாம்.... சரி சரி இப்ப இந்த பதிவிற்கான 'கிளைமாக்ஸ்'க்கு வருவோம்.

கீழே உள்ள வீடியோவை நீங்கள் பார்ப்பதற்கு முன்னர்.. அதன் (PLAY)ப்ளே பொத்தானை அழுத்திவிட்டு.. உடனடியாக கண்களை மூடி, சத்தத்தை மட்டும் செவிமடுங்கள். அதன்பின் அந்த சத்தம் எவ்வாறு எழுப்பப்பட்டது என்பதை மீண்டும் அந்த வீடியோவை (PLAY)ப்ளே செய்து பாருங்கள்.
சில உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்கவியலாதவை. அந்த உணர்வை இந்தப்பதிவு தந்தது என நீங்கள் உணர்ந்திருந்தால் மறக்காமல் உணர்ந்ததை வெளிப்படுத்திச்செல்லுங்கள்.
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

15 comments:

Anonymous said...

malaiye oh malaye yenwazhththukkalaii Dyena wukku thoowiwudu yen sarfil iwwalawu azhagana blog i uruwaakkiyatharkku
super Dye keep it UP ...

வண்ணத்துபூச்சியார் said...

Xlent. Great. Simply Superb.

Thanx for sharing.

Jeya said...

உண்மையாவே உங்கள் பதிவு என்னை எனது சிறு பராயத்துக்கு அழைத்து சென்று விட்டது . அத்துடன் இந்த பின்னுட்டத்தை நான் இடும் போதும் இங்கு இப்போ மழை பாரிய இடி முழக்கதுடன் சோ என்று பெய்து கொண்டு இருப்பதால் இன்னும் என்னை ரசிக்க வைச்சது உங்கள் பதிவு .,, இந்த வீடியோ கூட மிகவும் பிரமாதம்..

வந்தியத்தேவன் said...

உலகத்தில் அழகானவற்றில் மழையும் ஒன்று. அதில் மழையில் நனைவது சொர்க்கம், இசை அழகாக உள்ளது.

C.K.Mayuran said...

அருமை. அசத்தல். இன்னும் மழை வேண்டும்.இன்னும் தேடல் தொடரட்டும். மனசுக்குள் இன்னும் மழை பொழிகிறது.

Nimalesh said...

wow..........clip was really awesome.............jus feel like it Rain get's down....................thx dye.....

SUBBU said...

mmmmm என்னங்க ஆச்சி ரொம்பநாளா ஆலையே கானோம் :(((((((

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

கலீல் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

வண்ணாத்திப்பூச்சியார் - Its my pleasure...Thank you again

JEYA
//உண்மையாவே உங்கள் பதிவு என்னை எனது சிறு பராயத்துக்கு அழைத்து சென்று விட்டது//

அது என் பாக்கியம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் மலரும் நினைவுகளுக்கு உங்களை அழைத்துச்சென்றதை நினைக்கும்போது!

வந்தியத்தேவன் அண்ணா
தங்களையும் இப்பதிவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியத்தை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !

'தேடல்' எனும் அடைமழை எப்போதும் அடித்துப்பெய்யும் இடைவிடாமல் உங்களை போன்றோரின் ஊக்கப்படுத்தல் இருந்தால்..... மயூரன் மிக்க நன்றி!

Nimalesh/ thozha.... unakku meendum meendum en nandrigal

Subbu அதான் வந்துட்டோம்ல.... இனி வழமை போல் பதிவுகள் தொடரும் சகோதரா !

SUBBU said...

//Subbu அதான் வந்துட்டோம்ல.... இனி வழமை போல் பதிவுகள் தொடரும் சகோதரா !//

நன்றி சகோதரி :)))))))

Reshma said...

hi!dyena
so nice....
really amazing
that too like a thunder sound ...
Thank u for sharing
Have a nice day!

mithuna said...

எனி மழை வரும்போது உங்கள் பதிவின் நினைவு வரும் அளவுக்கு பதிவு சிறப்பு!! எனக்கு மிகவும் பிடித்த விடயம் மழை மேலும் பதிவுக்கு மெருகு சேர்த்திருக்கு......nic dye....keep rocking....

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

meendum varuga(Welcome) Subbu.

Thanks Reshma

Mithu Darling.. im glad that u enjoyed it.. sis..

Anonymous said...

டயானா மழை வ௫ம் போது உங்கள் நினைவு வ௫ம் தப்பு தப்பு....தேனுக்குள் விழுந்த தேனி, தேனிலேயே மடிவது போல; நானும் வலைப்பதிவுகளில் மூழ்கி அதிலேயே வீழ்வேனோ???.... இது தான் உண்மை

சுபானு said...

//கண்கள் எந்தளவுக்கு மழையின் அழகினை ரசிக்கின்றனவோ அந்தளவுக்கு செவிகளும் கூட அதன் ஓசை கேட்டு உள்ளந்தனை லயிக்கச்செய்கிறது.

அழகான வரிகள்... உணர்வுடன் கலந்து தந்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

சுபானு said...

//மழை தரும் ஓசையில் செவிகள் பெறும் அந்த இன்பம் சிலவேளைகளில் காதுவரை கம்பளியை இழுத்துப்போர்த்தியபடி என்னை உறங்கவும் வைத்திருக்கிறது.

ஆகா.. எத்தனை அழகு.. இதனை அனுபவித்து இரசித்தவர்களுக்குதான் தெரியும்.. மழையில் சோவெனக் கொட்டும் மழையில் நனைந்து உடலும் உள்ளமும் குளிர்வது ஒரு இன்பம் என்றால் மழைநேரத்தில் கம்பளியால் போர்த்துக் கொண்டு படுப்பது இன்னொரு இன்பம்...

சின்ன வயதில் மழைக்காலத்தில் கட்டிலினை முழுக்க நுளம்பு வலையால் மூடி முகம்முழுக்க போர்வையால் இழுத்து மூடத் தூங்கிய நாட்களை எழிலாக மனதில் கொண்டு வந்தீர்கள்.. நன்றி டயானா..

LinkWithin

Blog Widget by LinkWithin