"உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" -திருவள்ளுவர்-
ஆகஸ்ட் மாதத்தின் முதல் பதிவாக வரவேற்பு தரும் இப்பதிவு இன்றைய நட்புதினம் பற்றியது. உங்களுக்கு தெரியாததல்ல.
சர்வதேச ரீதியில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறன்று இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சிறப்பான விஷயத்துக்கும் ஒரு சிறப்பு நாளை ஒதுக்கி அவை சிலரால் கொண்டாடப்பட்டும், சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருவது சாதாரணமாக இடம்பெறுவது. எது எப்படியோ நல்ல விஷயங்களை நல்ல மனதோட ஏற்றுக்கொண்டால் எப்போதும் நன்மையே!
இந்த சர்வதேச நட்பு தினமானது முதன்முதலாக 1935 இல் அமெரிக்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல ஏனைய நாடுகளுக்கும் பரவியது. இலங்கையை பொறுத்தவரை நண்பர்களுக்கிடையில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு சரி. அதையும் மீறி அவர்களுக்காக ஒரு பாடல் பரிசு வானொலிப் பண்பலைகள் மூலமாகவும் கேட்கும் வாய்ப்பும் உள்ளது.
இந்த நட்பு தினம், பழைய நண்பர்களை மறக்காமல் இருக்கவும், புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், ஏன் பிரிந்த நண்பர்களை ஒன்று சேர்க்கும் ஒரு நாளாகவும் கூட இருந்து வருகிறது. நல்ல விஷயம் தான் இப்படி ஒரு நாள் இருப்பதும் கூட... சண்டைகள் வருவது சகஜம் தான். ஆனால் அந்த சண்டைகள் நிரந்த பிரிவிற்கு வழிவகுத்த சந்தர்ப்பங்களிலிருந்து நண்பர்களை மீட்டெடுத்த சந்தர்ப்பங்கள் இந்த நட்பு தினத்தில் நிகழ்ந்துள்ளன.
நானும் இப்போது என்னுடைய அன்பு நண்பர்கள் பலரை பிரிந்திருந்தாலும், முகப்புத்தகம் அவர்களை என்னருகில் கொண்டுவந்து நிறுத்தியது போன்ற அனுபவத்தை தருகிறது. இந்த நாள் நிச்சயமாக முகப்புத்தகத்தாலும் அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு நாள். காரணம் எந்த தூரத்தில் இருந்தாலும்.. நண்பர்களை எப்போதும் இணைப்பதால்! (நின் சேவைக்கு நன்றி முகப்புத்தகம்)
இந்த நாளில் என்னுடைய பள்ளிபருவ உயிர்த்தோழிகளை நினைத்துப்பார்க்கிறேன்... சாதாரணமாக அந்த வயதில் தோன்றும் நட்பு எந்த எதிர்ப்பார்ப்புமின்றி தோன்றுவது.
என்னுடைய Five Star / Back Street Girls / நாம் ஐவர் etc... இப்படி ஏராளமான பெயர்கள் எங்களுக்கு - நான், சங்கீதா, ரூபி, நித்தியா, சுசீலா பாடசாலையில் நாங்கள் செய்யாத அட்டகாசமில்லை. படிப்பிலும் கெட்டி.. குழப்படியிலும் சுட்டி... புதுசு புதுசா விஷயங்கள் செய்ய, விளையாட ... இப்படி சொல்லிக்கொண்டே.. போகலாம் ... அது ஒரு நிலாக்காலம் ..... எல்லோருக்கும் வந்து போவது போல!
அந்த ஐவரில் இப்போது என்னுடன் இணை பிரியாமல் இருப்பவள் சங்கீதா மட்டுமே... ரூபி - முகப்புத்தகம் மூலமாக அப்ப அப்ப வந்து போவாள் (ஆடிகொருமுறை அமாவாசைக்கொருமுறை) மற்ற இருவரில் ஒருத்தி (சுசீலா) திருமணாகி இந்தியாவில். ஆனால் தொடர்பு எதுவும் இல்லை. மற்றவள்(நித்தியா) ஆசிரியையாக நுவரெலியாவில். ஆனால் தொடர்பில்லை.
எல்லோரும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என்பது என் தினசரி பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கிறது.
மலரும் நினைவுகளோடு....... நான்...
போங்க... நீங்களும்.. போய் மீட்டுங்க உங்கள் நினைவுகளை!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
9 comments:
நட்பிற்கு உருவம் கொடுக்கும் தங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை நட்பு என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.
நட்பிற்கு உருவம் கொடுக்கும் தங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை நட்பு என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.நட்பு நிலைக்கட்டும்.பதிவுகள் தொடரட்டும்.
நட்பிற்கு உருவம் கொடுக்கும் தங்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை நட்பு என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள்.நட்பு நிலைக்கட்டும்.பதிவுகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
Very proud have freind like u da..................... u have make us to go back to our school life.......... as u said 'ATHU ORU NILLA KALAM' i agree with that......
உங்களுக்கும், உங்களுடைய நண்பிகளுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....
நண்பர்கள் தின வாழ்த்துகள், நான் சங்கீதாவுக்கு வாழ்த்து தெரிவிக்க SMS அனுப்பினேன், அந்த நம்பர் வேலை செய்ய வில்லை, என் வாழ்த்துகளை சங்கீதாவுக்கும் தெரிவிக்கவும்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.. மயூ, நிமலேஷ், வண்ணாத்திப்பூச்சியார், சப்ராஸ், யோகா.
யோகா அண்ணா எப்படி இருக்கீங்க ??? சங்கீதா தன்னுடைய # இலக்கத்தை மாத்திட்டா..
i will tell her
எனது பள்ளி தோழிகளை பிரிந்த தவிப்புடன் என்னை போல அந்நிய தேசத்தில் வாழ்பவர்களுக்கும் இப்பிடி ஒரு நாள் வருவது வாழ்வில் மறக்க முடியாதது ஒன்று... ஒரு கணம் நாம் செய்த எல்லா குறும்புகளையும் புரட்டி பாக்க வைக்கும்.. உங்களுக்கும் எனது பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் Dey..
Post a Comment