Tuesday, 4 August 2009

பஞ்சாக்கும் FRING மூலம் 'ட்ரிங் ட்ரிங்'


கையடக்கத்தொலைபேசியானது .. இக்காலத்தில் 'தொல்லை'பேசியாகவும் மாறி வரும் சந்தர்ப்பத்திலும்கூட... இதன் பாவனையுடன் இணைய-வலைப்பின்னல் இணையும்போது சில குறிப்பிட்ட செலவுகளையும் கட்டுப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது.

குறிப்பாக கடல் கடந்து வாழும் எமது உறவுகள் நண்பர்களுடன் உரையாட, அவர்களுடன் தினமும் தொடர்பு கொள்ள சிக்கனமான வழிமுறைகளை தேடுகிறோம். தேடிக்கண்டதை பயன்படுத்துகிறோம். இப்படியான வழிமுறைகள் மூலம் முடியுமானவரை எமது அழைப்புகளுக்கான கட்டணங்களை குறைக்கக்கூடியதாய் இருப்பதோடு, நீண்ட நேரம் உரையாடக்கூடியதாயும் உள்ளது. இவற்றுள் இப்போது அதிக பாவனையில் இருப்பவை முகப்புத்தகம், இஸ்கைப், மேசென்ஜெர்,ICQ etc... என்பனவாகும்.

இவற்றோடு தற்போது மெல்ல மெல்ல தன் ஆதிக்கத்தை பரப்பிவரும் தொழிநுட்ப முறையானது Internet Telephony Network இனை அடிப்படையாகக்கொண்ட FRING என்ற (peer-to-peer) வலைக்கட்டமைப்பு முறை மூலம் செயற்படும் Mobile VoIP ஆகும்.

Avi Shechter இதனை கண்டுபிடித்தவராக இருந்த போதும் இவரோடு இன்னும் இருவரும் இந்த கண்டுபிடிப்புக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் Boaz Zilberman மற்றும் Alex Nerst.
இந்த Fring மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் VoIP(Voice of Internet Protocol) மற்றும் PSTN(Public switched telephone network) இனூடாக செலுத்தப்பட்டு GSM தொழிநுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக செயற்படுத்தப்படுகிறது.

கைப்பேசியில் இந்த Fringஇனை தரவிறக்கம் செய்துகொள்வதன் மூலமாக Skypeஇலிருந்து Skypeஇற்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள முடியும். இதேபோல ஒலித்தொடர்பாடல் சம்பந்தப்பட்ட ஏனைய சமூகவலைப்பின்னல் தொடர்புடைய இணையத்தளங்களையும் FRING மூலம் பெற்றுப்பயன்பெறமுடியும்.
FRINGஇனை உங்கள் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய http://www.fring.com/default.asp இணைப்பினை Click செய்க.

அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றி பயன்பெறுக.

பயன்படுத்திட்டு சொல்லுவீங்க பாருங்க ஒரு பன்ச்
"அழைப்புக்கட்டணங்களை பஞ்சாய் பறக்கச்செய்யும் FRING" அப்டீன்னு.

முக்கியகுறிப்பு : iPhone, iPod Touch, Windows Mobile, Nokia 5800 Music Xpress போன்ற மாடல்களுக்கு உசிதமானது.
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

5 comments:

C.K.Mayuran said...

அருமை.அருமை. இனி உலகம் உங்கள் கையில்.தேடல் தொடரட்டும்...

mithuna said...

உங்கள் பதிப்புகள் மிகவும் பயன்பாடாகவும் புதிய தகவல்களாகவும் இருப்பது உங்கள் பக்கத்தின் சிறப்பு.....இது சிறப்பானதொன்று நன்றி dyena! நிச்சயம் நான் இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

Mayuran, Mithu...

iruvarukkum nandrigal..

innum payanulla puthiya thagavalgalodu Ungalai...santhikkiren..

jeevaamuthan said...

அ௫மையான தகவல்களை தந்துள்ளீர்கள்.....
மிக‌வும் சிற‌ப்பாக‌ உள்ள‌து...ந‌ன்றி ட‌யானா...
தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌டைப்பு......

Nimalesh said...

I think Thadal na thu Dyena thaa pola..... thx for the in4 dye....
if i nt mistaken we can use n E71, E75.... this is for your further eg.....

LinkWithin

Blog Widget by LinkWithin