Monday, 21 September 2009

தொடர்பதிவு COUNTDOWN ஆரம்பம்

தொடர்பதிவுகளுக்காக என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு வந்தியத்தேவன் அண்ணாவுக்கு முதற்கண் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அவர் கேட்டுக்கொண்டதன் பிரகாரம் அழகு, காதல், கடவுள், பணம் இந்தத் தலைப்புகளில் குளுக்கல்ஸ் முறையில் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு

கடவுள்
இந்த ஒன்றைத்தான் இன்னமும் 'அடிமுடியின்றி' மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான்......

சிலருக்கு கடவுள் அன்பாக, சிலருக்கு பணமாக, சிலருக்கு கல்வியாக, இன்னும் சிலருக்கு நம்பிக்கையாக....

இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே(பக்குவப்பட்டவர்களாம்) இதை தேடுகின்றனர்... அவரவர் உள்ளங்களை, சூழ்நிலைகளைப்பொறுத்து கடவுள் என்பவர் உயிர்பெறுகிறார்..குறிப்பாக மனிதன் மனதில்.

கடவுளைப்பற்றி கூறும் அளவுக்கு, வரைமுறைப்படுத்தும் அளவுக்கு இவ்வுலகில் யாருக்காவது 'சக்தி' இருக்குமாயின் அவரே இப்புவிதனை ஆழ்பவராக இருப்பார். அப்படி ஒருவரை 'நான்' இதுவரை கேட்டதுமில்லை காணவுமில்லை. நீங்கள்??

நானும் கூட பலமுறை கடவுள் என்பவர் யார் என்ற கேள்வியை பலமுறை எனக்குள்ளேயே கேட்டுப்பார்த்ததுண்டு... விடை.. ஹும்.. ஒருநாளும் கிடைத்ததில்லை...

ஆனால் அவ்வப்போது ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்ந்திருக்கிறேன்...
ஆம் கடவுளை நான் உணர்ந்திருக்கிறேன் ...
என் தாய் மூலமாக, தந்தை மூலமாக, நண்பர்கள் மூலமாக, ஆசிரியர்கள் மூலமாக, வழிகாட்டிகள் மூலமாக...
ஏன் சிலவேளைகளில் எதிர்ப்படும் ஊர் பெயரே தெரியாதவர்கள் மூலமாகக்கூட
இப்படி..

சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..
(உங்களுக்கும் கேட்டிருக்கா ?-இதத்தான் சிலர் சொல்வீங்க பட்சி சொல்லுதுன்னு)
அதுகூட எம்மை வழிநடத்தும் 'கடவுள்' தானோ என்று பலமுறை நான் எண்ணிக்குழம்பியதுண்டு..


பசித்து வந்த ஒருவனுக்கு புசிக்கக்கொடுத்தவன் கடவுளாகிறான்.. உயிர்போகும் வேளையில் ஒருவனுக்கு உயிரை மீட்டுத்தருபவன் கடவுளாகிறான்..
ஆனால் ஒரு விஷயம் கடவுள் என்ற பெயரை சூட்டியவன் கடவுளை உணர்ந்தானோ இல்லையோ ஆனால் சரியாகவே சூட்டியிருக்கிறான்..

'கட'+ 'உள்' = கடவுள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்குள்ளேயும் இருப்பதைத்தான்
இப்பதம் குறிக்கிறது.(இந்துக்கள் பிரயோகிக்கும் பதம்)


இஸ்லாமிய நண்பர்கள் - 'இறைவன்' என்கிறார்கள்.
உண்மைதான் 'இறை' என்பது நம்பிக்கை. 'வன்' என்பது கடினம்.
அசைக்கமுடியா நம்பிக்கை இறைவன் மீதுள்ளதே இஸ்லாமியர்களிடம் !


கிருஸ்தவ நண்பர்கள் - 'ஆண்டவர்' என்கிறார்கள் 'சகலவற்றையும் ஆழ்பவர்' அல்லது 'ஆண்டாண்டு காலமாய் தம்மை ஆண்டு கொண்டிருப்பவர்' என பொருள்படுகிறது.
ஆண்டவர் என்றும் தம்மை ஆட்சிபுரிந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் கிருஸ்தவர்கள் !


'கடவுள்' என்பது சொற்கள் போன்ற இன்ன பிறவால் வேறுபடுத்தப்பட்டாலும் உணரப்படும் தன்மையால் என்றும் நிலைத்து நிற்கின்றார் என்பது மட்டும் நித்தியம்.

"அவனின்றி அணுவும் அசையாது. அவன் விசையால் அத்தனையும் அசையும்"

ஆனால் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கேள்வி..
ஆண் பெண் இந்த இருநிலைகளையும் கடந்தவர் அல்லவா கடவுள் அப்படியென்றால் கடவுளை ஏன் பொதுவாக ஆண்பாலாய் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் ??

கேள்விக்கான விடையை யோசிப்பதோடு அடுத்த பதிவுத் தலைப்பையும் (காதல், அழகு, பணம் இந்த மூன்றில் ஒன்று) சொல்லிவிட்டுப்போங்க 'ராசா'மாரே 'ராசாத்தி'மாரே!

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

10 comments:

Arul said...

well, arumayaana muyatchi...nalla aaraaichchi...Naam thaan kadavul..enbadhaal kadavul aan paalum illai penn paalum illai....ellaam avan seyal endru kooruvadhu..ennai poruththa varai oru urimayodu kooruvadhu mattume..

Neengazh aaraindadhu oru generic topic...kadavulai patriye oru kurippitta thalaippai vaiththu ezhudhalaame? or else kadavul nambikkai, aasthiham endraal enna naasthiham endraal enna? edhu aasthiham edhu naasthiham? mooda nambikkaihazh patri ezhudhalaam or else ovvoru sambiradhaayangazhukkum pinnaal uzhzha vigngnaana kaaranangazhai aarayalaam...idhu ellaam solvadatku ezhidhu aanal aaraaindhu ezhudhuvadhu kadinam..irundhaalum ungazhaal nichchayam mudiyum endra nambikkai endrendum undu...vaazhha vazhamudan :)

வந்தியத்தேவன் said...

அழகான வரிகள், தெளிவான விளக்கங்கள் என தெளிந்த நீரோடைபோல் இருக்கின்றது உங்கள் கடவுள் சம்பந்தப்பட்ட எண்ணப்பதிவு.

//சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..//

இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind) .இது எப்படி உருவாகின்றது அல்லது நடக்கின்றது என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது யாரும் உளவியல் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

//ஆனால் மனதை நெருடிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு கேள்வி..
ஆண் பெண் இந்த இருநிலைகளையும் கடந்தவர் அல்லவா கடவுள் அப்படியென்றால் கடவுளை ஏன் பொதுவாக ஆண்பாலாய் உருவகப்படுத்தியிருக்கிறார்கள் ??//

இல்லையே இந்து மதத்தில் நிறையப் பெண் தெய்வங்கள் இருக்கின்றனவே. கிறிஸ்தவத்தில் மேரி மாதா இருக்கின்றார். அத்துடன் ஆண்கள் என்றால் அமைதியானவர்கள், அன்பானவர்கள், கருணைகொண்டவர்கள் என்ற காரணத்தால் அதிக ஆண் கடவுள்கள் இருக்கலாம்.

கடவுள் மேல் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய சுந்தரமூர்த்தி நாயனாரிற்காக அடுதது காதலைப் பற்றி எழுதலாம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

என்னா தொடர் பதிவில் கடவுள் பற்றி மட்டும் எழுதியிருக்கீங்க. மற்றைய காதல் பணம் அழகு பற்றி எல்லாம் எழுத வில்லையா?

நான் உங்களை இந்த தொடர்பதிவில் மாட்டிவிட நினைத்து பின் இரசாயணவியல் படிக்க வேண்டும் என எழுதியிருந்தீர்களாகையால் உங்களை அழைக்க வில்லை. வந்தியை அழைத்தேன், அவர் உங்களை எப்படியோ தொடர் பதிவில் மாட்டிவிட்டு விட்டார்.

Nimalesh said...

Wow... Gud try....

RJ Dyena said...

அருள் உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.. அதில் பாதியை வந்தியத்தேவன் அண்ணாவுக்கு பிரித்துக்கொடுக்கிறேன்... ஏனெனில் அவர் இத்தொடர் பதிவு அரங்கத்துக்குள் என்னை ஏற்றி விடாமல் இருந்திருந்தால் இந்தத் தலைப்பை நான் தொட்டிருக்கவே மாட்டேன் ...

ஹாய் வந்தி அண்ணா உங்கள் வருகையைத்தான் எதிர்பார்த்திருந்தேன்...

/சிலவேளைகளில் எங்களுக்குள்ளேயே ஒருகுரல் கேட்கும்.. அதை இப்படி செய்யாதே அப்படி செய் என்று..// நான் சொன்னதுக்கு

நீங்கள் கூறியது
//இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind)//.

உம்... ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் எனது எண்ணம் அந்த உள்மனத்தின் பின்னணியில் நின்று அந்தக்குரலை எழுப்புவற்கான உந்து சக்தியாக இருப்பது கடவுள் தானோ என்பது தான்...

அடுத்து
//இல்லையே இந்து மதத்தில் நிறையப் பெண் தெய்வங்கள் இருக்கின்றனவே. கிறிஸ்தவத்தில் மேரி மாதா இருக்கின்றார்.//

நான் உருவங்களை மையப்படுத்திய தெய்வங்களை சொல்லவில்லை...(அவரவர் கடவுளைப்பார்க்கும் ஏற்கும் விதத்தில் தான், ஆண் பெண் என்ற சித்தரிப்பிற்கு இடமளிக்கப்படுகிறதே ஒழிய பொதுவாக எமது அன்றாட சொற்பிரயோக வழக்கை வைத்துப்பார்க்கும்போது கடவுள் ஆணாகத்தானே கொள்ளப்படுகிறார்.

யாரும் கடவுளை எடுத்தஎடுப்பில் இறைவி என்று சொல்வதில்லையே.. இறைவன் என்று தானே சொல்கிறோம்...

இன்று காதல் பற்றித்தான் பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பேருந்தோடு சேர்ந்து எண்ணங்களையும் ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்து .. உங்கள் பின்னூட்டம் பார்த்து இன்னும் டபுள் சந்தோஷமும் உத்வேகமும் .... 'காதல்' பதிவிட....

ஆம் யோகா.... இத்தொடர் பதிவுன்னு தானே சொல்றாங்க... அதனால் நேற்று கடவுள் இன்று காதல் .. நாளை ?? தீர்மானிப்பது நீங்கள் எழுதுவது அடியேன் ....

நன்றி நிமல்

வந்தியத்தேவன் said...

// Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
நீங்கள் கூறியது
//இது கடவுள் அல்ல, உள் மனம்( Subconscious mind)//.

உம்... ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் எனது எண்ணம் அந்த உள்மனத்தின் பின்னணியில் நின்று அந்தக்குரலை எழுப்புவற்கான உந்து சக்தியாக இருப்பது கடவுள் தானோ என்பது தான்...//

இல்லை இதனைக் கட்டுப்படுத்துவது மனம் எனத்தான் பலர் சொல்கின்றார்கள். சிலவேளைகளில் ஒரு நிகழ்ச்சி அல்லது காட்சியைப் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்கனவே பார்த்த ஞாபகம் வந்திருந்தால் அது ஆழ்மனத்தின் வெளிப்பாடு என்கின்றார்கள்.

இதன் உந்துசக்தி எப்படிக் கடவுளாக இருக்கமுடியும்? கடவுள் என்ற எண்ணக்கரு கொஞ்சம் சர்ச்சைக்கும் விவாதத்திற்க்கும் உரியது ஆனால் மனம் அப்படியல்ல. மேலதிக தகவல்கள் முடிந்தால் தேடி எடுத்துத் தருகின்றேன்.

//யாரும் கடவுளை எடுத்தஎடுப்பில் இறைவி என்று சொல்வதில்லையே.. இறைவன் என்று தானே சொல்கிறோம்...//

சங்ககாலத்தில் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருக்கின்றது. பின்னர் கண்ணகி, சீதை வழிபாடுகள் கூட இருக்கின்றது. கண்ணகிக்கும் சீதைக்கும் இலங்கையில் கோயில்கள் கூட உண்டு. ஆகவே இறைவன் என்ற சொல் ஆண்பாலாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இறைவனை விட்டுவிட்டு கடவுள் என்ற சொல்லைப் பாருங்கள் அது பொதுப்பால் தான். ஆகவே கடவுள் என்பவர் பால்வேறுபாடு கடந்தவர். நாம் தான் அவரை ஆண்கடவுள் பெண்கடவுள் என வேறுபடுத்தி வைத்திருக்கின்றோம்.

//இன்று காதல் பற்றித்தான் பதிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு பேருந்தோடு சேர்ந்து எண்ணங்களையும் ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்து .. உங்கள் பின்னூட்டம் பார்த்து இன்னும் டபுள் சந்தோஷமும் உத்வேகமும் .... 'காதல்' பதிவிட....//

காதல் பற்றிய ஆளை விடடா சாமி. நான் எல்லாம் பச்சிளம் பாலகன்.


//தீர்மானிப்பது நீங்கள் எழுதுவது அடியேன் .... //

சரி சரி நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள் என்பது புரிகின்றது.

Arul said...

Paaraattai pahirndhu kozhzhungazh..piriththuvidaadheerhazh

கரவைக்குரல் said...

இந்த தொடரோட்டம் போலவே நீங்க இன்னுமொரு தொடரோட்டத்துக்காக அழைக்கப்படுகிறீர்கள்
வாருங்கள்
http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html

காரூரன் said...

கடவுள் தொடர் வாசித்து உங்கள் வலைப் பக்கம் வந்தேன். வித்தியாசமான பார்வை பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்!

கொல்லப்பட வேண்டிய புத்தியீவிகள் said...

oh nice