கடந்த ஆண்டில் என் கவனத்துக்கு புலப்பட்டும்கூட, மேற்கொண்டு எதிர்ப்பதிவிட முடியாமல் போனவற்றுக்கான பதிவாக இப்பதிவு....
1 )
பதிவுக்கு சொந்தக்காரர் சகோதரன் சதீசன் சத்தியமூர்த்திக்கு முதற்கண் என்னுடைய நன்றிகள்...அவர் என் வலைப்பதிவுக்காக அன்போடு தந்த 'SCRUMPTIOUS BLOG AWARD 'காக.

வெளிப்படையாக சொல்லப்போனால் நான் அடிக்கடி பதிவுகள் இடுவது கிடையாது.. எழுத 1000 - 1000 ஆசைகளும், யோசனைகளும் இருந்தாலும் பதிவிடுவதற்கான நேரம் அவ்வளவாக கிடைப்பதில்லை...((
நேரம் கிடைக்கும்போது நண்பர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும் தொடுப்புகளை வைத்து அவர்களின் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிடுவதோடு சரி... அதுவும் இப்போது குறைந்து வருகிறது....(((

சதீஷன் தம்பி நல்ல ஒரு படைப்பாளி....எந்த நேரமும் ஒருவித ஆர்வத்துடனேயே திரிந்து கொண்டிருப்பவர்....வெற்றி பண்பலையில் அவருடைய நிகழ்ச்சிகளை செவிமடுத்திருக்கிறேனேயொழிய தனிப்பட்ட முறையில் எனக்கு அவரைத் தெரியாது
அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தப்பதிவுலகம்தான்...
முதன் முதலாக நான் வாசித்த அவருடைய பதிவு கந்தசாமி - திரைப்படம் பற்றியது..
அந்தப்படம் வந்த ஆரம்பத்தில்... தாறுமாறாக விமர்சனங்கள் விதைக்கப்பட்டபோது.... இவருடைய விமர்சிக்கும் சிந்தனை சற்று வித்தியாசமாகவே இருந்தது.. இதுவே என்னை இவருடைய பதிவுகளை வாசிக்கத்தூண்டியது.. அத்தோடு அவருடைய பதிவுப்பக்க தலைப்புகள் சரவெடியாகவே இருக்கும்.. அவை வாசிக்கத்தூண்டும்..
இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து 'SCRUMPTIOUS BLOG AWARD' பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியே...
2) http://enularalkal.blogspot.com/2009/12/2009-1.html அடிக்கடி என் வலைப்பதிவை எட்டிப்பார்த்து.. குறைநிறைகளை சுட்டிக்காட்டி என்னை ஊக்குவிக்கும் அன்புப்பதிவர் 'வந்தி' அண்ணா, தான் 2009 இல் ரசித்த பதிவுகள் பற்றிய ஒரு தொகுப்பைத் தந்திருந்தார் ..அதில் என்னுடைய ''அவதார்'' திரைப்படம் பற்றிய பதிவு அவரைக்கவர்ந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.. நன்றி !

பலரின் பதிவுகளை தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் சுடச்சுட பதிவுகள் தந்து அசத்துபவரும் கூட... தன் வேலைகளுக்கு மத்தியில் எப்படி பதிவுகள் பலவற்றை வாசிக்கிறார்- 'பின்'னூட்டமிடுகிறார் என்று... நான் அவரைப்பார்த்து வியந்ததுண்டு... தொடரட்டும் அவர் சேவை....
3)
http://karavaikkural.blogspot.com/2009/09/blog-post_19.html எனது பள்ளி-வாழ்க்கை குறும்புத்தனங்கள், நண்பர்கள் பற்றிய பதிவை வேண்டி நின்ற கரவைக்குரல் - பாவம் என் பதிவுக்காக காத்திருந்து காத்திருந்தே அவர் குரல் கரைந்திருக்கும்.. இன்றுவரை அவருடைய மூச்சுப்பேச்சையே காணவில்லை... தாங்கள் எங்கே உள்ளீர்கள் ?? கொஞ்சம் வந்து விட்டுப்போங்கோஅடுத்து அரங்கேறப்போவது உங்கள் பதிவுதானுங்கோ..!
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf
7 comments:
நேரம் கிடைக்குறப்பல்லாம் எழுதுங்க...விட்டுறாதீங்க
தொடருங்கள் டயானா.
அவ்வவ்வ்வ்வ் நாங்க இருக்கிறம், ஆனால் மூச்சுவிட நேரமில்லை.
ஹா ஹா
உங்களின் என் மீதான பார்வைக்கு நன்றிகள் அக்கா. தொடர்ந்து எழுதுங்கள். பின் தொடர நாங்கள் காத்திருக்கின்றோம். மாமா கடல் கடந்து போனாலும் நம்மில் வைத்த பாசம் மாறவில்லை. கரவைக்குரல் மீண்டும் சிங்கக்குரளாக ஒலிக்கும் என நம்புகின்றேன்.
ookkuvikkum nanbargalukku mikka nandri....
////SShathiesh said.......... கரவைக்குரல் மீண்டும் சிங்கக்குரளாக ஒலிக்கும் என நம்புகின்றேன்./////
சிங்கக்குரல்(ள்?) அது இது என்று ஏன் ஏதும் மாட்டிவிட திட்டமா சதீஷ்?
ஹிஹிஹிஹிஹி...........
நம்பிக்கைக்கு ஏற்றபடியே ஒலிக்கும் ஒலிக்கும்
என்னைப் பற்றிய குறிப்புக்கு நன்றி. ஆனால் தற்போது என்னால் முன்புபோல் பின்னூட்டமோ பதிவோ எழுதமுடிவதில்லை. சிலவற்றை மட்டும் வாசிப்பேன் காரணம் இயந்திர கதி வாழ்க்கைக்குள் அகப்பட்டுக்கொண்டுவிட்டேன்.
பிந்திய பின்னூட்டத்திற்க்கு வருத்துகின்றேன். எம் மூவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது முடிந்தால் கண்டிபிடிக்கவும்.
Post a Comment