Sunday, 21 April 2013

பூப்பூக்கும் வசந்த காலம்

உங்கள் சினேகிதி டயானா இப்போது பூரிப்புடன் வளர்ப்புத் தாய் மண்ணில் !

அதென்ன வளர்ப்புத் தாய் மண் என்று கேட்டீங்கன்னா ....

நூரளை என்ற அழகு தமிழ் பெயர் கொண்ட நுவரேலியாவில் 

நூரளை என்ற பெயர் வரக் காரணம் - 
இதிகாசம் சொல்லும் கதை - (உதவி ராமாயணம்) - ஹனுமான் ராவணனை சந்திக்க வந்தபோது, அவமதிக்கப்பட்டு அவர் வாலில் தீ வைக்கப்பட்டதாம்.... அப்போது அந்த வாலில் பற்றிய தீயை ஊர் முழுவதும் தாவித்தாவியே பற்றவைத்துவிட்டு சென்ற ஹனுமனை ராமர் விசாரிக்க, நடந்தது அனைத்தும் சொல்லி இன்னும் தீ நூரளை என்று சொன்னாராம் ஹனுமான்... அந்த வார்த்தையே இந்த ஊரின் பெயராகிப்போனது என்கின்றனர்..

இங்கு நுவரேலியாவை பொறுத்தவரை  வசந்த காலம் என்றாலே மிக மிக குதூகலமானது. படிக்கும் காலத்தில் இந்த ஒரு மாதத்திற்காகவே 11 மாதங்கள் தவம் கிடப்பம்.

இந்த காலத்தில் இங்கு நடக்கும் மலர் கண்காட்சி அற்புதமானது.  தங்கு விடுதிகள், ஹோட்டல்கள் , பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என இந்த மலர்கண்காட்சியில் பங்கேற்று தமது கலைகளை புலப்படுத்தி பார்ப்போரை பரவசப்படுத்துவர்.  

விக்டோரியா சிறுவர்  பூங்காவில் இடம்பெற்ற மலர் கண்காட்சியை  சுமார் 12 வருடங்களின் பின்னர் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 

என் கண்களுக்கு விருந்து படைத்த கண் காட்சியை நீங்களும் இப்போது கீழே கண்டு களிக்கலாம்.

பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்பும் இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த கண்காட்சியில் BEST GARDEN, BEST LAWN, BEST FENCE & HEDGE, CUT FLOWERS, POT PLANTS மற்றும் FLORAL ARRANGEMENTS  போன்ற பிரிவுகளில் பெருமளவு முதன்மை இடங்களை(70) எனது தந்தையின்(திரு. சதாசக்திநாதன் - HORTICULTURE CONSULTANT & GARDEN MANAGER) ஆலோசனையின் கீழ் மேற்கொண்ட GRAND HOTEL பெற்றுக்கொண்டது. 






- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

No comments: