Sunday, 2 June 2013

யாரோவாக இருந்த இப்படிக்கு இவள்!

பல வருடங்களின் பின்  என்னிடமிருந்து ஓர்  கவிதை...யதார்த்தின் பிடிப்புகளுடன்............ 


நேற்று (31.05.13)அழுத வானம் ...குமுறிய மேகம்... கொந்தளித்த காற்று.... விரக்தியுடன் விரைந்த வெள்ளம்.... எல்லாம் எதற்காக ?


யாரோவாக இருந்த என்னை ''இது யார்'' எனத் திரும்பிப் பார்க்க வைத்த சக்தி எதுவெனத் தெரியுமா ?

கடிதென விரைந்த நாட்கள்... நின்று ஒரு கணம் என்னைத் திரும்பிப் பார்க்கின்றன .... ஒருவேளை எள்ளி நகையாடவோ ?...

சில தீர்மானங்களை எடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கும்போது அதன் காலை அமுக்கி விடத்தான் வேண்டும் போல ...


குருப் பெயர்ச்சி பலரையும் பெயர்த்து விட்டது..... என் கவலையெல்லாம் அந்த பலரை பற்றி அல்ல.... என்னைப் பற்றியது !
கனவுகளோடு பார்த்த கலையகத்தை இனி கனவில் மட்டும் தான் பார்க்க முடியும் !
                                                                                     - ஒரு கலையுள்ளத்தின் குமுறல்

நான் தனிப்பிள்ளை .... ஆனாலும் இணை பிரியாதிருந்த என் சகோதரங்களை இனி பிரிந்தாக வேண்டிய நிலை.. இசை தந்த சொந்தங்களை விட்டும் அசைந்தாக வேண்டிய நிலை !

இது அவலமா ? சாபமா ? இல்லை நான் வாங்கி வந்த வரமா? 

என்ன நடந்தது என்ன நடந்தது என்று ஓராயிரம் கேள்விகள் வரும் .... எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் கட்டாயம் எனக்கு உண்டு .... உங்களுக்கு கேட்கும் உரிமை உள்ளவரைக்கும்..
காதல் விட்டுப்போனாலும் தாங்கலாம்.... ஆனால் செல்லும் பாதை விட்டுப் போனால் ?
தவறிப் போச்சு என்று சும்மா சொல்லலாம் .... ஆனால் உண்மை அதுவல்ல எனும்போது...

மார்ச் 2005 இல் முதல் நுழைவை நினைத்த படி மே 2013 முற்றுப்புள்ளி வைத்தாயிற்று .... கட்டாயத்தின் பெயரில்...

இது காலத்தின் கட்டாயத்துடன் இணைந்த என் குழந்தைகளின் உரிமை கோரல் !

எனக்குள் இனி சக்தி என் பெயருடனும்.... என்றும் போல் உயிருடனும் வாழும் !

அதை தடுக்கும் சக்தி யாருக்கும் இனி இங்கே கிடையாது - 
'ஜெய் ஹோ' சக்தி..........

இப்போது  சொல்லுங்கள் 
நேற்று (31.05.13)அழுத வானம் ...குமுறிய மேகம்... கொந்தளித்த காற்று.... விரக்தியுடன் விரைந்த வெள்ளம்.... எல்லாம் எதற்காக ?


        வணக்கம் 
- இப்படிக்கு உங்கள் சினேகிதி !



- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

No comments: