Saturday, 23 March 2013

KITCHEN SAFETY - SHOOTED FROM EMAIL

  This is a shocking episode that happened on 13th May 2011 in Pune. This may be a good, useful lesson in safety for all of us.   

A housewife died due to burns sustained in the kitchen. Her husband too was hospitalized for injuries due to burns while trying to rescue his wife.  


 How it happened:-The gas stove was on and cooking under process. The lady observed some cockroaches near the sink and grabbed a can of insect repellent and sprayed it near the gas stove, which was on. There was an explosion and in no time the poor woman was covered in flames, sustaining 65% burns. Her husband rushed in, tried to douse the flames and his clothes too caught fire. The husband is still in hospital, in the burns ward, still unaware that his wife was declared dead on arrival. 


Let us understand:-  


All insect repellents such as "Hit", "Mortein" etc. have highly volatile and inflammable solvents.  The atomized nano spray particles spread extremely rapidly and one spark is enough to ignite this explosive mixture with oxygen present in air.


 Did the poor lady realize the hazard involved? Apparently not!  


Please educate your family about this and spread the word around.... who knows you may save more than a life... 


அதென்ன SHOOTED FROM EMAIL ?  என்று யோசிப்பவர்களுக்கு 


மின்னஞ்சலிலிருந்து சுட்டது என பொருள் கொள்க 




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 13 March 2013

பாழாய்ப்போன பரதேசி பாலா !

இப்படிதான் பலரும் இயக்குனர் பாலாவை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.... காரணம் உங்களுக்கே தெரியும் ...

வெளியாகியுள்ள பரதேசி படத்தின் REALITY  TEASER.




முதல் தடவை பார்த்தபோது எனக்கும் கூட அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் தான் இருந்தது.. நடிகர்களை அடித்து சித்திரவதை செய்யும் ஒரு மிருகத்தனமான இயக்குனரா பாலா ? என்றே தோன்றியது... இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த TEASER ஐ பார்த்த போது... இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட    ஒன்றாகவே தோன்றுகிறது.. காரணம்  கொஞ்சம் கூர்ந்து  கவனித்தால்  குறிப்பிட்ட காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்பதை யதார்த்தமாக  இயக்குனர் நடித்துக் காட்டியதையே இங்கு தொகுப்பாக நாம் பார்க்கிறோம் என்பது எனது அபிப்பிராயம்... உதாரணத்துக்கு 0.29min காட்சியைப் பாருங்கள் பாலா கைதூக்கி அறைவது போல் செய்வதை நடிகையும் செய்கிறார்.

இயக்குனர் பாலா ஏசுவதையும் அடிக்கும் காட்சிகளையும் தொகுக்கும்போது  இது ஒரு யதார்த்தமான teaser ஆக நம் கண்களுக்கு தெரிகிறது...உண்மை இதுவோ என்று நம்பவும் தோன்றுகிறது. (Hats off to the Editor அப்படி நம்ப வைத்தமைக்கு )

முன்பு அங்காடித்தெரு திரைப்படம் வெளிவந்த போதும் கூட இயக்குனர் வசந்த பாலன் கதாநாயகனை போட்டு அடி அடியென அடிக்கும் காட்சிகள் கூட வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இது போன்றவை திரைப்படத்துக்கான எதிர்மறை விளம்பரம்...

 திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் !

( பின்குறிப்பு -நான் இயக்குனர் பாலாவின்  ரசிகை அல்ல) 

இந்தப்பதிவுக்கு உங்கள் ஆதரவும் மிக அவசியம் ..மறக்காம COMMENT பண்ணுங்க 
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 11 March 2013

வீட்டுக்குள் இரண்டு வெள்ளை வில்லன்கள்



இப்போதெல்லாம் திரும்பிய திசையில் ஏதாவது ஒரு மரணச் செய்தி தான் நம் ஒவ்வொருவர் செவிகளையும் எட்டிய வண்ணம் உள்ளது... அதில் பல மாரடைப்புச் சாவு, நீரிழிவுச்  சாவு, சிறுநீரக அல்லது ஈரல் சம்பந்தப்பட்ட நோய்ச் சாவாக இருப்பது பயமுறுத்தும் ஓர் விடயம். ஏனென்றால் இவை பாரபட்சம் இல்லாமல் எந்த வயதில் உள்ளவரையும் காவு கொண்ட வண்ணமே உள்ளன.

உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம் நோய்களின் பிரதான காரணிகளாக உள்ளன.

இன்று இந்தப்பதிவில் நான் எதைச்  சுட்டிக்காட்டி உங்கள் மனதில் பதிவிக்க விரும்புகிறேன் என்றால்............

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இரண்டு வெள்ளை விஷங்களைப்பற்றி...

முதல்ல அவை என்னவா இருக்கும் எண்டு நீங்க யோசிங்க ..பிறகு நான் சொல்றேன்...ஓகே....






யோசிச்சு முடிச்சு ஒரு முடிவுக்கு வந்தாச்சா

ம்ம் .. பலே.... சரியா யோசிச்சிருக்கீங்க ...

அந்த இரண்டு வெள்ளை விஷ வில்லன்கள் 

1. சீனி
2. உப்பு


சீனி தரும் விளைவுகள்

 வில்லியம் டப்டி 1975ல் எழுதிய சுகர் ப்ளுஸ் (Sugar Blues) என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வருமாறு:-



தினந்தோறும் சீனி உட்கொள்ளும்பொழுது பிரச்னை தீவிரமடைகிறது. உடலில் அமிலத்தன்மை தொடர்ச்சியாக அதிகரிக்கும்பொழுது அதனைச் சரிப்படுத்துவதற்காக இன்னும் நிறைய தாதுப்பொருட்களும் வைட்டமின்களும் ஈர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நேரத்தில் பற்களிலிருந்தும் எலும்பிலிருந்தும் நிறைய கால்சியம் அபகரிக்கப்படுகிறது. மொத்தத்தில் உடல் பலவீனமடைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆரம்பத்தில் சீனி குளுக்கோஸ் (கிளைக்கோஜன்) வடிவத்தில் ஈரலில் சேமித்து வைக்கப்படுகிறது. ஈரலின் சேமிப்புத் தன்மைக்கு ஒரு வரையறை இருப்பதால், தினந்தோறும் சீனி உட்கொள்ளும் பட்சத்தில் ஈரல் பலூன் மாதிரி விரிகிறது. ஈரலில் இடமில்லாத பட்சத்தில், கூடுதல் கிளைக்கோஜன் கொழுப்பு அமிலங்களாக இரத்தத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. இவை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அதிகம் இயங்காத பாகத்தில் (வயிறு, பிட்டம், மார்பகம், தொடை) சேமித்து வைக்கப்படுகின்றன.
இந்தப் பாகங்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துபோகும்பொழுது, அவை இருதயம், சிறுநீரகம் போன்றவற்றிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் இயக்கம் குறைந்துவிடுகிறது. அதீத இரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
இதனால் இணைப்பரிவு நரம்பு மண்டலமும் (parasympathetic nervous system) அதன் கண்காணிப்பில் இருக்கும் சிறுமூளை போன்ற உறுப்புக்கள் சுறுசுறுப்பை இழக்கின்றன அல்லது செயலிழக்கின்றன. வெள்ளை செல்கள் பெருகுகின்றன. திசு உருவாக்கம் தாமதமாகிறது.
நம்முடைய எதிர்ப்புச் சக்தி குறைந்துபோய் சூடு, குளிர்ச்சி, கொசுக்கடி, கிருமிகள் பாதிப்பு என்று எதுவாக இருந்தாலும் நம்மை விரைவில் பாதிக்கிறது.
அளவுக்கு அதிகமான சீனி, மூளை இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கும். பெரும்பாலான காய்கறிகளில் உள்ள குளுட்டமிக் அமிலம்தான் சீரான மூளை இயக்கத்திற்குத் துணை புரிகிறது. அவற்றில் உள்ள 'பி' வைட்டமின்கள்தான் இந்த வேலையைச் செய்கின்றன.
சிம்பையோட்டிக் பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்ட 'பி' வைட்டமின்கள் நம்முடைய குடலில் வாழ்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளும் பொழுது இந்த பாக்டீரியாக்கள் வாடி இறந்துபோகின்றன. நம் உடலில் உள்ள 'பி' வைட்டமின்களின் அளவு குறைகிறது.
அளவுக்கு அதிகமான சீனி தூக்கத்தை ஏற்படுத்துகிறது. கணிதத் திறனும் நினைவாற்றலும் குறைய ஆரம்பிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சீனி வாயிலோ அல்லது வயிற்றிலோ ஜீரணிக்கப்படுவதில்லை. மாறாக நேரடியாக கீழ் குடலுக்குச் சென்று நம் இரத்தத்தில் கலக்கிறது. இதனால்தான் சீனி உட்கொண்ட பிறகு "திடீர் சக்தி" ஏற்படுகிறது.
இரத்த நாளங்களில் இப்படித் திடுமென சுக்ரோஸ் சேருவது நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கிறது. சீனி வயிற்றில் நிகழும் இயல்பான இயக்கத்தில் ஊறு விளைவிக்கும் ஆற்றல் கொண்டது. ரொட்டி, இறைச்சி, கோக் பானங்கள் போன்ற வேறு உணவுகளோடு சீனியைச் சேர்த்து உண்ணும் பொழுது வயிறு சீனியைச் சிறிது நேரம் தக்க வைத்துக்கொள்கிறது. 
இறைச்சி ஜீரணம் ஆகும் வரைக்கும் ரொட்டி மற்றும் கோக் பானத்தில் உள்ள சீனி அங்கு தங்கிவிடுகிறது. இறைச்சியில் உள்ள புரதம் செரிக்கும் வரை சீனி அங்கேயே புளித்துப்போய்விடுகிறது. புரதத்தைச் சீனியோடு சேர்க்கும்பொழுது அவை நொதித்துப்போய் விஷமாகின்றன.

உப்பு  தரும் விளைவுகள் 

உணவுடன் அதிகமாக உப்பை சேர்த்துக்கொள்ளுதல் இருதநோய்க்கு பிரதான காரணியாக அமைகின்றது. அத்துடன் மக்கள் பாண், சோஸ், கேக், பிஸ்கட் உடனடியாகத் தயாரிக்கக்கூடிய உணவு வகைகளை பெரும்பாலும் உண்பதும் இருதநோய் மற்றும் பாரிசவாதத்துக்கு இன்னு மொரு காரணமாகும். 
சீன உணவில் அதிகமாக உப்பு கலக்கப்படுவதனால் அது இரத்த ஓட்டத்தில் கலந்து நாடி நாளங்களை அடைப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள். 
எனவே மக்கள் பாரிசவாதத்தை தவிர்க்க வேண்டுமாயின் கூடியவரை உப்பை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இருதயநோய் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். 
ஏதோவொரு உணவில் உப்புக் குறைவாக இருந்தால்கூட அதன் சுவை குறைந்துவிடும். இது ஒரு யதார்த்த பூர்வமான வாதம் தான். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப உப்பை சாதாரண மக்கள் கூட மிகக் குறை வாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இதுவே ஆரோக்கியத்துக்கு ஒரே வழி.



இனியாவது  உப்பையும் சீனியையும் ஓவரா சாப்பிட்டவங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா....

நன்றி -panippulam .com


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 1 March 2013

2013 இல் முதல் சந்திப்பு - GETTYIMAGES விளம்பரத்துடன்

வணக்கம் என்ன எல்லோரும் நலமா ? 2012 இல் எந்த ஒரு பதிவிற்கும் இடமளிக்காத என்னுடைய வலைத்தளம் இன்று இந்த ஆண்டில் மீண்டும் கால் பதிக்கிறது.
 எங்கே உங்கள் கரகோஷம் ? ஆ அப்படித்தான்.... நன்றி நன்றி நன்றி 





சிலர் யோசித்திருக்கலாம் இந்த டயானா என்ன ரொம்ப பிஸி ஆகிவிட்டாளோ  என்று ? என்ன செய்ய ஒரு தாயான பின்னர் தானே தெரிகிறது வாழ்க்கை எவ்வளவு பரபரப்பானது என்று. 

புதிய அனுபவம் ஆனால் புத்துணர்வூட்டும் அனுபவம் இந்தத் தாய்மை . (அனுபவித்தவர்கள் என்னுடன் சேர்ந்து ஓம் என்பீங்க)  


அழகான ஓர் கவிதை இல்லையா ?

சரி இருக்கட்டும் ..

நீண்ட நாட்களின் பின் நான் பார்த்து வியந்த ஒரு காணொளி விளம்பரத்தை உங்களோடு பகிரும் நோக்கில் நான் இங்கே இப்போது...

நீங்கள் பார்க்கப்போவது gettyimages  இன் விளம்பரம்.. சொன்னால் நம்புங்க இந்த புகைப்பட  காணொளிக்குள் 873 புகைப்படங்கள் உள்ளடக்கம்.. சொல்லி நம்பாதவங்க இப்போ இந்த விளம்பரக் காணொளியை பார்த்து நம்புங்க..

என்றாலும்  ஒரு சின்ன தவறு இந்த காணொளிக்குள் உண்டு... அது என்ன என்பதை கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்க்கலாம்...


உங்கள் பின்னூட்டங்கள் இந்த வலைப்பூவின் ஞாபகச்சின்னங்கள்... எனவே மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லுங்கள்...


மீண்டும் சந்திப்போம்....வரட்டா !




- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Saturday, 19 November 2011

பிரம்மன் படைத்த ''பிரப்பம் பழம்'' !

என்னடா கேள்வியே படாத பழமாக இருக்கு ?? என்பவர்களுக்காக மட்டும் இந்தப்பதிவு.

நானும் முதலில் கேட்டபோது என்னது ????????? என்ன பழம்? என்று ஒன்றுக்கும் இரண்டு தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

ஆம்! பிரப்பம் பழம் தான்


நடந்தது இது தான் ? வழமை போல் முகாமைத்துவ கூட்டம் ஒன்றுக்காக தலைமைக் காரியாலயத்துக்கு வேனில் போய்க்கொண்டிருக்கையில்.......... பெருங்குடல் சிறுகுடலை விழுங்குமளவிற்கு பெரும் பசி.
சாப்பிட யாரிடமாவது ஏதாவது இருக்குமா என்ற கேள்விக்கு எங்கள் வானொலி ஒலிப்பொறியியலாளர் -நண்பன் பிரஜீவ் நீட்டிய பழம் தான் இது. (மட்டக்களப்பில் இப்பழம் கிடைக்கிறதாம்)




பெயர் மட்டும் அல்ல பார்க்கவும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கவே ...... அதை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.... பின்னர் பிரஜீவ் அந்த தோலை நீக்கிப்போட்டு உள்ள இருக்கும் பழத்தை மட்டும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு... சாப்பிட
விருப்பமில்லாட்டி திருப்பித் தாங்க ஏனன்டா ... இது சரியான விலை என்ற அவருடைய பத்திரப்படுத்தல் வார்த்தையை கேட்டு உள்ளுக்குள் சிரித்தபடியே ... ஒரு சிறு கடி கடித்துப் பார்த்தேன் .......

முகம் முதலில் அஷ்ட கோணலானது......... அந்தளவுக்கு புளிப்போ புளிப்பு.......... என்றாலும் சமாளித்தபடியே சாப்பிடப் பழகிக்கொண்டேன்...
''கல்சியம்பலா'' சாப்பிட்ட அனுபவத்தை இதற்காக பயன்படுத்திக்கொண்டேன்.

பழத்தை சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி ...
இந்தப்பழம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கக்கூடும்? சரி பழம் பற்றி தேடிவிட்டு ஒரு பதிவிடலாம் என்று பார்த்தால்...கூகுளே கைகொடுக்கவில்லை ...கிடைத்தது கீழ் கண்டது மட்டுமே !


பிரம்பு

இது நீர்நிலைகளின் கரையில் பிணக்கத்தையுடைய தூறாக வளர்ந்திருக்கும். செடி போன்றிருத்தலின், “அரிற்பவர்ப் பிரம்பு” எனப்படும். இதன் தூற்றில் நீர்நாய் பதுங்கி இருக்கும். பிரப்பம்பழம் கோடுகளை உடையது; அதனைக் கெண்டை உண்ணும். அப்பழத்தின் புறத்தை நீர்நாயின் புறத்திற்கு உவமை கூறுவர்.

இப்பழம் பற்றி அறிந்தவர்கள் மேலதிக விடையங்களை இப்பதிவின் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் ........
- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 17 June 2011

ஃபுகுஷிமா முயலுக்கு வைத்த ஆப்பு ! (Fukushima Mutant Rabbit)

இந்த உலகில் ஆக்கங்கள் ஒரு பக்கம் தன் முகம் காட்டிகொண்டிருக்க
அழிவுகள் தன் மறுமுகத்தை காட்டிக்கொண்டிருக்கின்றன.
அண்மையில் அதாவது கடந்த மார்ச் மாதமளவில் ஜப்பானில் ஏற்பட்ட FUKUSHIMA அணு மின்நிலையத்தின் மூன்றாவது அணு உலை வெடித்ததன் காரணமாக வெளியான அணுக்கதிர் வீச்சு தற்போது இருமடங்கான நிலையில் செவிகள் அற்ற நிலையில் ஒரு முயல்குட்டி பிறந்துள்ளது, அதுவும் FUKUSHIMA உலையிலிருந்து 18 மைல் தூரத்தில்.

அந்த முயல் குட்டியை நீங்களும் பாருங்க

அணுக்கதிர் வீச்சு முயலின் மரபணுவில் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளமையே (மரபணு விகாரம்) இதற்கு காரணம் என விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறது.

மரபணு விகாரம் காலா காலமாக இடம் பெற்று வருவது ஒன்றும் புதிதல்ல ஆனால் இப்போ உலகம் போற போக்கை பார்த்தல், அதில் இடம் பெரும் எதிர்பாராத நிகழ்வுகளினால் மாதக் கணக்கிலேயே அதன் விளைவுகளை நாம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது.


ஆனா இதை என்னவென்று சொல்வது ?

Fukushima mutant rabbit: "An earless bunny has been discovered just outside the radiation zone of the Fukushima nuclear plant in Japan."


நாயகன் பாணியில் ஒரு கேள்வி /பதில்

இது நல்லதுக்கா கேட்டதுக்கா...? தெரியலேயேப்பா..........


(POST A COMMENT ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன)

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Thursday, 16 June 2011

ரியல் எந்திரன் (Real Enthiran)


விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி எந்தளவுதூரம் இந்த உலகை வளைத்துப் போட்டிருக்கிறது என்பதை கீழுள்ள காணொளியை கண்ணுற்றால் புரியும் .

மனிதவர்க்கம் புகுத்தநினைக்கும் மனிதனைபோன்ற ரோபோ உலகின் அதிநவீன கண்டுபிடிப்பும் உருவாக்கமுமாக 3 Geminoids/Anroids அவற்றின் உரிமையாளர்களோடு Roboticist Prof.Hiroshi Ishiguro(Osaka University), அவரின் பெண் உதவியாளர், Prof. Henrik Scharfe(AALBORG University) ருப்பதை படத்தில் காணலாம்

இவற்றைக் கண்ணுற்றபோது இயக்குனர் சங்கர் எந்தளவுதூரம் எதிர்காலக்கணிப்பை நிகழ்கால ஆராய்ச்சிகளில்
இருந்து மதித்து தன்னுடைய எந்திரன் படத்தின் மூலமாக தந்திருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்கையில் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

மொத்ததில இந்தப்பதிவிலிருந்து நான் என்ன சொல்ல வாறன் எண்டா

ஒரு காலம் வரும்
ரோபோக்கள் இவ்வுலகை ஆட்சி புரியும்
ஆனால் அதைப்பார்க்க நானோ நீங்களோ இருக்க மாட்டோம்...
Ha ha ha..
இது எப்படி இருக்கு?

அட இவர் யார் எண்டு பார்க்கிறீங்களா... இவர்தான் நம்மட ShakthiFM தந்திரன்
DOT.............................................................................................


(உங்கள் பின்னூட்டங்களை கீழேயுள்ள Post a Comment பொத்தானை அமுக்கி பதிவுசெய்யுங்கள் )

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Wednesday, 2 March 2011

அதிசய ராத்திரி - 2010 இன் சிவராத்திரி

சிறு வயது முதல் நான் மிகவும் விரும்பி அனுஷ்டித்து வரும் இந்த சிவராத்திரி தினம் இம்முறையும்.. கடிதென விரைந்திடும் காலச்சக்கரத்தில்..

ஆனால் இம்முறை விரதம் பிடிக்க முடியாத நிலை என்றாலும் விடிய விடிய விழித்திருப்பதில் எந்த மாற்றமும் இல்லை (புதிய உறவான எனது குழந்தையோடு...)
புதிய அனுபவம் தான்.....

இன்று இந்தப் பதிவின் நோக்கம் கீழே உள்ள காணொளியை கண்ணுருவோருக்கு புரியும்.

'கடந்த வருடம் நுவரெலியா காயத்திரி கோயில் வளாகத்தில்
கமெரா கைப்பேசியில் சுட்ட கண்கொள்ளா அதிசயக்காணொளி'

முகில்கள் சிவனின் கண்களை ( அப்படித்தான் இதை கண்ணுற்றோர் சொல்கிறார்கள் ) உங்களுக்கு புலப்படுத்துகிறதா ?

இன்று இரவுதோறும் பக்திப் பரவசத்தோடு சொல்வோம் 'ஓம் நமசிவாய'

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Monday, 14 February 2011

உலககெல்லாம் ஒரு சொல்: ஒரு சொல்லில் உலகம் - காதல்


காதல் உள்ளங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்


- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

Friday, 28 January 2011

குடிப்போமா... தேத்தண்ணி ?

எப்படி போகுது வாழ்க்கை? உங்களைப்பார்த்து தான் கேட்கிறேன்...

ஆ... என்ன ... என்னுடைய வருகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தீங்களா ?

பரவாயில்லையே ... உங்களைபோன்ற பதிவுலகவாசிகள் என்னை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க.... உண்மைய சொல்லவேண்டுமென்றால்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு தொடர் ஒய்வு.. வீட்டில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளையும் பார்த்துக்கொண்டு
பதிவுலகையும் ஆசையுடன் எட்டிப்பார்க்க முடிகிறது....

கண்களும் மனதும் எட்டிப்பார்த்தாலும்
விரல்கள் ஒரு பதிவை இட்டுச்செல்லவே ஆசைப்படுகிறது.... அவற்றின்
ஆசையை நான் ஏன் கெடுப்பானேன்....?

எந்த ஒரு விஷயத்தை நாங்கள் வாழ்க்கையில் சந்தித்தாலும் அதில் முதல் முதல் நாங்கள் எதிர்கொள்ளும் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது..
பள்ளியின் முதல் நாள், முதல் காதல், முதல் முத்தம், ... இந்த வரிசையில் முதல்
வேலை கூட......


சக்தி பண்பலைக்குள் வரும்முன்னர் ஒரு தேயிலை நிறுவனம்(DILMAH -டில்மா) எனக்கு பல வேலைகளை கற்றுத்தந்தது...வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்விற்காக....
அதுவும் உயர்தரத்தை முடித்துக்கொண்டு, பள்ளிவாழ்கையை நிறைவு செய்து கொண்டு, உலகை எதிர்கொள்ளும் புதிய உத்திகளை கற்றுக்கொள்ள எனக்கு உதவிய நிறுவனம் அது.. காரணம் அதனுடைய கட்டுக்கோப்பான ஒருங்கியம்.
ஒரு சாதாரண அடித்தள வேலையைக்கூட எவ்வாறு பூரணமாக செய்ய வேண்டும்... அதையே இன்னொரு மாதிரி சொல்வதென்றால் ''பக்காவா''
செய்வதற்கான ஆற்றலை கற்றுத்தந்த நிறுவனம்.

நான் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்றபடியால் ஆய்வுகூடத்தோடு சம்பந்தமான வேலையில் சேர வேண்டுமென்ற ஆவலில் தந்தையின் வழிநடத்தலுடன் இந்த
டில்மா(DILMAH) நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டுப்
பிரிவில் சேர்ந்தேன்.

இதில் எனக்கு முதல் வழங்கப்பட்ட பணி பொதிசெய்வதற்காக நிறுவனத்துக்கு
கொண்டுவரப்படும் தேயிலை மாதிரிகளை சுவைத்து தரப்படுத்துவது. 'Tea Taster' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்..
மிகவும் சுவாரசியமான வேலை ஆனால் ஒரு நாளைக்கு 100 மாதிரிகளை சுவைக்கும் போது வெறுத்தே போய்விடும்.

ஆனால் எனக்குள் ஒரு சந்தோசம் .. இந்த Tea Tasting என்பது எல்லாராலும் செய்ய முடியாத காரியம்.. காரணம் ஒரு தேநீர் மாதிரியை தொண்டையின் ஆரம்பப்பகுதிவரை இழுத்து நாவினால் அதன் தன்மையையும் தரத்தையும் உணர்ந்து குறிப்பில் எழுதி... வழங்கப்பட்ட மாதிரி முதல் கட்டத்தில் Auction இல் உடன்பட்டு பெறப்பட்ட தேயிலையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேநீர் மாதிரியை சுவைக்கும் போது அது கொண்டிருக்கும் சுவைக்கேற்ப தரப்படுத்தலாம். COLOURY , PLAIN , FAIR , THIN... இப்படி சுவையின் தன்மையை குறித்துக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். இதை எல்லாராலும் உணர முடியாது. இதற்கென பிரத்தியேகமான பயிற்சியும் அவசியம். ஆனால் எனக்கு தேவைப்பட்டது ஒரே ஒருநாள் தான். எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. இது கடவுளின் கொடுப்பினை என்று எண்ணிக்கொண்டேன். வேலையைத் தொடர்ந்தேன்.
நாளுக்கு நாள் தேயிலை வகைகளின் தன்மை, அவற்றின் உற்பத்தி, பரிசோதனைகள் என்று எக்கசெக்கமான அம்சங்களை தேடித்தேடி படித்துக்கொண்டேன். அவை மறக்க முடியாத நாட்கள்....
அனுபவங்கள்.

தேயிலை உடற்சுகாதாரத்தில் பங்களிப்பாற்றுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதயத்துக்கும் நன்மை பயக்கின்றது.

குறிப்பாக
Chrysanthemum Tea - இரவு பகல் பாராமல் மூளைக்கு அதிக வேலை கொடுப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea/Oolong Tea - உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுவோருக்கு, அசைவ உணவு உண்போருக்கு ஏற்றது

Green Tea - அதிக தூரம் பயணிப்போர் , மாசு நிறைந்த இடங்களில் பணியாற்றுவோருக்கு ஏற்றது

Green Tea + Flower Tea - அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வேலை பார்ப்போருக்கு ஏற்றது

Wu Loong Tea + Green Tea - அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளவர்களுக்கு உகந்தது.


எப்போதும் கணனியோடு காலம் தள்ளுவோருக்கு எந்த வகையான தேநீரும் உகந்தது.
எனவே எப்போது கணனிக்கு முன்னால் நீங்கள் அமர்ந்தாலும் ஒரு கோப்பை தேத்தண்ணியோடு உற்கார்ந்து வேலையைப்பாருங்க.

அப்போ நான் போய்ட்டு வாறன் ... என்ன எங்கேயா ?? தேத்தண்ணி கோப்பைய எடுத்துக் கொண்டு வரத்தான்...


'TAA TAA' sorry TEA TAA

- See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf