Wednesday, 18 February 2009

“ஒத்துக் கொள்ளு ... நீதான்.............

அண்மையில் வந்த மின்னஞ்சல் ..... நண்பர் 'அன்பு' அனுப்பியது..
நாட்டுநிலைமை பற்றி கண்டும் கேட்டும்... இதயம் ரணகளத்தில் ரத்தக்கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தபோது... இந்த வேதனைகளின் மத்தியிலும் இதழோரம் புன்னகை தவழவிட்ட ஒரு மின்னஞ்சல் என்று கூட சொல்லலாம் ....

முடிந்தால் வாசித்து நீங்களும்.. கொஞ்சம் முயற்சி செய்ங்க சிரிக்க ......


அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்....
அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்...
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது...
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்தது.
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை...
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை...
வேறு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு பிரித்தானியா.. கனடா....பிரான்ஸ்
இன்னும் பல..... ஒண்ணும் ....முடியவில்லை....
புலியின் அட்டகாசமும் குறையவில்லை

கடைசியாக எல்லா நாடுகளையும் ஒன்று கூட்டி புலி பிடிக்கும் மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டது
அதிலே அவமானம், எந்த‌ நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது....
எங்களைக் கேட்கலயே....... ஒரு குரல்...........
பார்த்தால் இலங்கை ஜனாதிபதி.....
நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட ...
இதப் பிடிக்க மாட்டமா... எகத்தாளமாக...
சரி, அனுமதி அளிக்கப்பட்டது....
இலங்கை முப்படைகளும் அமெரிக்கா காட்டுக்குள் போய்...
நாள்கள்.... மாதங்களாயிற்று... மாதங்கள்.... வருடங்களாயிற்று.
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை...
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து...
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத்திசை நோக்கி விரைந்தன...
அங்கே அவை கண்ட காட்சி.............
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்
"ஒத்துக் கொள்ளு ... நீதான் புலி"
உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?
அதற்கு பன்றி
"இது பரவாயில்லிங்க... எனக்கு ஒரே ஒரு வருசமாதான்... ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25 வருடமா இதைத்தான்
பண்றாங்க" என்றது சிரித்தவாறு..............


நம் நிலையை எண்ணி வேதனையோடு.... விடைபெறும் உள்ளம் ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

9 comments:

கலை - இராகலை said...

சிரிப்பைவிட இதைப்படிக்கும் போது வேதனை தான் அதிகம். யாதார்த்தமான உண்மை. காட்டில் மட்டுமல்ல ரோட்டிலும் தான்...!!!

கலை - இராகலை said...

word verification னை நீக்கமாட்டிங்களே??

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்....
சொல் சரிபார்ப்பின் உபயோகத்தை ப்லோக்கேரில் பார்த்து தெரிந்து கொண்டால் உங்களுக்கும் நன்மையே !

RAD MADHAV said...

//சிரிப்பைவிட இதைப்படிக்கும் போது வேதனை தான் அதிகம். யாதார்த்தமான உண்மை. காட்டில் மட்டுமல்ல ரோட்டிலும் தான்...!!!///

Repeated

Anonymous said...

Ammani

Kathai arumai athilum minjuvathu
vethanai.

KRN

Subbu said...

:((((

திவாகரன் said...
This comment has been removed by a blog administrator.
கலை - இராகலை said...

ஓ அப்படியா. அதுவும் சரிதான்.

Muniappan Pakkangal said...

It is true.

LinkWithin

Blog Widget by LinkWithin