Friday, 6 February 2009

'சாதனைத்தமிழன்' முரளிதரன் !


1992 ஆகஸ்ட் 28 ஆம்(பள்ளி இரண்டாம் தவணை விடுமுறை).... நான்காம் தரத்தில் படித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கிறது....காரணம் இலங்கை கிரிகெட் அணியில் ஒரு தமிழன்(இருபது வயசு இளம்புயல்) முதல் முதலாக களம் இறங்கப்போகிறான் என்ற செய்தி கேட்டதிலிருந்து, ஒரு ஆவலில் எதிர்பார்ப்பில் அவனை பார்ப்பதற்காகவே எனது குறும்புத்தனத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, சமத்துப்பிள்ளையாக தொலைக்காட்சிக்குமுன் அமர்ந்து கொண்டேன். எனக்கு மிகப்பிடித்த விசுக்கோத்தான 'டிக்கிரிசினா' பக்கத்தில் இருந்து என்னை பார்த்து சிரிக்க... அதை எடுத்து கொறித்தவண்ணமே ஆட்டத்தையும் பார்த்தேன்......
முதல் முதலாய் அந்த முத்தையும் பார்த்தேன்........
ஒரு தமிழன் எமது அணியில் விளையாடுகிறான் என்று நினைத்தபோது ரொம்ப பெருமையாக இருந்தது. இன்றும் கூடத்தான்....

(பந்து விசும்போது அவர் காட்டிய (வாயை சுழிச்சு) முகபாவம் அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. நன்கு அவதானித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்)

இவர் களம் இறங்கிய இந்த கன்னி(முதல்) டெஸ்ட்போட்டி, ஆஸ்திரேலியா அணிக்கெதிராக கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்று சமநிலையில் முடிவடைந்தது. இந்தப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளைக்கைப்பற்றிய முரளியின் முதல் விக்கெட் Craig McDermott இனுடையது.
அவரை முரளி lbw முறையில் ஆட்டமிழக்க செய்திருந்தார்.

இப்படி தன் கிரிகெட் பயணத்தை ஆரம்பித்து அவ்வப்போது பல சாதனைகளையும் நிலைநாட்டி, பெருமை தேடிதந்துகொண்டிருகும் முரளி லேட்டஸ்டாக செய்த சாதனை (328 போட்டிகளில் விளையாடி) 503 விக்கெட்டுகளை சாய்த்து பெற்றுள்ள நம்பர் : 1 ஸ்தானம்.
இதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் பாகிஸ்தான் நாட்டு 'வசிம் அக்ரம்' (356 போட்டிகளில் - 502 விக்கட்டுகள்)

இன்றைய தினம், கொழும்பு ஆர். பிரேமதாசா விளையாட்டு அரங்கில், இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற 4ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில்
Gautham Gambhir
இன் விக்கெட்டை சரித்து இந்த சாதனையை புரிந்துள்ள முத்தையா முரளிதரனுக்கு அனைத்து விளையாட்டு ரசிகர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள் !

சாதனைத்தமிழனே.....தொடரட்டும்..... உன் சாதனைப்பயணம் ! - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

6 comments:

SUBBU said...

னாந்தான் முதலா

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway! Well done! Please continue your services!
Write more about people,places..!!!

Arul said...

Muralitharan'in saadhanaihazh kaalaththaal azhiyaadhavai.....innum d varudangazh cricket vizhayaadinaal..1000 test wicket petra mudhalaavadhu veerar endra perumayayum thedi kozhvaar enbadhil evvidha aiyamum illai...

திவா said...

முரளியின் சாதனைகள் கிரிகட் வரலாற்றில் யாராலும் என்றும் முறையடிக்க முடியாதவையாகும். முரளியின் புகழ் கிரிகட் என்று ஒன்று உள்ளவரை என்றும் நிலைத்திருக்கும்.....

சாதனைத் தமிழனுக்கு மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்கள்..

Muniappan Pakkangal said...

Muralitharan is an achiever,he desrves it to his hard work.

priyamudanprabu said...

ஒரு பெண்ணின் வலைப்பதிவில் கிரிக்கெட் செய்தி
அடடா பரவாயில்லையே

இந்தியாவுக்கு எதிராக விளையாடினாலும் முரளியை எனக்கு மிகவும் பிடிக்கும்

யாராலும் மிஞ்ச முடியாத சாதனைகளை முரளி செய்ய வேண்டும்
வாழ்த்துக்கள்