Wednesday, 4 February 2009

பணமுண்டானால் இடமுண்டு !



இதென்ன
புதுமொழியா என கேட்போர் கொஞ்சம் விரிவாத்தான் படியுங்க ....!



காசே தான் கடவுளப்பா..... அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா ......

யதார்த்தத்துடன் ஒன்றிப்போன இந்த அர்த்தம் பொதிந்த வரிகள்.... எத்தனை தூரம் உலகத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது .... உங்களுக்கே தெரியும் ..

பணத்தை வைத்துத்தான் எந்த ஒரு விடயமும் முன்னெடுக்கப்படுகிறது ....
(அதனால்தானே எல்லோரும் வேலைக்குப்போய் சம்பாதிக்கிறோம்..... )

அளவாய் சம்பாதித்து வாழும் போது வாழ்க்கை வசந்தமாகிறது ....
அதுவே பேராசையாக மாறும்போது வஞ்சம் தொடங்குகிறது !

ஒருவன் எந்தளவுக்கு சமூகத்தில் மதிக்கப்படுகிறான் என்பது பணத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது
(கல்வியறிவு, சமூகசேவை ....இவை எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அத்தோடு இவற்றுக்கான அளவுகோலும் இல்லை)

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" அப்டீன்னு சும்மாவா சொன்னாங்க

'அப்ப பணத்தை வைத்து என்னத்த பெருசா அப்படி தீர்மானிக்கிறாங்க' ?....
இப்படி கேட்போருக்கான விடையை நான் ஒன்னும் புதுசா கண்டுபிடிச்சு சொல்லப்போறதில்ல....
இருக்கிற ஒரு விஷயத்த ஞாபகப்படுத்துவது மட்டுமே இந்த அம்மணியோட நோக்கம் !

கடந்த வருடம் 2008 பெப்ருவரி 11ஆம் திகதி (அதாவது உலகப்பொருளாதார நெருக்கடிக்கு முன்னர்) வெளியான பணக்காரப்பட்டியலில்...... வரிசையாக நெஞ்ச நிமிர்த்தி நின்றவர்களில் முதல் ஐந்து பேர் யார் யார்னு யாராவது கேட்டா சொல்லுவீங்களா ??

சொல்லக்கூடியவங்க இத்தோட இந்த பதிவை வாசிப்பதை நிறுத்திட்டு உங்களோட அலுவல பாருங்க.......

ம்ம்... ஹும்..... தெரியாதே அப்டீன்னு முகத்தை அப்பாவியா வச்சிட்டிருப்பவங்க....உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு உற்சாகமா தொடருங்க....

1) Warren Buffett - 78 வயதில் 62 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரர். Berkshire Hathaway என்ற காப்புறுதி நிறுவனத்தின் வாயிலாக தன் வருமானத்தை பெருக்கிக்கொண்டவர்.
2) Carlos Slim Helu - 68 வயதில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். மெக்சிகோ நாட்டைச்சேர்ந்த இவர் Telmex, América Móvil போன்ற தொலைதொடர்புடன் சம்பந்தப்பட்ட நிறுவங்களை நிறுவி, இவற்றின் வாயிலாக வருமானம் ஈட்டுகிறார்.
3) Bill Gates - உங்களுக்கு மிகப்பரிச்சயமானவர். Microsoft நிறுவன அதிபதி.
52 வயதில் 58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக இருப்பதோடு, தொடர்ச்சியாக 15 வருடங்கள் இந்த பணக்காரப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தவர். ஆனால் 2007இன் பின் வீழ்ச்சி கண்டிருந்தாலும், இவருக்குத்தான் மக்களின் இதயங்களில் முதல்இடம்.
4) Lakshmi Mittal - இந்தியரான இவர், 57 வயதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக வலம் வருபவர். வருமான வழி - Arcelor Mittal என்ற உருக்கு உலோக நிறுவனம் .

5) Mukesh Ambani - பலதரப்பட்ட வியாபாரப்பிரிவுகளை உள்ளடக்கிய நிறுவனம் Reliance Industries. இதன் மூலமாக ஈட்டப்பட்ட வருமானத்தின் அடிப்படையில், அதாவது சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாக தன் 50ஆவது வயதில் திகழ்ந்துகொண்டிருக்கும் இவரும் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் கடந்த ஆண்டுக்குரிய கணிப்பு. இந்த ஆண்டு நிலை மாறலாம். அந்த மாற்றம் வரும்வரை காலத்துடன் சேர்ந்தே காத்திருப்போம்...00 இன் முதல் ஐந்து பணக்காரர்களை ஞாபகத்தில் நிலை நிறுத்திக்கொண்டே !

அதுசரி .....
உங்களில் யாராச்சும் முயற்சி பண்ணலாமே இந்த பட்டியலில் இடம்பிடிக்க....
அச்சச்சோ நான் ஜோக் அடிக்கல ....உண்மையாத்தான் கேட்கிறேன்

'மனமுண்டானால் இடமுண்டு' (பழமொழி பொய்க்காது )

அடுத்து வித்தியாசமா எதைப்பற்றி பதிவிடலாம் என்ற யோசனையோடு.....
நன்றி .... வணக்கம்..... - See more at: http://www.helperblogger.com/2012/05/add-facebook-like-button-to-blogger.html#sthash.Iax6Jsq8.dpuf

4 comments:

Arul said...

manam irundhaal nichchayam idam undu..muyatchi udayaar ihazhchi adayaar endru kooda sollalaam..aanal ennoda anubavathin padi..panam kuraivaaha irundha naatkazhil sandhosham adhigamaaaga irundadhu aanal indru kai niraya kaasu kidaikkiradhu..kidaikkira kaasu enga pogudhu endre theriyavillai aththudan andru irundha sandhosham indru irukkaa endraal illai enbadhu thaan badhil. Vaazhvadhatku konjam panam irundhaal podhum..vaazhkaye panam aaha maari vida koodaadhu

kuma36 said...

இவுங்க ஐந்து பேருமே ஆப் செஞ்சரியை தாண்டியவர்கள் அப்படினா இப்ப முயற்சி செய்தால் இன்னும் 25 வருஷத்திற்க்கு பிறகு அந்த லிஸ்டில் என் பெயறையும் போட்டு ஒரு பதிவு போடுவிங்க தானே டயானா???

ம்ம்... ஹும்..... தெரியாதே அப்டீன்னு முகத்தை அப்பாவியா வச்சிட்டிருப்பவங்க....உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு உற்சாகமா தொடருங்க....

பதிவுக்கு நன்றி

திவா said...

//அதுசரி .....
உங்களில் யாராச்சும் முயற்சி பண்ணலாமே இந்த பட்டியலில் இடம்பிடிக்க....//

இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ள அனைவரும் தங்களது வங்கிக்கணக்கினை உயர்த்துகிறார்களே தவிர மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதாக தெரியவில்லை..
ஒரு மனிதன் வாழும்போது அவனைப்பற்றி உலகம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் வாழ்ந்துமுடித்த பிறகு உலகம் எம்மைப்பற்றி பேசவேண்டும் அதுதான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.

Muniappan Pakkangal said...

panamundaanaal idamunduu,it is always there,but as u have asked to try to b in the list,it requires basic support,which is lacking with everyone.